4.தொழுகைக்காக காத்திருத்தல்
ஐவேளைத் தொழுகைக்காக விரைவாக சென்று அதை நிறைவேற்ற காத்திருந்தால் அந்த நேரத்தில் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள்.
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال الملائكة تصلي
على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث تقول اللهم اغفر له اللهم ارحمه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.
நூல் : புகாரி (445)
இவ்வாறு முறையாக உளூ செய்வதினாலும் தொழுவதினாலும் நமது சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது வானவர்களே அல்லாஹ்விடம் நமக்காக துஆ செய்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
No comments:
Post a Comment