27. பெருந்தன்மை
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال رحم - ص 731 - الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا
اقتضى
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
வாங்கும் பொழுதும் விற்கும்
பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருநதன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ்
அருள் புரிவானாக!'
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 2076 ) திர்மிதீ ( 1320 ) இப்னு
மாஜா ( 2203 ) அஹ்மத் ( 14248 )
விளக்கம்
:
மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கின்றான்.
அப்போது பல விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் நம் நிலையிலேயே பிடிவாதமாக இருக்கிறோம்.
குறிப்பாக விற்பனைசெய்யும் போதும் வாங்கும் போதும் விட்டுக் கொடுக்காத நிலையை மேற்கொள்கிறோம்.
ஆனால் இது போன்ற நிலைகளில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் இறைவனின் அருளைப்
பெறலாம் . நம்மிடம் நியாயம் இருந்தாலும் போகட்டும் என்று பொருந்தன்மையோடு விட்டுக்
கொடுப்பது இறையருளைப் பெற்றுத் தரும்.
நமக்குத் தர வேண்டிய பொருளைக்
கேட்டு வழக்காடும் போது கொஞ்சம் குறைவாகத் தருவதாகக் கூறினாலும் சரி என்று பெருந்தன்மையோடு
விட்டுக் கொடுக்கலாம் இதனால் இறைவனின் அன்பையும் அருளையும் நாம் பெற முடியும். ஆனால்
மார்க்கம் தொடர்பான விஷயங்களில் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.
ஏனெனில் இது நம் விவகாரம்
கிடையாது அல்லாஹ்வின் மார்க்கட்த்ஹில் சமரசம் செய்வதும் விட்டுக் கொடுப்பதும் கூடாது
எனவே மார்க்கம் தொடர்பான விஷயங்கள் அல்லாத மற்ற விஷயங்களில் பெருந்தன்மையோடு விட்டுக்
கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment