26. அருள் நிறைந்த வியாபாரம்
سمعت حكيم بن حزام رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال البيعان بالخيار ما لم يتفرقا فإن
صدقا وبينا بورك لهما في بيعهما وإن كذبا وكتما محقت بركة بيعهما
'விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை (முறித்துக்
கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த்
தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு பரக்கத் செய்யப்படும். அவ்விருவரும்
பொய் கூறி(எதையேனும்) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் பரக்கத் நீக்கப்படும்'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என ஹகீம்
இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 2110 ) முஸ்லிம் ( 1532 ) திர்மிதீ ( 1246
) நஸாயீ ( 4457 ) அபூதாவூத் ( 3459 ) அஹ்மத் ( 14890 ) தாரமீ ( 2547 )
விளக்கம் :
மனிதனின் வாழ்க்கை செழிப்புக்கு வியாபாரம் முக்கியமானதாகும்.
இந்த வியாபாரத்தின் மூலம் செல்வத்தை ஈட்டி நல்ல வசதியுடன் நம் வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள முடியும். இதனால் இதில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர்.
ஆனால்
இந்த இயாபாரத்தில் இலாபத்தை மட்டும் மனதில் கொண்டு பொய், புரட்டி , பித்தலாட்டம் என்று
அனைத்து முறைகேடுகளையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி கொள்ளை இலாபம் அடைகின்றனர்.
இது
போன்ற பொய்யும் புரட்டும் செய்து குறைகளை மறைத்துச் செய்யும் வியாபாரத்தில் இறைவனின்
மறைமுகமான அருள்வளம் நீக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பொய் சொல்லாமல் செய்யும் வியாபாரத்தில்
இறைவனின் அருள்வளம் கண்டிப்பாகக் கிடைக்கும் .
உலக இலாபத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல்
படைத்தவனின் அருள் வளத்தைக் கவனத்தில் கொண்டு நேர்மையான நியாயமான வியாபாரத்தைச் செய்ய
வேண்டும்.
No comments:
Post a Comment