Thursday, November 10, 2016

அஹ்மத் மற்றும் மாலிக் இமாமின் சத்தியக் கருத்துக்கள்!


குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும்:
- இமாம் அஹ்மத் மற்றும் மாலிக்கின் கூற்று!
இமாம் மாலிக் கூறியவை:
وقال الإمام مالك - رحمه الله -: (إنما أنا بشر أخطيء وأصيب فانظروا في رأيي، فكل ما وافق الكتاب والسنة فخذوه ، وكل ما لم يوافق الكتاب والسنة فاتركوه ) ( مواهب الجليل في شرح مختصر الشيخ خليل - (7 / 392)
இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நான் மனிதன்தான். தவறாகவும் கூறுவேன், சரியாகவும் கூறுவேன். என்னுடைய கருத்தை ஆய்வுசெய்து பாருங்கள். குர்ஆன், சுன்னாவிற்கு ஒத்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.  குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான அனைத்தையும் விட்டு விடுங்கள் 
(மவாஹிபுல் ஜலீல் பாகம் : 7 பக்கம் : 392)
قال الإمام مالك والإمام أحمد: ليس أحد بعد النبي صلى الله عليه وسلم إلا ويؤخذ من قوله ويترك إلا النبي صلى الله عليه وسلم  (الحجج السلفية في الرد على آراء ابن فرحان المالكي البدعية - (1 / 41)
இமாம் மாலிக், இமாம் அஹ்மத் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒருவருடைய கூற்றை ஏற்று பின்பற்றப்படுவதும், ஒருவருடைய  கூற்றை ஏற்று தவிர்ந்து கொள்வதும் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை
(அல் ஹுஜஜ் ஸலஃபிய்யா பாகம் : 1 பக்கம் 41) 
இமாம் அஹ்மத் அவர்களின் கூற்று:
سمعت أحمد بن حنبل يقول رأي الأوزاعي ورأي مالك ورأي أبي حنيفة كله رأي وهو عندي سواء وإنما الحجة في الآثار  (جامع بيان العلم وفضله) - (2 / 149)
இமாம் அஹ்மது கூறினார்கள் : அவ்ஸாயீயின் கருத்து, மாலிக்கின் கருத்து, அபூ ஹனீஃபாவின் கருத்து. எல்லாமே கருத்துதான். என்னிடத்தில் அனைத்தும் சமம்தான். நிச்சயமாக ஆதாரம் என்பது ஹதீஸ்களில்தான் இருக்கிறது.
(ஜாமிவு பயானில் இல்ம் பாகம் : 2 பக்கம் : 149)
ه أحمد بن حنبل رحمة الله يقول : ' من رد  حديث رسول الله  فهو على شفا هلكة '(الحجة في بيان المحجة - (1 / 207)
இமாம் அஹ்மத் கூறினார்கள் : யார் நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸை மறுத்து விட்டானோ அவன் அழிவின் விழிம்பின் மீதிருக்கின்றான்.
(அல்ஹுஜ்ஜா பாகம் : 1 பக்கம் :207)

"لا تقلدني ولا تقلد مالكا ولا الثوري ولا الأوزاعي وخذ من حيث أخذوا"  (إعلام الموقعين عن رب العالمين - (2 / 226)
என்னை கண்மூடிப் பின்பற்றாதே. மாலிக்கையும் கண்மூடிப்பின்பற்றாதே. ஸவ்ரியையும் பின்பற்றாதே. அவ்ஸாயியையும் பின்பற்றாதே. அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அங்கிருந்தே நீயும் எடு.
(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் : 2 பக்கம் : 226)
மத்ஹபு வெறி பிடித்த போலி உலமாக்களுக்கு அவர்கள் எந்த மத்ஹபுகளை பின்பற்றுவதாகச் சொல்கின்றார்களோ அந்தந்த மத்ஹபு இமாம்களே மரண அடி கொடுக்கும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளனர். இதுதான் சத்தியம். இந்த சத்தியக்கருத்துக்களை விட்டுவிட்டு அசத்தியத்தின் பக்கம் மக்களை அழைத்து தாங்களும் வழிகெட்டு, மக்களையும் வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் போலி உலமாக்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment