அன்னை ஸவ்தா ( ரழி )
கி.பி 566ம்
ஆண்டு , ஸம் ஆ அப்துஷ் ஷம்ஸ் அஷ்ஷு முஸ்
பின் த் கைஸ் தம்பதியினருக்கு மகளாக அன்னை ஸவ்தா பின் த் ஸம் ஆ ( ரழி ) பிறந்தார்கள் . இவருக்கு அப்துல்லாஹ் பின் ஸம் ஆ என்ற சகோதரரும் உண்டு.
ஸவ்தா ( ரழி ) அவர்கள்
நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் முடிப்பதற்கு முன்னால் ஸக்ரான் பின் அம்ர்
எனபாரைத் மணமுடித்திருந்தார்கள் . அவர்
மூலமாக ஸவ்தா ( ரழி ) அவர்களுக்கு ஜந்து அல்லது ஆறு குழந்தைகள் இருந்தன.
இஸ்லாத்தை
ஆரம்ப கட்டத்தில் ஏற்றவர்களில் அன்னை ஸவ்தா (
ரழி ) அவர்களும்
ஒருவர் . குறைஷிகளின் கடும் எதிர்ப்பு , அளவிலாத் தொல்லைகள் இவற்றையெல்லாம் மீறி அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களும்
அவர்களுடைய கணவர் ஸக்ரான் ( ரழி ) அவர்களும் உண்மை மார்க்கத்தை ஏற்றார்கள். இதனால் தம் இனத்தவரான அப்துஷ்ஷம்ஸ் கூட்டத்தினரின்
கொடுமைகளுக்கு
ஆளானார்கள்.
கொடுமைகள்
எல்லை மீறிய காரணத்தால் தங்களின் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள , இரண்டாவதாக அபீசீனியா சென்ற குழுவோடு அவர்களும் சென்றார்கள் . இதனால் குறைஷிகள் மற்றும் தம் சமூகத்தாரின் கொடுமைகளிலிருந்து
பாதுகாப்புப் பெற்றனர்.
மக்காவில்
எதிர்ப்பு குறைந்து மக்கள் இஸ்லாத்தில் இணைகிறார்கள் என்ற தவறான தகவலின் அடிப்படையில்
அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களும் , அவர்களது
கணவர் ஸக்ரான் ( ரழி )
அவர்களும்
மக்கா திரும்பினர். சில
ஆண்டுகளில் ஸக்ரான் ( ரழி ) அவர்கள் மரணமடைந்தார்கள் .
ஜந்து அல்லது ஆறு குழந்தைகளுடன் அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்கள்
விதவையாக
மக்காவில்
வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
கதீஜா ( ரழி ) அவர்களை
இழந்து மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் இருந்த நபி (
ஸல் ) அவர்களைக்
கண்ட உஸ்மான் பின் மழ் ஊன் ( ரழி ) அவர்களின் துணைவியார் கவ்லா பின் த் ஹகீம் (ரழி ) அவர்கள் , " அல்லாஹ்வின் தூதரே !
நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ? என்று கேட்டார் . அப்போது நபி ( ஸல் ) அவர்கள் , " யாரைத் திருமணம் செய்வது ?" என்று வினவினார்கள் . " நீங்கள் விரும்பினால் கன்னியையோ , விதவையையோ திருமணம் செய்யலாம் " என்று பதிலளித்தார்.
"
கன்னி யார் ? விதவை
யார் ? என்று நபி ( ஸல் ) அவர்கள் கேட்டார்கள்.
" அல்லாஹ்வின் படைப்பில் தங்களுக்கு அதிக விருப்பமுள்ள நபர் அபூபக்ர் ( ரழி ) ஆவார். அவர்களின் மகள்
ஆயிஷா
கன்னியாவார். உங்கள் மார்க்கத்தை ஏற்று உங்களைப்
பின்பற்றும் ஸவ்தா பின் த் ஸம் ஆ ( ரழி ) அவர்கள் விதவையாவார்
" என்று கவ்லா ( ரழி ) பதிலளித்தார்.
"
அவ்விருவரிடமும் என்னைப் பற்றி எடுத்து சொலலுங்கள் " என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
கவ்லா ( ரழி ) அவர்கள் ஆயிஷா ( ரழி ) அவர்களின் தாயார் உம்மு ரூமான்
( ரழி ) அவர்களிடம் சென்று ." அல்லாஹ் உங்களுக்கு அளப்பரிய நன்மைகளையும் அருளையும் கொடுத்துள்ளான் " என்றார் ," என்ன விஷயம் ? " என்று
உம்மு ரூமான் ( ரழி ) வினவினார். நபி ( ஸல் ) அவர்கள்
ஆயிஷாவைத் திருமணம் செய்ய எண்ணுகிறார்கள்
:" என்று பதிலளித்தார் .
உடனே உம்மு ரூமான் (
ரழி ) , " அபூபக்ர் இப்போது வந்து விடுவார்;
அவரை
எதிர்பாருங்கள் என்று கூறினார்.
அபூபக்ர் ( ரழி ) வந்த
போது , கவ்லா ( ரழி) அவர்கள்
விஷயத்தை எடுத்துக் கூறினார்கள். " நபி ( ஸல் ) அவர்களுக்கு அவர்களது சகோதரர் மகள் திருமணம் புரிய ஏற்றவரா ? " என்றார்கள் . இதைக்
கவ்லா ( ரழி ) நபி ( ஸல் ) அவர்களிடம் தெரிவித்த போது ,
" இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் நான் அவருக்கும் , அவர் எனக்கும் சகோதரர் ஆவோம் அவருடைய
மகள்
எனக்குத் திருமணம் புரிய ஏற்றவர் தான் " என்று கூறியனுப்பினார்கள் . இதை
அபூபக்ர் ( ரழி ) யிடம் கூறிய போது , நபி ( ஸல் ) அவர்களை இங்கே அழைத்து வாருங்கள்
"
என்று
கூறினார்கள்.
நபி ( ஸல் ) அவர்கள்
வந்த போது. அபூபக்ர் ( ரழி ) அவர்கள்
ஆயிஷாவைத் திருமணம் முடித்து வைத்தார்கள். பின்னர் கவ்லா ( ரழி ) அவர்கள் , ஸவ்தா ( ரழி ) யிடம்
சென்றார்கள்
ஸவ்தா ( ரழி ) யின்
தந்தை மக்காவில் இருந்தவர். இலகுவாக
ஹாஜ் கூட செய்ய முடியும் என்றாலும் அவர் வயது முதிர்ந்திருந்ததால் அதைக் கூட செய்ய
முடியவில்லை . கவ்லா ( ரழி ) அவர்களைக்
கண்ட அம்முதியவர் அறியாமைக் கால வழக்கப்படி ,
" நல்ல காலையாக அமையட்டும்
" என்று கூறி விட்டு ,
நீ யார் ? என்று
வினவினார்.
"கவ்லா பின் த் ஹகீம் " என்று கவ்லா ( ரழி ) பதிலளித்த போது , அவர் மகிழ்ச்சியடைந்தார் . அல்லாஹ்
நாடியவற்றைப் பேசினார். பின்னர்
அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது
ஸவ்தாவைப்
பெண் கேட்கிறார் " என்று
கூறினார்கள் . அதற்கு அவர் " கண்ணியமான பொருத்தம்
" என்றார் . " உம்முடைய தோழி ( ஸவ்தா ) என்ன கூறுகின்றார் ?
" என்று வினவிய
போது , " அவரும் விரும்பவே செய்கிறார்
" என்றார்கள் . பின்னர்
நபி ( ஸல் ) அவர்களை அழைத்து வரும்படி கூறி ஸவ்தா ( ரழி ) அவர்களைத்
திருமணம் செய்து வைத்தார்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல்கள் : பைஹகீ 13526 அஹ்மத் 24587 தப்ரானீ , பாகம் 24 , பக்கம் 30
நபி ( ஸல் ) அவர்கள்
திருமண விருப்பம் வெளியிட்ட போது முந்தைய கணவர் மூலம் ஜந்து அல்லது ஆறு குழந்தைகள்
இருந்ததால் திருமணத்திற்கு ஸவ்தா ( ரழி ) தயக்கம் காட்டியதாகக் கூறும் செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவாகியுள்ளது.
நபி ( ஸல் ) அவர்கள்
சமூகத்தில் ஸவ்தா என்று சொல்லப்படும் பெண்ணை பெண் பேசினார்கள் . அப்பெண்மணி இறந்து விட்ட தனது கணவர் மூலமாக ஜந்து அல்லது ஆறு
குழந்தைகளைப் பெற்றிருந்தார். (திருமணத்திற்கு
அவர் தயங்கிய போது ) " என்னைத்
திருமணம் செய்ய உம்மைத் தடுத்து எது ? " என்று நபி ( ஸல் ) அவர்கள் வினவினார்கள்
அதற்கவர் , :" அல்லாஹ்வின் தூதரே !
அல்லாஹ்வின் மீதாணையாக !
மனிதர்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமான உங்களைத் திருமணம்
செய்வதை விட்டும் என்னை எதுவும்
தடுக்கவில்லை , எனினும் என் குழந்தைகள் உங்களிடம் காலையிலும் மாலையிலும் வந்து
அழுவார்கள் அவர்களின் உணவிற்காக வேண்டுமானால் உங்களுக்கு சேவை செய்கிறேன்"
என்று
கூறினார்கள். " இதைத் தவிர வேறு எதுவும் உம்மை
தடுக்கவில்லையா ? " என்று
நபி ( ஸல் ) அவர்கள் வினவிய போது ,
ஆம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி ( ஸல் )
அவர்கள்
ஸவ்தாவை நோக்கி , " அல்லாஹ் உன் மீது அருள் புரிவானாக ! குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்களில்
சிறந்தவர்கள் , குறைஷிக் குலத்திலுள்ள நல்ல
பெண்கள் தான் . ( அவர்கள் ) தம் சிறு குழந்தைகளை பேணி வளர்க்கிறார்கள் . தன் கணவனின் சொத்துக்களைப் பராமரிக்கிறார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி )
நூல் : அஹ்மத் 2774
ஸவ்தா ( ரழி ) அவர்கள் , நபி ( ஸல் ) அவர்களைத்
திருமணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தியை ஹஜ் செய்து விட்டு வந்தவுடன் அறிந்த அவரது
சகோதரர் அப்து பின் ஸம் ஆ ( ரழி ) தமது தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள் . அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு தாம் மண்ணை வாரிப் போட்டுக்
கொண்டது எவ்வளவு பெரிய அறியாமை என்பதை அறிந்து வருத்தப்பட்டார்கள்.
நூல்கள் : அஹ்மத் 24587 தப்ரானீ பாகம் 24 பக்கம் 30
நபி ( ஸல் ) அவர்கள்
இவ்விருவரில் யாரை முதலில் திருமணம் புரிந்தார்கள் ?
என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது . ஸவ்தா ( ரழி ) ஆயிஷா ( ரழி ) ஆகிய இருவரின் திருமணமும் மிக நெருக்கமான கட்டத்தில் நடந்ததால்
இந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் நபி ( ஸல் ) அவர்கள் ஆயிஷா ( ரழி ) அவர்களை
முதலில் திருமணம் செய்தார்கள் என்று கூறப்படுகின்றது .
முஸ்லிம் ( 2900 வது ) அறிவிப்பில் , எனக்குப் பிறகு தான் ஸவ்தா (
ரழி ) அவர்களைத்
திருமணம் செய்தார்கள்
என்று
ஆயிஷா ( ரழி ) மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள் . இப்னு கஸீர் உட்பட பல அறிஞர்கள் நபி ( ஸல் ) அவர்கள்
முதலில் ஆயிஷா ( ரழி ) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்ற கருத்தையே ஏற்கின்றனர்.
நபி ( ஸல் ) அவர்களைத்
திருமணம் செய்த ஸவ்தா ( ரழி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா சென்ற போது அவர்களுடன் சென்றார்கள். அங்கு வாழ்க்கையைத் தொடங்கினார்கள் .
நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் செய்த போது அவர்களுக்கு அதிக வயதாக இருந்தது. மதீனாவிற்கு வந்த பின் இன்னும் வயது
அதிகமானதால்
அவர்களுக்கு இல்லறத்தில் நாட்டம் குறையத் தொடங்கியது.
நபி ( ஸல் ) அவர்கள்
ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு நாளை ஒதுக்கியிருந்தார்கள் .
அவ்வாறு தனக்கு ஒதுக்கப்பட்ட நாளை அன்னை ஆயிஷா ( ரழி ) அவர்களுக்கு
ஸவ்தா ( ரழி )
விட்டுக்
கொடுத்தார்கள்.
நூல் : புகாரி 2593
நபி ( ஸல் ) அவர்கள்
இறுதியாக ஹஜ்ஜுக்கு சென்ற போது ஸவ்தா ( ரழி ) அவர்களும் சென்றார்கள் . அன்னை ஸவ்தா ( ரழி ) கனத்த உடலுடையவர்களாகவும் ,
மெதுவாக
நடப்பவர்களாகவும்
இருந்ததால் , முஸ்தலிபாவிலிருந்து மக்கள்
புறப்படும் முன்பு மினா செல்ல அனுமதி கேட்டார்கள். நபி ( ஸல் ) அவர்கள் அனுமதி வழங்கினார்கள் .
எனவே அவர்கள்
எல்லோருக்கும்
முன்னால் மினாவிற்கு சென்று விட்டார்கள்.
நூல் : புகாரி 1680 , 1681
ஒருமுறை
ஸவ்தா ( ரழி ) அவர்கள் தம் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்ற போது அவர்களைத்
தெரிந்தௌ கொண்ட உமர் ( ரழி ) அவர்கள் , " நீங்கள் வெளியே வராமல் இருக்கலாமே ! " என்று கூறினார்கள். அப்போது
அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களுக்கு ஆதரவாக ,
தம் தேவைகளை நிறைவேற்றிகொள்ள வெளியே செல்லலாம் என்ற
அனுமதியே
அல்லாஹ் வழங்கினான்.
( தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள ) ஸவ்தா
பின் த் ஸம் ஆ ( ரழி ) அவர்கள் இரவில் வெளியே சென்றார்கள். அவர்களை உமர் ( ரழி ) அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். " அல்லாஹ்வின் மீதாணையாக !
நீங்கள் ஸவ்தா ( ரழி ) தான். நீங்கள் எங்களை விட்டும் மறைந்துக் கொள்ளவில்லை " என்று கூறினார்கள். ஸவ்தா ( ரழி ) அவர்கள்
திரும்பி
வந்து நபி ( ஸல் ) அவர்களிடம் விபரத்தைக் கூறினார்கள். அப்போது நபி ( ஸல் ) அவர்கள் என் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அவர்களின் கையில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. இந் நிலையிலேயே வஹீ வரத் தொடங்கியது. நபி ( ஸல் ) அவர்கள் ," உங்கள் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் வெளியே செல்ல அனுமதி
வழங்கப்பட்டுள்ளீர்கள் " எனறு கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல் : புகாரி 5237
****
அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்கள் தர்மம் செய்வதிலும் வள்ளலாகத் திகழ்ந்துள்ளார்கள் .*******
உமர் ( ரழி ) அவர்கள்
தமது ஆட்சியின் போது ஸவ்தா ( ரழி ) அவர்களுக்கு ஒரு பை நிறைய வெள்ளி நாணயங்களைக் கொடுத்தனுப்பினார்கள் . இதைப் பார்த்த அன்னை ஸவ்தா (
ரழி )
அவர்கள் " இது என்ன ? " என்று வினவினார்கள் ." வெள்ளிக் காசுகள் " என்று
உமர் ( ரழி ) பதிலளித்தார்கள் . " பேரீச்சம்பழப் பை போன்றவல்லவா தெரிந்தது
?" என்று கூறி விட்டு ,
( அதை ) மற்றவர்களுக்குப் பங்கிட்டுக்
கொடுத்து விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஸீரீன்
நூல் : தபகாத்
இப்னு ஸ அத் , பாகம் 8 , பக்கம் 56
எல்லா
வகையிலும் சிறப்புப் பெற்றுத் திகழ்ந்த அன்னை ஸவ்தா (
ரழி ) அவர்களைப்
பற்றி அன்னை ஆயிஷா ( ரழி ) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்..
"
கூர்மையான அறிவும் ,
திடமான மனமும் கொண்ட ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ரழி ) அவர்களைத்
தவிர வேறு எந்தப் பெண்ணைப் பார்த்தும் அவராக நான் இருக்கவேண்டும் என்று
நான்
விரும்பியதில்லை " என்று
ஆயிஷா ( ரழி ) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 2899
ஆயிஷா ( ரழி ) யும் , ஸவ்தா ( ரழி ) யும் :
நான்
நபி ( ஸல் ) அவர்களுக்காக சமைக்கப்பட்ட ஹரீராவை (
இனிப்புப் பொருள் ) கொண்டு வந்தேன். அப்போது
எனக்கும் நபி ( ஸல் ) அவர்களுக்கும் இடையில் நின்ற ஸவ்தா (
ரழி )
அவர்களிடம் , "நீங்களும் சாப்பிடுங்கள்
" என்றேன் . அவர்கள்
மறுத்தார்கள் . நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும் இல்லையெனில்
உங்கள் முகத்தில் இதைப் பூசி விடுவேன் . என்றேன்.
அப்போதும்
மறுத்தார்கள் . நான் என் கையை ஹரீராவில் நுழைத்து
அதை அவர்கள் முகத்தில் பூசினேன் . அப்போது
நபி ( ஸல் ) அவர்கள் சிரித்தார்கள். பின்னர் நபி ( ஸல் ) அவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு ஸவ்தா ( ரழி ) அவர்களை
நோக்கி , " நீயும் ஆயிஷா முகத்தில் பூசு " என்று கூறினார்கள் .
அவர்கள் என் முகத்தில் பூசிய போது நபி ( ஸல் ) அவர்கள்
சிரித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )
நூல்கள் : அபூ யஃலா , இப்னு
அஸாகீர்
அன்னை
ஸவ்தா ( ரழி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்கள் இறந்து பல ஆண்டுகள் கழித்து ,கி.பி 632 ம் ஆண்டு உமர் ( ரழி ) அவர்களின் ஆட்சிக் காலத்தின்
கடைசி வருடத்தில் மரணமடைந்தார்கள். ஹதீஸ்களில்
அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்கள் அறிவித்த செய்திகள் ஜந்து மட்டுமே ! அதில் ஒன்று புகாரியில் (
6686 ஆவது செய்தியாகப் பதிவு செய்யப்படுள்ளது)
No comments:
Post a Comment