13 . முஸாஃபஹா கொடுத்த கையை அந்த உரை முடியும் வரை எடுக்க கூடாது
3706حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أَبِي يَحْيَى الطَّوِيلِ رَجُلٌ مِنْ أَهْلُ الْكُوفَةِ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ رواه إبن ماجه
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் சந்தித்து பேசினால் அந்த நபர் திரும்பாதவரை நபி (ஸல்) அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். அவர்களிடம் கைகொடுத்தால் அந்த நபர் அவராகக் கையை விடும் வரை நபி (ஸல்) அவர்கள் தன் கையை எடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் முட்டுக்காலை மடக்கி அமர்பவர் யாரையும் பார்க்கவே முடியாது.
நூல் : இப்னு மாஜா (3706)
இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ என்பவர் அறிவிக்கின்றார்.
இவரைப் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், அபூசுர்ஆ, நஸாயீ, அலீ பின் மதீனீ ,இஜ்லீ, அலீ இப்னு அதீ, இப்னு ஹிப்பான் மற்றும் பலர் கூறியுள்ளனர்.
மேலும் இந்த ஸைத் என்பாரிடமிருந்து இந்தச் செய்தியை அபூ யஹ்யா என்பவர் அறிவிக்கின்றார். இவரும் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், இப்னு ஹஜர் ஆகியோர் கூறியுள்ளனர்.
எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.
No comments:
Post a Comment