Tuesday, November 22, 2016

சிக்கனமான திருமணம் ஹதீஸ் ( ஒர் பார்வை )


சிக்கனமான திருமணம் ஹதீஸ் ( ஒர் பார்வை )


مسند أحمد بن حنبل ج6/ص82
24573 حدثنا عبد اللَّهِ حدثني أبي ثنا عَفَّانُ قال ثنا حَمَّادُ بن سَلَمَةَ قال أخبرني بن الطُّفَيْلِ بن سَخْبَرَةَ عَنِ الْقَاسِمِ بن مُحَمَّدٍ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً

இன்ன அஃலமன் நிகாஹி பரக(த்)தன் அய்ஸருஹூ முஃனதன்
 (குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது)
 நூல் : முஸ்னத் அஹ்மத் ( 24573 )முஸ்னத் இஸ்ஹாக் ( 946)  முஸ்னத் தயாலிஸி ( 1427 )
மேற்கண்ட மூன்று நூற்களிலும் கீழ்க்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்னத் அஹ்மத் நூலின் அறிவிப்பாளர் தொடர்
1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
2. ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
3. காஸிம் பின் முஹம்மத் கூறியதாக இப்னுத் துபைல் பின் ஸக்பரா அறிவிக்கிறார்.
4. இப்னுத் துபைல் பின் ஸக்பரா கூறியதாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கிறார்.
5. ஹம்மாத் பின் ஸலமா கூறியதாக அஃப்பான் அறிவிக்கிறார்.
6. அஃப்பானிடம் நேரில் செவியுற்று அஹ்மத் பின் ஹன்பல் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
முஸ்னத் இஸ்ஹாக் அறிவிப்பாளர் தொடர்
أخبرنا وكيع نا أبو عيسى موسى بن بكر الأنصاري عن القاسم بن محمد عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال له أبي أسمعته من رسول الله فقال نعم هكذا أخبرت قال إسحاق قلت للملائي هو أبو عيسى الأنصاري فقال نعم

1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
2. ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
3. காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் பக்ர் அறிவிக்கிறார்.
4. மூஸா பின் பக்ர் கூறியதாக வகீவு அறிவிக்கிறார்.
5. வகீவு கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
முஸ்னத் தயாலிஸி அறிவிப்பாளர் தொடர்
حدثنا أبو داود قال حدثنا موسى بن تليد ان من آل أبي بكر الصديق قال سمعت القاسم بن محمد يحدث عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال لي أبى عائشة اخبرتك عن رسول الله  فقال هكذا حدثت وهكذا حفظت

1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
2. ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
3. காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் தலீதான் அறிவிக்கிறார்
4. மூஸா பின் தலீதான் கூறியதாக அபூதாவூத் அறிவிக்கிறார்
5. அபூதாவூத் கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
6. முஸ்னத் அஹ்மதில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்பவரும்
7. முஸ்னத் இஸ்ஹாக்கில் மூஸா பின் பக்ர் என்பவரும்
முஸ்னத் தயாலிஸியில் மூஸா பின் தலீதான் என்பவரும் அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இம்மூவரைத் தவிர மற்ற அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான். மேற்கண்ட மூவர் காரணமாகவே இந்த ஹதீஸ் விமர்சிக்கப்படுகின்றது. எனவே இம்மூவரைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் மறு ஆய்வு செய்தாலே இந்த ஹதீஸின் தரத்தைக் கண்டு கொள்ளலாம்.
இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். ஒரே நபர் தான் இம்மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். மேற்கண்ட அந்த அறிவிப்பாளர் ஈஸா பின் மைமூன் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றார்.
ஈஸா பின் மைமூன் பற்றிய விமர்சனம்
1. இவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள் முன்கருல் ஹதீஸ் (இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்) என்று விமர்சனம் செய்துள்ளார்கள்.
2. திர்மிதீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
3. இவர் நம்பகமானவர் இல்லை என்று நஸயீ கூறுகிறார்.
4. அம்ரு பின் அலீஅபூஹாதம் ஆகியோர்மத்ரூகுல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் விடப்பட வேண்டியவை) என்று கூறியுள்ளனர்.
5. இவர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
6. இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ கூறுகிறார்.
7. இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறத்தக்க பல ஹதீஸ்களை நம்பகமானவை என்ற பெயரில் இவர் அறிவித்துள்ளார் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.
8. இவரது ஹதீஸ்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று யஃகூப் கூறுகிறார்.
9. இவரை அனைவரும் பலவீனராகக் கருதியுள்ளனர் என்று தஹபீ கூறுகிறார்.
மூஸா பின் பக்ர் என்றும்,
மூஸா பின் தலீதான் என்றும்
இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்
ஈஸா பின் மைமூன் என்றும்
குறிப்பிடப்படும் இவரைப் பற்றி மேற்கண்டவாறு அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்கால அறிஞர்கள் அல்பானிஷுஐப் அல்அர்னாவூத் ஆகியோரும்இன்னும் பலரும் மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமானது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ஒரு அறிவிப்பாளரைப் பற்றி மேற்கூறப்பட்ட விமர்சனங்கள் இருக்குமானால் அவர் நிச்சயம் பலவீனமானவர் என்பதிலும் அவர் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் பலவீனமானது என்பதிலும் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
ஆனால் ஆழமாக நாம் ஆய்வு செய்த போது இந்த விமர்சனங்களுக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று தெரிய வருகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

No comments:

Post a Comment