Wednesday, December 7, 2016

வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 1 முதல் 5 வரை

வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 1 முதல் 5 வரை 

 1 ) நபிகளாரின் பிரத்தியேக உதவியாளர் யார் ?


A) ஸ அத் பின் மு ஆத் ( ரழி )


B ) அபூ பக்கர் ( ரழி )


C ) ஸுபைர் பின் அவ்வாம் ( ரழி )


இதற்கான விடை பின்வரும் மாறு :


قَالَ سَمِعْتُ جَابِرًا، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ ‏"‏ مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ ‏"‏‏.‏ فَقَالَ الزُّبَيْرُ أَنَا‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ ‏"‏‏.‏ فَقَالَ الزُّبَيْرُ أَنَا‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ ‏"‏‏.‏ فَقَالَ الزُّبَيْرُ أَنَا‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ ‏"‏‏.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார்.

"அகழ்ப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்டார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), 'நான்" என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும்; எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள். பிறகு, 'எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்" என்று கூறினார்கள்.

நூல் : ஸஹீஹுல் புகாரி ( 4113 )



2 ) யாருக்கு உதவி செய்துகொண்டு இருந்தால் இறைவழியில் பாடுபடுபவர்க்கு சமமாக கருதப்படுவார் என்று நபி ஸல் கூறினார்கள் ???


A) விதவைக்கும் , ஏழைக்கும் உழைப்பவர்


B ) அனாதைக்கும் , ஏழைக்கும் உழைப்பவர்


C ) தனது குடும்பத்திற்கும் , ஏழைக்கும் உழைப்பவர்

இதற்கான விடை :

وعنه عن النبي صلى الله عليه وسلم‏:‏ ‏"‏ الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله‏"‏ وأحسبه قال‏:‏ ‏"‏ وكالقائم الذي لا يفتر، وكالصائم الذي لا يفطر‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏


விதவைக்கும் , ஏழைக்கும் உழைப்பவர் இறைவழியில் பாடுபடுபவர் போலாவர் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்….

நூல் : புகாரி ( 5353 ) முஸ்லிம் (2982 )




3 ) “ ஒர் இறை நம்பிக்கையான ஆணுக்கும் , பெண்னுக்கு எதுவெள்ளாம் சோதனை இருந்து கொண்டு இருக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ?


A ) சொத்து


B) குழந்தை மற்றும் ஆரோக்கியம்


C ) உயிர் , குழந்தை , சொத்து


இதற்கான பதில் :

وعن أبي هريرة رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ "‏ ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده ة وماله حتى يلقى الله تعالى وما عليه خطيئة‏"‏ ‏(‏‏(‏رواه الترمذي وقال حديث حسن صحيح‏)‏‏)‏

ஓர் இறை நம்பிக்கையான ஆண் மற்றும் பெண்ணிற்கு , அவரது உயிர் அவரது குழந்தை ,அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும் , இறுதியாக அவர்  குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார் என நபி ஸல் கூறினார்கள்.

நூல் : திர்மிதீ ( 2399 )


4 ) “ ஒரு முஸ்லிம் இறந்து அவரின் ஜனாஸாவில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காத -------- எத்தனை நபர்கள் கலந்து கொண்டால் அல்லாஹ் அவருக்குக்காக செய்யப்படும் சிபாரிசை ஏற்றுகொள்ளுவான் என்று நபி ஸல் கூறினார்கள் ???

A ) 100 நபர்கள்
B ) 40 நபர்கள்
C ) 70 நபர்கள்

இதற்கான விடை :

وعن ابن عباس، رضي الله عنهما، قال‏:‏ سمعت رسول الله، صلى الله عليه وسلم، يقول‏:‏ ‏ "‏ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلاً لا يشركون بالله شيئاً إلا شفعهم الله فيه‏"‏‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
ஒரு முஸ்லிம் இறந்து அவரின் ஜனாஸாவில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காத நாற்பது நபர்கள் கலந்து கொண்டால் அவர் விஷயமாக அவர்கள் செய்யும் சிபாரிசை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி )

நூல் : முஸ்லிம் ( 948 )




 5 ) தண்ணீரை நீன்று கொண்டு அருந்துவது மார்க்கத்தில் அனுமதி உண்டா ? நபி ஸல் அவர்கள் எப்படி அருந்தி இருக்கிறார்கள் ???




A ) நின்றவாறு


B ) உட்கார்ந்தவாறு


C ) நின்றவாறும் , உட்கார்ந்தவாறும்






இதற்கான விடை :

وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضى الله عنه قال‏:‏ رأيت رسول الله صلى الله عليه وسلم يشرب قائماً أو قاعداً 
(جامع الترمذي)


நபி ஸல் அவர்கள் நின்றவாறும் , உட்கார்ந்தவாறும் அருந்துவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஜபு அவர்கள் தன் பாட்டனார் வழியாக அறிவிக்கின்றார்கள்.

நூல் : திர்மிதீ ( 1883 )


1 comment: