بسم الله الرحمن
الرحيم
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கீழே
தொகுத்துள்ளோம். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில்
நடந்த சில முக்கிய நிகழ்வுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் படிப்பதின் மூலம்
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஓரளவு மன நிறைவாக அறிந்து கொள்ள முடியும்.
பெயர் :
நபி(ஸல்) அவர்களின் இயற்பெயர், முஹம்மத். இத்துடன் மேலும்
நான்கு பெயர்களும் அவர்களுக்கு உண்டு. அவை :
1.அஹ்மது 2.அல்மாஹி 3.அல்ஹாஷிர் 4. அல்ஆக்கிப். என்பனவாகும்.
(புகாரீ 3532)
தந்தை பெயர் : அப்துல்லாஹ்.
தாயார் பெயர் : ஆமினா.
பாட்டனார் பெயர் : அப்துல்முத்தலிப்.
இவரது வம்சாவழித்தொடர் பல தலைமுறைகளைக் கடந்து நபி இஸ்மாயில் (அலை) அவர்களைச் சென்றடைகிறது, இவரது குலத்தின் பெயர்
குறைஷ். (ஆதாரம் : தபக்காத் இப்னு ஸஅத், திர்மிதீ)
பிறப்பு
நபி(ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம்
திங்கட்கிழமை கி.பி 571 ல் சவூதி அரேபியா நாட்டில், மக்கா என்ற ஊரில் பிறந்தார்கள்.
(ஆதாரம் : பிதாயா வன்நிகாயா, முஸ்லிம்,) நபி(ஸல்) அவர்கள் பிறந்த
தேதி 9,10,11,12,18 என்று பல தகவல்கள் உள்ளன.
அவற்றில் 12 ஆம் தேதியில் பிறந்தார்கள் என்பதே பிரபல்யமான கருத்தாகும்.
வளர்ப்பு
நபி(ஸல்) அவர்கள் தங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தகப்பனார் அப்துல்லாஹ் இறந்துவிட்டார். (ஆதாரம்
: தபக்காத் இப்னு ஸஅத்) அதனால் அவரது பாட்டனார் அப்துல்முத்தலிப் அவர்களின் பராமரிப்பில்
வாழ்ந்து வந்தார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் தாயார் முதன்முதலில் பாலூட்டினார்கள் அவர்களுக்குப்
பிறகு அபூலஹபின் பணிப்பெண் சுவைபா பாலூட்டினார். (ஆதாரம் புகாரீ 5101) அன்றைய காலங்களில் நகரத்தின்
பிரமுகரர்களும் வசதி படைத்தவர்களும் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டிடவும் அவர்களை வளர்த்திடவும்
கிராமங்களிலுள்ள சில பெண்மணிகளிடம் இருந்துள்ளனர்.
இவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கு ஹலீமா
ஸஅதிய்யா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள். (தப்ரானீ) நபி(ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்தபோது
அவர்களுடைய தாயார் இறந்துவிட்டார். (ஆதாரம் : இப்னு இஸ்ஹாக்) அதன் பிறகு உம்மு அய்மன்
(ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்கள். (ஆதாரம் :
அல்இஸ்தீஆப்)
வாணிபம்
நபி(ஸல்) அவர்கள் வாலிபப் பருவத்தை அடைந்தவுடன்
வாணிபம் செய்ய விரும்பினார்கள். ஆகையால் வாணிபம் செய்ய தன் பெரிய தந்தை அபூதாலிபுடன் சிரியாவிற்குச் சென்றார்கள்.
அவர்களின் நன்னடத்தையும்
நற்பண்புகளும் பல திசைகளிலும் பரவத் தெடங்கியது. மக்கள் நபி(ஸல்) அவர்களை நம்பிக்கைக்குரியவராகவும் நாணையமானவராகவும் கருதினர்.
(ஆதாரம் : முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
திருமணம்
நபி(ஸல்) அவர்கள் அன்னை
கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களை முதன் முதலில் திருமணம் செய்தார்கள். அப்பொழுது
நபி(ஸல்) அவர்களுக்கு 25 வயது. அன்னை கதீஜா பின்த்
குவைலித் (ரலி) அவர்களுக்கு 40 வயது.
அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களை முதன்முதலில் அத்தீக் பின் ஆóத் என்பவரையும் அவருக்குபின்
அபூ ஹலாலா என்பவரையும் மணந்துள்ளார்கள்.
அவ்விருவரும்
ஒருவர் பின் ஒருவராக இறந்த பின்பே நபி(ஸல்) அவர்களை மணந்தார்கள். அன்னை கதீஜா பின்த்
குவைலித்(ரலி) அரபுலகில் மிகப்பெரும் செல்வச் சீமாட்டியாகத் திகழ்ந்தார்கள். இவர்களை
மணந்த பிறகு நபியவர்களுக்கு சிறப்புமிக்க வாழ்க்கை கிட்டியது. ஆனால் அந்த செல்வங்களையும்
நல்வழியில் செலுசெய்தார்கள். பிறகு நபி(ஸல்)
அவர்கள் 49 வது வயதை அடைந்தபோது அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி) தனது 64 வது வயதில் இறையடி சேர்ந்தார்கள்.
(ஆதாரம் : ஃபத்ஹுல் பாரீ)
அதன் பிறகு நபியவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் மகளான ஆóஷா(ரலி) அவர்களை மணந்தார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு வயது ஆறு. ஆயிஷா(ரலி) அவர்களின் 9வது வயதில் நபியவர்களுடன் மதீனாவில் உறவு கொண்டார்கள். பின்னர் ஸவ்தா(ரலி) அவர்களை
மணந்தார்கள். ஆóஷா (ரலி) அவர்களுக்குப்
பிறகு நபியவர்கள் உமர்(ரலி) அவர்களுடைய மகளான
ஹஃப்ஸô(ரலி) மணந்தார்கள்.
இவர்கள் தவிர நபி (ஸல்)
அவர்களுக்கு வேறு மனைவியர்களும் இருந்துள்ளனர். அவர்கள் : ஸனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி)
, ஸனப் பின்த் குஸமா(ரலி), உம்மு ஸலமா(ரலி), ஜுவைரிய்யா(ரலி), உம்மு ஹபீபா (ரலி), ஸஃபிய்யா பின்த் ஹுயய்(ரலி), மைமூனா (ரலி). மாரியத்துல்
கிப்திய்யா (ரலி) ஆக மொத்தம் 12 திருமணங்களை நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். (ஆதாரம்
: தபக்காத் இப்னு ஸஅத் .)
நபி(ஸல்) அவர்களின் குழந்தைகள்
நபி(ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா பின்த் குவைலித்(ரலி) அவர்கள் மூலம் ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸம், ஃபாத்திமா என்ற நான்கு
பெண் குழந்தைகளும் தாஹிர்,
தய்யிப், காஸிம் என்ற மூன்று ஆண்
குழந்தைகளும் பிறந்தன. நபி(ஸல்) அவர்களுக்குப் பிறந்த 3 ஆண் குழந்தைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படி சிறுவயதிலேயே இறந்துவிட்டன. ஆண் குழந்தைகள்
எத்தனை என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.
(ஆதாரம் ஃபத்ஹுல்பாரி)
நபி(ஸல்) அவர்களுக்கும் அன்னை மாரியத்துல் கிப்திய்யா(ரலி) அவர்கள் மூலம் இப்ராஹீம்
என்ற ஒரு
ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது.
(புகாரீ 1303)
No comments:
Post a Comment