Sunday, November 20, 2016

பெருநாள் அன்று நோன்பு



34 . பெருநாள் அன்று நோன்பு


المجروحين - 2 / 265‏ وبإسناده(محمد بن الحارث الحارثى قال: حدثنى محمد بن عبد الرحمن البيلمانى مولى ابن عمر عن أبيه عن ابن عمر به) قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من صام صبيحة ‏يوم الفطر فكأنما صام الدهر ".

யார் பெருநாள் காலை நோன்பு நோற்பாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி),
நூல்: அல்மஜ்ரூீன், பாகம்: 2, பக்கம்: 265.
இச்செய்தியில் இடம்பெறும் முஹ்ம்மத் பின் அல் ஹாரிஸ் என்பவர் பலவீனமானவராவார்.

الضعفاء للعقيلي - (4 / 48‏( سَمِعْتُ يحيى يقول محمد بن الحارث الحارثي بصري ليس بشيء.‏

முஹ்ம்மத் பின் அல் ஹாரிஸ் என்பவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று யஹ்ய்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: அல்லுஃபா, பாகம்: 4, பக்கம்: 48.

ميزان الاعتدال - (3 / 504‏(قال ابن عدى: عامة حديثه لا يتابع عليه، وتركه أبو زرعة.

இவருடைய பெரும்பாலான செய்திகளை வலுப்படுத்தும் செய்திகள் இல்லை. இவரை அபூஸுர்ஆ அவர்கள் விடப்பட வேண்டியவர் என்று கூறியுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 3, பக்கம் : 504.
மேலும் இச்செய்தியில் இடம்பெறும் இப்னுல் பைலமானீ என்பவரும் பலவீனமானவராவார்.

المجروحين - (1 / 318)‏
لان ابن البيلمانى ليس في الحديث بشئ

இப்னுல் பைலமானீ என்பவர் தீஸ் துறையில் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுகிறார்கள்
நூல்: அல்மஜ்ரூீன், பாகம்: 1, பக்கம் : 318.

الكامل في ضعفاء الرجال - (7 / 384)‏ قال البخاري مُحَمد بن عَبد الرحمن بن البيلماني ، عن أبيه منكر الحديث وكان الحميدي يتكلم فيه.وقال النسائي مُحَمد بن عَبد الرحمن بن البيلماني ، عن ‏أبيه منكر الحديث

இப்னுல் பைலமானீ என்பவர் தம் தந்தை வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்று புகாரி மற்றும் நஸாயீ ஆகியோர் கூறுகிறார்கள். மேலும் இமாம் ஹுமைதீ இவரை விமர்சித்துள்ளதாகவும் புகாரி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: அல்காமில், பாகம்: 7, பக்கம்: 384

மேலும் பின்வரும் ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கும் முரணாகவும் உள்ளது.

‏1991- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا وُهَيْبٌ ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي سَعِيدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه ‏وسلم عَنْ صَوْمِ يَوْمِ الْفِطْرِ وَالنَّحْرِ وَعَنِ الصَّمَّاءِ ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ. رواه البخاري

அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு புஜங்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக் கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக் கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும், சுப்புஹு பிறகும், அஸ்ர் தொழுகைக்குப் பிறகும் தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்!      
  நூல்: புகாரி (1991)

No comments:

Post a Comment