29. ஸலவாத் கூறினால் தமது இருப்பிடம்மான சொர்க்கத்தை பார்க்காமல் மரணிக்க மாட்டார்
من صلى علي في يوم [الجمعة] ألف مرة ؛ لم يمت حتى يرى مقعده من الجنة.
என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி).
இந்த செய்தி அல்அமாலி பாகம் 1 பக் 172, அத்தர்கீப் பாகம் 1 பக் 22 மற்றும் இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் அதிய்யா பலவீனமானவர் ஆவார்.
நஸாயீ, அபுல் வலீத் உள்ளிட்ட அறிஞர்கள் இவர் பலவீனமானவர். இவரை ஆதாரம் கொள்ளக் கூடாது என்று விமர்சித்துள்ளார்கள்.
பார்க்க அல்ஜரஹ் வத்தஃதீல் பாக 3 பக் 125
அபூஹாதம் அவர்கள் இவர் உறுதியானவர் அல்ல; எனவே இவரை ஆதாரம் கொள்ளக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.
அல்லுஆஃபாஉ வல்மத்ரூகீன் 1 228
இமாம் புகாரி மற்றும் உகைலீ ஆகியோர் தமது பலவீனமானவர்கள் எனும் (நூலில்) பட்டியலில் இவரைக் கொண்டு வந்துள்ளார்கள்.
மேலும் இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் அத்தீனவரிய்யு என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர், பலவீனமானவர் என்றும், இவர் உறுதியானவர் அல்ல பல தவறான செய்திகளைக் கொண்டு வந்துள்ளார் என்றும் இமாம் தஹபீ குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தையே இப்னு ஹஜர் அவர்களும் கூறியுள்ளார்கள்.
மீஸானுல் இஃதிதால் பாக 3 பக் 629, லிஸானுல் மீஸான் பாகம் 7 பக் 306
இமாம் உஸ்பஹானீ அவர்களின் அத்தர்கீப் வத்தர்ஹீப் பாகம் 1 பக் 504 லிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட பலவீனமான அறிவிப்பாளர் ஹகம் பின் அதிய்யா இடம் பெறுவதுடன் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஸினான் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.
No comments:
Post a Comment