குறைந்த செல்வத்திலும் பரகத் உண்டு
பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்
இன்னொரு உண்மையைப் புரிந்து கொண்டால் பேராசையில் இருந்து விடுபடலாம்.
பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் போவதையும், வேறு சிலருக்கு குறைந்த அளவு செல்வத்திலும் அதிகமான தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி விடுவதையும் நாம் காண்கிறோம்.
இது பரக்கத் எனும் மறைமுக அருளாகும்.
100 ரூபாய் நமக்குத் தேவை என்று நினைக்கும்போது 50 ரூபாய்தான் கிடைக்கிறது என்றால் அது பற்றாக்குறை என்று நமக்குத் தோன்றும்.
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை இப்படித் தோன்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நூறு ரூபாயில் நிறவேற வேண்டிய தேவை 50 ரூபாயில் நிறைவேறலாம்.
பொதுவாக ஒருவேளை உணவுக்கு 200 கிராம் அரிசி ஒருவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சில குடும்பங்களில் 200 கிராம் அரிசியை இரண்டு பேர் வயிறார உண்ணுவைதை நாம் காணமுடிகிறது. அதாவது இந்த அரிசி இரு மடங்கு பயனளிக்கிறது. நம்முடைய கணக்கை மிஞ்சும் வகையில் மறைமுகமான அருள் இதில் ஒளிந்திருப்பதை நாம் உணர்கிறோம்.
ஒருவன் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். அவனால் இரு குழந்தைகளைக்கூடப் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஒருவன் இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பாதிக்கிறான். அதில் அவன் ஐந்து குழந்தைகளைப் படிக்க வைத்து, தனது ஏனைய தேவைகளையும் அதிலேயே பூர்த்தி செய்து விடுகிறான் என்றால் இதில்தான் பரக்கத் உள்ளது.
எண்ணிக்கையில் வேண்டுமானால் பத்தாயிரம் என்பது பெரிதாக இருக்கலாம் ஆனால் பயனளிப்பதில் இந்த இரண்டாயிரம்தான் சிறந்தது.
பரக்கத் எனும் பேரருள் இருப்பதை ஒருவன் நம்பினால் அவன் பேராசைப்பட மாட்டான்.
பரக்கத் எனும் மறைமுகமான இறையருளைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فِي مَبَارِكِ الْإِبِلِ فَقَالَ لَا تُصَلُّوا فِي مَبَارِكِ الْإِبِلِ فَإِنَّهَا مِنْ الشَّيَاطِينِ وَسُئِلَ عَنْ الصَّلَاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ فَقَالَ صَلُّوا فِيهَا فَإِنَّهَا بَرَكَةٌ
ஒட்டகம் கட்டுமிடத்தைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஒட்டகம் கட்டுமிடத்தில் தொழாதீர்கள்; ஏனென்றால் அவை ஷைத்தான்களைச் சேர்ந்ததாகும் என்று கூறினார்கள். ஆடுகள் கட்டுமிடத்தில் தொழுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அதிலே தொழுது கொள்ளுங்கள் ஏனென்றால் அதில்தான் பரக்கத் உள்ளது என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் :416
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أُمِّ هَانِئٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً
உம்முஹானி (ரலி) அவர்களிடம் நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள்! அதில் பரக்கத் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : இப்னுமாஜா 2295
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أُمِّ هَانِئٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆனால் ஆட்டில்தான் பரக்கத் என்றார்கள்.
நூல் : இப்னுமாஜா 2295
ஆடுகள் மிகக் குறைந்த அளவில் குட்டி போடுகிறது. செம்மறியாடுகள் ஒரு தடவை ஒரு குட்டிதான் போடும். வெள்ளாடுகள் சில நேரங்களில் இரண்டு குட்டிகள் போடும். மனிதனைப் போல பத்து மாதம் கருவைச் சுமக்கும்.
அதேபோல் அதிகம் உண்ணப்படும் பிராணிகளும் ஆடுகள்தான். அதன் குறைவான இனப் பெருக்கத்தையும், அதிகம் உண்ணப்படுவதையும் ஒப்பு நோக்கிப் பார்த்தால் அந்த இனம் இன்னேரம் அழிந்து போயிருக்க வேண்டும். டைனோசரைப் போல முடிந்து போன வரலாறாகி இருக்க வேண்டும். ஆனால் உலகில் ஆடுகள் மிக அதிக அளவில் உள்ளதைப் பார்க்கிறோம்.
சிங்கம், புலி போன்ற விலங்குகள் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுக்கு மனிதர்களாலோ, மற்ற விலங்குகளாலோ ஆபத்துகள் ஏற்படுவதில்லை. அவை உணவாகவும் உட்கொள்ளப்படுவதில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும்போது சிங்கம் புலிகள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால் உலகில் இந்த விவங்குகளின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் சுருங்கி இருப்பதும், அதிகம் உண்ணப்படும் ஆடுகள் அதிக எண்ணிக்கையில் பல்கிப் பெருகி இருப்பதும் பரகத் எனும் மறைமுகமான அருள் இருப்பதற்குச் சான்றாக உள்ளது.
இறைவனின் பரக்கத் எனும் மறைமுகமான பேரருள் இருப்பதை நாம் உணராமலே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
முஸ்லிமல்லாத சமுதாயங்களில் ஒரு குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இருந்தால் ஏழு பேரும் சம்பாதிப்பார்கள். ஒரு நபர் தினமும் முன்னூறு ரூபாய் சம்பாதித்தால் ஏழு பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து நூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் மாத வருமானம் அறுபத்து மூவாயிரம் ரூபாய்களாகும். இவ்வளவு அதிக வருமானம் வந்தும் இவர்களில் அதிகமானோர் குடிசைகளில்தான் வசிக்கிறார்கள்.
முஸ்லிம்களின் குடும்பங்களில் பெரும்பாலும் ஒருவர்தான் சம்பாதிக்கிறார். தாயையோ, மனைவியையோ, மகளையோ, தந்தையையோ பெரும்பாலும் முஸ்லிம்கள் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனாலும் ஒருவரின் ஐயாயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளும் நிறைவேறுவதை நாம் பார்க்கிறோம்.
அல்லாஹ்வை அறைகுறையாக நம்பிய நாமே இந்தப் பயனை அடைகிறோம் என்றால் அல்லாஹ்வை முறையாக நம்பினால் எப்படிப்பட்ட அதிசயத்தை அல்லாஹ் நிகழ்த்துவான் என்பதை நாம் சற்றே சிந்திக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் பல சம்பவங்களை ஹதீஸ்களிலே நாம் பார்க்கிறோம்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ
முஸ்லிம் ஒரு வயிறுக்கு சாப்பிடுகிறார். முஸ்லிமல்லாதவர் ஏழுவயிறுக்கு சாப்பிடுகிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நூல் : புகாரி 5393, 5394. 5396. 5397
வெளிப்படையாகத் தெரியும் அருள் மட்டுமின்றி குறைந்த பொருளில் நிறைந்த பயனை அடையும் மறைமுகமான இறையருளும் உள்ளது என்பதை மேற்கண்ட ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ ح و حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ
ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானது. இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 5392
ஒருவருக்கு உரிய உணவை இரண்டு பேர் உண்ணலாம் என்பது நம்முடைய கணக்குக்கு ஒத்து வராத தத்துவமாகத் தோன்றலாம். ஆனாலும் நம்முடைய கணக்கைப் பொய்யாக்கும் வகையில் இது நடந்தேறுவதை அதிகமான முஸ்லிம்கள் தமது வாழ்வில் அனுபவித்து வருகின்றனர். இந்த அருளுக்குத்தான் நாம் ஆசைப்பட வேண்டும்.
No comments:
Post a Comment