Wednesday, November 23, 2016

கைபர் போர்



கைபர் போர்


கைபர் என்பது மதீனாவிற்கும் சிரியாவிற்குமிடையே உள்ள நகரமாகும். இப்போர் கி.பி. 628. ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் முஹர்ரம் மாத இறுதியில் இறைநம்பிக்கையாளர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நடந்த சண்டையாகும்.

 கைபர் போர் வரக் காரணம்

கைபர் பகுதியில் யூதர்கள், கோட்டைகளும் பேரீச்சை மரங்களும் கொண்ட செல்வந்தர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மதீனாவில் வாழும் யூதர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு கடுமையான தொல்லைகள் கொடுத்து வந்தனர். அது மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் மக்கத்துக் காஃபிர்களுக்கு உதவி புரிந்து வந்தனர். இதனால் நபி(ஸல்) அவர்கள் 1500க்கும் அதிகமான முஸ்லிம்களுடன் புறப்பட்டு கைபரை முற்றுகையிட்டார்கள். 

அங்கே 10க்கும் அதிகமான நாட்கள் தங்கி இறுதியில் ஸஃபர் மாதம் அதைக் கைப்பற்றினர். நபி(ஸல்) அவர்களுக்கு கைபர் கோட்டைகளும் பேரிச்சந் தோட்டங்களும் கிடைத்தன. இப்போரில் முஸ்லிம்கள் 15 பேர் வீரமரணம் அடைந்தனர். யூதர்கள் 93 பேர் கொலை செய்யப்பட்டனர். இதை நோக்கமாக வைத்துத்தான் யூதப் பெண்மணி ஒருத்தி நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த இறைச்சி கொடுத்தாள்.


இதைப் பற்றி முழு விபரம் அறிய (பார்க்க புகாரீ 2617, 2618, 3153, 4202,4204, 4210, 4213, 4212, 2617, 2618, 3152, 3153, 4196, 209, 4210, 4207, 4214, 4216, 2328, 2329, 2331, 2338, 2499, 2720, 3152,4248, 4211, 4242)

No comments:

Post a Comment