Tuesday, November 15, 2016

முஸாஃபஹா செய்து விட்டு பிரார்த்தித்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்



14 . முஸாஃபஹா செய்து விட்டு பிரார்த்தித்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்


17854حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو بَلْجٍ يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْحَكَمِ عَلِيٌّ الْبَصْرِيُّ عَن أَبِي بَحْرٍ عَن الْبَرَاءِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ ثُمَّ حَمِدَ اللَّهَ تَفَرَّقَا لَيْسَ بَيْنَهُمَا خَطِيئَةٌ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

முஸ்லிம்களில் இருவர் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தன் தோழரின் கையை பிடித்து அல்லாஹ்வை புகழ்வாரானால் அவ்விருவரும் தங்களிடத்தில் பாவம் இல்லாத நிலையிலேயே பிரிவார்கள்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : அஹ்மது (17854)
இந்தச் செய்தியை பராஉ (ரலி) அவர்களிடமிருந்து அபூ பஹ்ர் என்பவர் அறிவிக்கின்றார். 
இவர் யார்? இவருடைய நம்பகத்தன்மை எத்தகையது? ஆகிய விபரங்கள் எதையும் இவரைப் பற்றி எந்த அறிஞரும் கூறவில்லை. 
இதன் காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

No comments:

Post a Comment