நபித்துவத்தின் துவக்கம்
நபி(ஸல்) அவர்கள் சுமார்
நாற்பது வயதை எட்டிய நேரத்தில் தனிமையில் அல்லாஹ்வை
வணங்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்றப்பட்டு கட்டுச்சாதங்களை எடுத்துச்சென்று மக்காவிற்கு
அருகில் இருந்த ஹிரா என்ற குகைóல் பல நாட்கள் தங்கி இறைவனை வணங்கிக்கொண்டிருந்தார்கள். அன்று ஒரு நாள், அது ரமளான் மாதம், அக்குகைóல் நபி(ஸல்) அவர்களிடம்
வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து 96அத்தியாயம், முதல் வசனத்திலிருந்து ஐந்தாம் வசனம் வரை ஓதுமாறு கட்டளையிட்டார்கள்.
1. (முஹம்மதே!) படைத்த உமது
இறைவனின் பெயரால் ஓதுவீராக!
2. அவன் மனிதனை கருவுற்ற சினை
முட்டையிலிருந்து படைத்தான்.
3. ஓதுவீராக! உமது இறைவன்
கண்ணியமானவன்.
4. அவனே எழுது கோலால் கற்றுத்
தந்தான்.
5. அறியாதவற்றை மனிதனுக்குக்
கற்றுத் தந்தான்.
(அல்குர்ஆன் 96 : 1 முதல் 5)
இதைக் கண்ட நபியவர்கள் பயந்தவர்களாக அன்னை கதீஜா பின்த் குவைலித்(ரலி) அவர்களிடம்
ஓடோடி வந்து நடந்ததைக் கூறினார்கள்.
அதற்கு
அன்னை கதீஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு
ஆறுதல் கூறி வரக்கா பின் நவ்ஃபலிடம் அழைத்துச்சென்றார்கள். (வரக்கா இப்னு நவ்ஃபல் என்பவர் வயது முதிர்ந்த மார்க்கப்பற்று
மிகுந்த கிருஸ்துவ அறிஞராவார்.) வரக்கா பின் நவ்ஃபலிடம் அன்னை கதீஜா பின்த் குவைலித்
(ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிவித்தார்கள். இவற்றை செவியுற்ற வரக்கா
பின் நவ்ஃபல் அவர்கள், அவர், நபி மூஸா (அலை) அவர்களிடம் வந்த அதே வானவராவார்.
நீங்கள் இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதராவீர். (முஹம்மதே)
உங்களை, உங்கள் சமூகத்தார் இந்நகரை
விட்டு வெளியேற்றும் போது நான் உயிரோடு இருக்க வேண்டுமே! என்று பெருமூச்சுவிட்ட வண்ணம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் வியப்படைந்து என் சமூகம்
என்னை
வெளியேற்றிவிடுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெரியவர் ஆம்,
நீர் கொண்டு வந்த செய்தியைப் போன்று முன்னர் கொண்டு
வந்த எந்த மனிதரையும் அவரது சமூகம் பகைத்தே வந்திருக்கின்றது. நான் அந்த நேரத்தில்
உயிரோடிருந்தால் உ.ங்களுக்குத் துணைபுரிவேன் என்று கூறினார். ஆனால் அவர் சிறிது நாட்களிலேயே
இறந்துவிட்டார். (புகாரீ 4)
நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெறும்போது
அவர்களுக்கு வயது 40.
(ஆதாரம் : ஃபத்ஹுல்பாரி)
No comments:
Post a Comment