Wednesday, November 9, 2016

தாயத்து, தாவிஸ் அணிதல்



தாயத்து, தாவிஸ் அணிதல்


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ரலி)

நூல் : அஹ்மத் (16781)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்கமாட்டான். யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்றமாட்டான்.

அறிவிப்பவர் :  உக்பா பின் ஆமிர்(ரலி)

நூல் :  அஹ்மத் (16763)

இம்ரான் பின் ஹுஸன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இதை கழற்றி விடு. இது உனக்கு பலஹீனத்தைத்தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெறமாட்டாய் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (19149)

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِي اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِي اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ(38) سورة الزمر

""வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் ""அல்லாஹ்'' என்று கூறுவார்கள். ""அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!'' என்று கேட்பீராக! ""அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவ னையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 39:38)


தாயத்து, தாவீதுகளைக் கட்டுதல், தட்டுகளில் எழுதிக் கரைத்துக் குடித்தல், வீடுகளில் வெள்ளைக்கல்லை தொங்கவிடுவது, சிறிய பாட்டில்களையும் பூசணிக்காய், உருவப்பொம்மைகள் போன்றவற்றை தொங்கவிடுவதும் இணைவைப்புக் காரியங்களாகும். இவற்றைத் தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

No comments:

Post a Comment