மக்கா வெற்றி
ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு மதீனா முஸ்லிம்களுக்கும்
மக்கத்து காஃபிர்களுக்கும் இடையே நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்ûயில் பனூபக்ர் என்னும்
குலத்தார் மக்கத்துக் காஃபிர்களுடனும், பனூ குஸôஆ முஸ்லிம்களுடனும் இணைந்து
கொண்டனர். இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது.
இச்சமயத்தில்
மக்கத்துக் காஃபிர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறி தங்களின் குழுவிலுள்ள பனூபக்ர்
குலத்தாருக்கு, பனூ குஸஆ குலத்தாருக்கு எதிராக
ஆயுத உதவி செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களை தாக்கவும் செய்தனர். உடனடியாக பனூ குஸஆ குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம்
உதவி கேட்டு வந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா இறைமறுப்பாளர்களை தட்டிக் கேட்க தங்கள்
தோழர்களை தயார்படுத்தினார்கள். இந்த செய்தியை ஹாத்திப் பின் அபீ பல்தா(ரலி) அவர்கள், மக்கத்துக் காஃபிர்களுக்குத்
தெரிவிக்க வேண்டுமென்பதற்காக கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை முûஸனா குலத்தைச் சேர்ந்த
ஒரு பெண்ணிடம் கொடுத்து மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்குத்
தெரிய வந்தது. இதனால் அந்தப் பெண் இடை மறிக்கப்பட்டாள். பிறகு நபி(ஸல்) அவர்களும் தோழர்களும்
மக்கா புறப்பட்டனர்.
மக்கா வெற்றிக்கான போர் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமளான் மாதம் கி. பி. 630 இல் நடைபெற்றது. நபியவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் மக்கா நோக்கி புறப்பட்டார்கள்.
ரமலான் மாதம் என்ற காரணத்தினால் அனைவரும் நோன்பு நோற்றிருந்தனர்.
மக்காவிற்கு செல்லும்
வழியில் அல் ஹதீக் என்னும் இடத்தில் நோன்பை விட்ட நபி(ஸல்) அவர்கள், பிறகு அந்த மாதம் முடியும்
வரை நோன்பை வைக்கவில்லை. இதிலே நபியவர்களுடன் பல குலத்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.
அப்போது, நபியவர்களுக்கு மிக சுலபமான
முறையில் மக்கா வெற்றி கிடைத்தது. எதிர்ப்புகள் ஒன்றும் இருக்கவில்லை. பெரும்பாலும்
மக்காவாசிகள் அனைவர்களும் பயந்தே இருந்தனர்.
இது பற்றிய விளக்கம் அறிய பார்க்க (புகாரீ 4272, 1948, 1944, 4279, 3983, 4274, 3007, 4286,
4280, 4290, 3171, 4287, 2988, 4305, 4306, 4307, 4308, 6641, 4302, 2434, 2432,
2236, 1176, 1175, 4298, 4299)
No comments:
Post a Comment