Labels
- பலவீனமான ஹதீஸ்கள்
- இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
- இஸ்லாமிய ஒழுக்கங்கள்
- இணைவைத்தல்
- தீய பண்புகள்
- தொழுகை முறை பயிற்ச்சி
- முஸ்னத் அஹ்மத்
- தஃப்ஸீர் விளக்கம்
- இஸ்லாமிய ஏகத்துவக் கோட்பாடு
- ஸுனன் அபூதாவூத் ( அரபு & தமிழ் )
- ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப்
- புலூகுல் மறாம்
- ரியாளுஸ் ஸாலிஹீன் ( அரபு & தமிழ் )
- ஸஹீஹ் முஸ்லிம்
- 40 நபிமொழிகள் ( அந் நவவீ)
- அல் லுவுலுவு வல் மர்ஜான்
- ஸுனன் இப்னுமாஜா
Wednesday, November 9, 2016
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல் & நேர்ச்சை செய்தல்
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல்
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمْ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنْ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ(173) سورة البقرة
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:173)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் பெற்றோரைச் சபித்தவனை அல்லாஹ் சபித்துவிட்டான். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவரையும் அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனையும் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துபவனுக்கு அடைக்கலம் அளிப்பவனையும் அல்லாஹ் சபித்துவிட்டான். அடையாளக்கல்லை மாற்றுபவனையும் அல்லாஹ் சபித்துவிட்டான்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீதாலிப்(ரலி)
நூல் : முஸ்லிம் (3657)
நேர்ச்சை செய்தல்
யார் அல்லாஹ்வுக்கு வழிபடும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ அவர் (அதனை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடட்டும். யார் அவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ (அவர் அதை நிறைவேற்றி) நிறைவேற்றி அவனுக்கு மாறு செய்யவேண்டாம்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புகாரீ (6696)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment