Wednesday, December 14, 2016

வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 16 முதல் 20 வரை


வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 16 முதல் 20 வரை 




16 ) இருவரின் உணவு எத்தனை நபர்களுக்கு போதுமானதாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ???


A )  நான்கு பேருக்கு

B ) மூன்று பேருக்கு

C ) ஜந்து பேருக்கு


இதற்கான விடை :

وعنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ طعام الاثنين كافي الثلاثة، وطعام الثلاثة كافي الأربعة‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏

இருவரின் உணவு மூன்று பேருக்குப் போதுமானதாகும், மூன்றுபேர் உணவு நான்கு பேருக்குப் போதுமானதாகும்என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )

நூல் : புகாரி ( 5392 ) முஸ்லிம் ( 2058 )


17 )அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறிப்பிட்டார்கள் ???


A )  நல்லதையே பேசட்டும்

B ) மவுனமாக இருக்கட்டும்

C ) A &B


இதற்கான விடை :


وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ "‏من كان يؤمن بالله واليوم الآخر، فليقل خيرًا، أو ليصمت‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் நல்லதையே பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )

நூல் : புகாரி ( 6018 ) முஸ்லிம் ( 47 )

18 )இறை நம்பிக்கையாலர்களுக்கு இவ்வுலகம் எத்தகையது என்று நபி ஸல் கூறினார்கள் ( ? )

A ) சொர்க்க சோலையாகும்

B ) சிறைச்சாலையாகும்

C ) A & B

இதற்கான விடை :
وعنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏الدنيا سجن المؤمن وجنة الكافر‏"‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)

உலகம் இறை விடுவாசிகளுக்குச் சிறைச்சாலையாகும் , இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கம் ஆகும் என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )

நூல் : முஸ்லிம் 2956

19 ) நூறு வருடங்களுக்கு முன்பாகவே யார் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி ஸல் கூறினார்கள் (? )

A ) பணக்காரர்கள்

B ) ஏழைகள்

C ) வயோதிகள்


இதற்கான விடை :

وعن أبي هريرة، رضي الله عنه، قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ "‏ يدخل الفقراء الجنة قبل الأغنياء بخمسمائة عام‏"‏ ‏(‏‏(‏رواه الترمذي وقال‏:‏ جديث حسن 
صحيح‏)‏‏)

பணக்காரர்களை விட நூறு வருடங்களுக்கு முன்பாகவே ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )

நூல் : திர்மிதீ 2353


20 ) “ போரில் மிகச் சிறந்தது எது ? என்று நபி ஸல் கூறினார்கள் ( ? )


A )  இறைவழியில் போர் செய்வது

B )   அநீதக்கார அரசன் முன் சத்தியத்தை எடுத்துரைப்பது

C )   நீதிக்காக போர் செய்வது


இதற்கான விடை :

عن أبي عبد الله طارق بن شهاب البجلي الأحمسي رضي الله عنه أن رجلاً سأل النبي صلى الله عليه وسلم، وقد وضع رجله في الغرز‏:‏ أي الجهاد أفضل‏؟‏ قال‏:‏ “كلمة حق عند سلطان جائر‏"‏ ‏(‏‏(‏رواه النسائي بإسناد صحيح‏)‏‏)‏‏

நபி ஸல் அவர்கள் ஒட்டகையின் ( மீது ஏற ) சேசனத்தில் தன் காலை வைத்தபோது ஒரு மனிதர்போரில் மிகச் சிறந்தது எது ?” என்று கேட்டார். அதற்கு ,” நீதக்கார அரசன் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும்என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அப்துல்லாஹ் என்ற தாரிக் இப்னு ஷிஹாப் அல் பஜலில் அஹ்மஸி ( ரழி )

 நூல்நஸயீ 7/ 161


No comments:

Post a Comment