தியாகத் திருமகள் கதீஜா ( ரலி )
இஸ்லாத்தை ஏற்று தியாகங்கள் செய்தோர் ஏராளம் உள்ளனர். அவர்களில் பெண்களும் உண்டு. அதில் இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் தியாகம் செய்தோர் முக்கியத்துவம் பெற்றவர்களாவர்.இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்று , தன்னை முழுமையாகத் தியாகம் செய்த பெருமை அன்னை கதீஜா ( ரலி ) அவர்களையே சாரும். இஸ்லாத்தை முதன்முதலில்
ஏற்றதும் . அதற்காகத் தன்னையே அர்ப்பணித்ததும் அன்னை கதீஜா ( ரலி ) அவர்களே !
அறியாமைக் காலத்தில் தன் வாழ்வை அதிகமாகக் கழித்த அவர்கள் , மூட நம்பிக்கை , முன்னோர்கள் நடவடிக்கை இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு , உண்மையான ஒரிறைக்
கொள்கையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் . அந்த உன்னதப் பெண்மணியின் வரலாற்றைப் பார்ப்போம்.
பிறப்பு :
குவைலித் பின் அஸத் , ஃபாத்திமா பின்த் ஸாயிதா தம்பதியினரின் மகளாக கி.பி 556 ம் ஆண்டு கதீஜா ( ரலி ) பிறந்தார்கள்.
உடன்பிறப்புகள் :
ஹாலா பின் த் குவைலித் , ருகைய்யா பின் த் குவைலித் ஆகியோர் கதீஜா ( ரலி ) அவர்களின் சகோதரிகள் ஆவர்.
கதீஜா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் முடிக்கும் முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும் , அவருக்குப் பின்னர் அத்தீக் பின் ஆயித் என்பவரையும்
மணமுடித்திருந்தார்கள் . அவர் இறந்த பிறகு விதவையாக இருந்த கதீஜா ( ரலி ) அவர்களை நபி ( ஸல் ) அவர்கள் மணமுடித்தார்கள் . அத்தீக் என்ற கணவர் மூலமாக ஹின் த் என்ற
பெண் குழந்தையும் , அபூ ஹாலா மூலமாக ஹின் த் , ஹாலா ஆகிய குழந்தைகளும் இருந்தன .
நபி ( ஸல் ) அவர்கள் மூலமாக காஸிம் , அப்துல்லாஹ் ( தாஹிர் , தய்யிப் ) ஜைனப், உம்மு குல்ஸும், ஃபாத்திமா , ருகைய்யா ஆகிய குழந்தைகள் பிறந்தன.
கதீஜா ( ரலி ) அவர்களின் முந்தைய கணவர் அத்தீக் என்பவருக்குப் பிறந்த ஹின் த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாக இமாம் தாரகுத்னீ கூறுகின்றார்கள். மற்றொரு
கணவர் அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹின் த் ஹாலா என்ற இரு குழந்தைகள் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.
நபி ( ஸல் ) அவர்களுக்குப் பிறந்த நாங்கு பெண் குழந்தைகள் ,மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விஷயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை.
அப்துல்லாஹ், தாஹிர் , தாயிப் ஆகியோர் விஷயத்தில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபடு நிலவுகின்றது மூன்று பேரும் நபி ( ஸல் ) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள்
என்று சிலரும் , அப்துல்லாஹ் என்ற குழந்தயே தாஹிர் என்றும் தய்யிப் என்று அழைப்பட்டார் என சிலரும் , காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா ( ரலி ) அவர்களுக்கு
வேறு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று மற்றும் சிலரும் கூறுகின்றனர் ( அல்லாஹ் மிக அறிந்தவன் )
காஸிம், அப்துல்லாஹ் ( தாஹிர் , தய்யிப் ) ஆகியோர் நபி ( ஸல் ) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர்.ஜைனப் ( ரலி ) , உம்மு குல்ஸும் ( ரலி ) ருகைய்யா
(ரலி ) ஆகியோர் கதீஜா ( ரலி ) அவர்கள் இறந்த பிறகு நபி ( ஸல் ) அவர்கள் நபியாக வாழ்ந்த காலகட்டத்தில் இறந்தார்கள்.
- ருகைய்யா ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு மரணித்தார்கள் ( நூல் : அல் இஸாபா 5452 )
- ஜைனப் ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள் ( நூல் : அல் இஸாபா 11 , 218 )
- உம்மு குல்ஸும் ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி 9ல் மரணமடைந்தார்கள் ( நூல் : அல் இஸாபா 12 , 222 )
- ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்கள் இறந்த ஆறு மாதத்திற்குப் பின் இறந்தார்கள் ( நூல் : புகாரி 3093 )
அறியாமைக் காலத்தில் பிறந்த கதீஜா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களைப் போன்று அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள் .
பெண்களிடம் அவசியம்
இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகப் பேணியதால் , " தாஹிரா " ( பரிசுத்தமானவள் ) என்று மக்களால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தார்கள். ஒழுக்கத்தில் உயர்ந்திருந்த அவர்கள் செல்வத்திலும் கொடி கட்டிப் பறந்தார்கள் . மக்கா நகரிலிருந்து வெளி நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் அனைவைன் ஒட்டகங்களுக்கும் ஈடாக அன்னை கதீஜா ( ரலி )
அவர்கள் ஒருவரின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும் அவர்கள் அவ்வளவு பொருள்களுக்கு உரிமையுடைய செல்வ சீமாட்டியாக வாழ்ந்து வந்தார்கள்.
அந்தக் கால கட்டத்தில் நபி ( ஸல் ) அவர்கள் பல கூட்டத்தினரோடு வியாபாரம் செய்து வந்தனர். அதன் மூலம் அவர்களின் நற்குணங்கள் மக்களிடம் பரவியது. வியாபாரத்தில் அவர்களின் நேர்மையான நடைமுறைகள் மக்களைக் கவர்ந்தன . நபி ( ஸல் ) அவர்களை அம்மக்கள் ' அல் அமீன் ' ( நம்பிக்கைக்குரியவர் ) என்று அழைத்தனர். வியாபாரத்தில்
நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் நடந்த நபி ( ஸல் ) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட கதீஜா ( ரலி ) அவர்கள் தமது சரக்குகளை விற்கும் பொறுப்பைப் கவனித்துக்
கொள்ளுமாறு நபியவர்களை அழைத்தார்கள் . அவ்வழைப்பை ஏற்ற நபி ( ஸல் ) அவர்கள் கதீஜா ( ரலி ) யின் சரக்குகளை விற்றுக் கொடுத்தார்கள் .
நூல் : இப்னு ஹிஷாம் , பாகம் 2 , பக்கம் 6
தன்னிடம் பணியாளராக இருந்த நபி ( ஸல் ) அவர்களின் பழக்க வழக்கங்கள் , குணங்கள் அனைத்தும் அன்னை கதீஜா ( ரலி ) அவர்களைக் கவர்ந்தன இரண்டு கணவரை
இழந்திருந்த கதீஜா ( ரலி ) அவர்கள் , நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் புரிய எண்ணினார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் சம்மதித்தவுடன் திருமணம் இனிதே நடைபெற்றது.
அப்போது கதீஜா ( ரலி ) அவர்களின் வயது நாற்பது. நபி ( ஸல் ) அவர்களின் வயது இருபத்தைந்து .கதீஜா ( ரலி ) அவர்களுக்கு வயது நாற்பதாக இருந்தாலும் அவர்களின் செல்வசெழிப்பின் காரணமாக , பெரும் செல்வந்தர்களை அவர்கள் திருமணம் முடித்திருக்க முடியும் . ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்குக் கீழ் பணியாளராக வேலை செய்த
நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு அழகிய முன்மாதிரியை வழங்கினார்கள்.
ஒரு பெண், தனது வருங்காலக் கணவரை எப்படித் தேர்ந்தெடுப்பது ? என்பதில் மற்ற பெண்களுக்கு அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் வழிகாட்டுகின்றார்கள். பொன்னும் பொருளும்
நிறைய இருக்கும் ஒருவனிடம் எவ்வளவு அதிக கெட்ட செயல்கள் இருந்தாலும் . அவனிடம் செல்வம் இருக்கின்றது என்பதால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெரும் கூட்டம்
தயாராக இருக்கின்றது. அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் பொன்னையும் , பொருளையும் ஒதுக்கி வைத்து விட்டு , நற்குணமிக்க நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களைத் தேர்வு
செய்கிறார்கள். நல்லொழுக்கமுள்ள பெண்களின் தேர்வு இவ்வாறு தான் இருக்கும் .
நபி (ஸல் ) அவர்களோடு இவ்வாழ்க்கையைத் தொடங்கிய அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் மகிழ்வோடு காலத்தை கழிக்கின்றார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் மூலம் பல
குழந்தைகளை ஈன்றெடுக்கின்றார்கள் ( இதன் விபரத்தை முன்னர் குறிப்பிட்டுள்ளோம் )
பதினைந்து வருடங்கள் கழிந்த பின்பு , நபி(ஸல் ) அவர்கள் ஹிரா குகைக்கு சென்று பல இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும்
உணவைத் தாய்ர் செய்து கொடுக்கும் பணியை கனிவுடன் செய்து வந்தார்கள் . இதற்காக அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் கொஞ்சமும் கோபப்படவோ , எரிச்சல் படவோ இல்லை.
கணவருக்கு செய்ய வேண்டிய சேவைகள் பற்றி கதீஜா ( ரலி ) அவர்கள் மூலம் இன்றைய இஸ்லாமியப் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் .
ஒரு நாள் ஹிரா குகையில் வானவர் ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் வந்து ' ஒதுவீராக ' என்று சொல்லி சூரத்துல் அலக்கின் ஜந்து வசனங்களை ஒதிக் காட்டினார்கள் . இதைக் கண்டு
பயந்து நடுங்கிய நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கதீஜா ( ரலி ) அவர்களிடம் வந்து ' என்னைப் போர்த்துங்கள் ; என்னைப் போர்த்துங்கள் ' என்று கூறினார்கள்.
கதீஜா ( ரலி ) அவர்கள் போர்த்தி விட்ட பின்னர் நபி ( ஸல் ) அவர்கள் நடந்த சம்பவத்தை விளக்கி விட்டு , தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று அஞ்சுவதாக கூறினார்கள் . இதை
செவியுற்ற அன்னை கதீஜா ( ரலி ) பின்வருமாறு கூறினார்கள் .
" அவ்வாறு கூறாதீர்கள் . அல்லாஹ்வின் மீது ஆணையாக ! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவு படுத்த மாட்டான் ; நீங்கள் உங்கள் உறவினர்களுடம் இணங்கி வாழ்கின்றீர்கள்;
( சிரமப்படுவோரின் ) சுமைகளை சுமக்கிறீர்கள்; ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள் ; விருந்தினரை உபசரிக்கிறீர்கள்; சோதனைகளில் ( ஆட்பட்டோருக்கு ) உதவி புரிகின்றீர்கள் "
என்று கூறி பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் ஊட்டினார்கள் .
அதுமட்டுமல்ல ! அ ந் நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன ? என்பதை அறிய வேண்டும் என்பதற்காகத் தமது தந்தையின் சகோதரர் 'வரகா ' அவர்களிடம் சென்று விளக்கம்
கேட்டார்கள் அவர் இஞ்சீல் வேதத்தை நன் கு அறிந்து வைத்திருந்த கிறித்தவராக இருந்தார்.
" முஹம்மதிடம் வந்தவர் நாமூஸ் ( ஜிப்ரீல் ) ஆவார் . முஹம்மதை அல்லாஹ் தன் தூதராகத் தேர்வு செய்துள்ளான் . உங்களை இம்மக்கள் ஊரை விட்டு வெளியேற்றுவார்கள் .
அப்போது நான் உயிரோடு இளைஞனாக இருந்தால் உங்களுக்கு உதவிடுவேன் " என்று கூறினார்.
( இது பற்றிய விரிவான செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது பார்க்க ஹதீஸ் எண்கள் : 3 , 3392 , 4953 , 4955 , 4957 , 6982 )
பிரச்சனையில் மாட்டிக் கொண்டு குழுப்பத்தில் வரும் கணவனுக்கு அன்போடு நடந்து ஆறுதல் அளிக்கும் மனைவிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வீட்டுப் பிரச்சனையையும்
சேர்த்து எழுப்பி , புண் பட்ட மனதில் வேலைப் பாய்ச்சுபவர்கள் எத்தனை பேர் ? கணவனின் சூழ் நிலை அறியாமல் நடப்பவர்கள் எத்தனை பேர் ? இவர்களைப் போன்ற ஒருவராக
கதீஜா ( ரழி ) அவர்கள் இருக்கவில்லை.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் , இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன . ( அல்குர் ஆன் 30 : 21 )
மனைவி என்பவள் கணவன் அமைதி பெறும் இடம் என்ற அல்லாஹ்வின் கூற்றுப்படி நடந்தவர் அன்னை கதீஜா ( ரழி ) அவர்கள். கணவன் சிரமப்படுகின்ற நிலையில் மனைவி எப்படி
நடக்க வேண்டும் என்பதற்கு அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றார்கள்.
முஹம்மத் ( ஸல் ) அவர்களை நபி என்று முதன் முதலில் ஏற்றுக் கொண்ட பெண்மணி கதீஜா ( ரழி ) அவர்கள்! சத்தியம் இது தான் என்று தெரிந்த பிறகு, முன்னோர்கள் ,
மூதாதையர்கள் , பழக்கவழக்கங்கள் என்று காரணம் கூறி புறக்கணிக்காமல் உண்மையை உணர்ந்து ஏற்றார்கள்.
நபி ( ஸல் ) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் பத்து வருடங்கள் வாழ்ந்து தமது அறுபத்தைந்தாம் வயதில் கி.பி 621 ல் மரணித்தார்கள் . அவர்கள் தமது வாழ் நாளில் நபி ( ஸல் )
அவர்களுக்காக , பொருளாலும் , உடலாலும் செய்த சேவைகள் யாராலும் மறக்க முடியாதவை. நபி ( ஸல் ) அவர்களுக்கு அன்னை கதீஜா ( ரழி ) அவர்கள் செய்த சேவைகளை
அறிய நபிமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள செய்திகளை இனி காண்போம்...
*** நபி ( ஸல் ) அவர்கள் கதீஜா ( ரழி ) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்ததால் நபி ( ஸல் ) அவர்களின் வேறு எந்த மனைவியர் மீதும் பொறாமைப்படாத நான் கதீஜா ( ரழி )
அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து என்னை நபி ( ஸல் ) அவர்கள் திருமணம் செய்தார்கள் .அல்லாஹ்வோ . ஜிப்ரீல் ( அலை ) அவர்களோ
, " கதீஜா ( ரழி ) அவர்களுக்கு சுவர்க்கத்தில் முத்து மாளிகை உண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவுயுங்கள் " என்று கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல்கள் : புகாரி 3817 முஸ்லிம் 4820
**** ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து , " அல்லாஹ்வின் தூதரே ! இதோ கதீஜா ! அவர் தன்னுடன் குழம்பு , உணவு , பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை
உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்து சொல்லுங்கள் . சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு , துன்பங்கள் இல்லாத
முத்தாலான மாளிகை உண்டு என்ற நற்செய்தியையும் அவருக்கு சொல்லுங்கள் " என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரழி )
நூல்கள் : புகாரி 3820 , 7497 முஸ்லிம் 4817
***** " அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் , சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான் " என்று நான் கூறிய போது " உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது
ஆணையாக ! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன் ' என்று நான் கூறும் அளவிற்கு நபி ( ஸல் ) அவர்கள் ( கடும் ) கோபமுற்றார்கள்"
என்று ஆயிஷா ( ரழி ) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நூல்கள் : தப்ரானீ , அஹ்மத் 24016
**** " இவ்வுலகத்தில் சிறந்த பெண் மர்யம் ( அலை ) ஆவார். இவ்வுலகத்தில் சிறந்த ( மற்றொரு) பெண் கதீஜா ( ரழி ) ஆவார் " என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ ( ரழி )
நூல்கள் : புகாரி 3432 முஸ்லிம் 4815
No comments:
Post a Comment