15.நேரநெருக்கடியின் காரணமாக ஃபஜருடைய முன் சுன்னத் தொழமுடியாமல் போனால் ஃபஜர் தொழுதபின்னர் சுன்னத் தொழுவது அவசியமா?
பதில்
தொழுகையாளி தனித்தோ அல்லது ஜமாத்துடனோ தொழும்போது ஃபர்ளு தொழுகைக்குமுன் உபரியான தொழுகையை தொழ முடிந்தால் அவ்வாறே தொழுது கொள்ளவேண்டும் ஃபர்ளு தொழுகையை தவரவிட்ட நிலையிலொ அல்லது அவர் வரும்போது இமாம் தொழுகையை துவங்கியிருந்தால் அவர்களுடன் அவர் ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளவேண்டும் ஃபர்ளை முடித்தபின்னர் வழமையான
உபரியான தொழுகையை தொழுது கொள்ளவேண்டும் அவர் விரும்பினால் அதனை சூரியன் உதித்து உயரும் வரை தாமதப்படுத்தலாம் இவை அனைத்தும் சுன்னாவில் வந்துள்ள வழிமுறையாகும் சூரியன் உதித்து உயரும் வரை தாமதப்படுத்துவது தான் சிரந்த்தாகும் அதே வேளையில் மறந்து விடுவோம் என அஞ்சினால் ஃபஜ்ருடைய முன் சுன்னதை ஜமாஅத் முடிந்த்தும் தொழுவதில் தவறேதுமில்லை
ஃபஜர் தொழுகைக்கு பின்னர் தொழுகின்ற நபரை பார்த்த நபி அவர்கள்
«أنه رأى
رجل يصلي بعد الفجر، فقال: «أتصلي الصبح أربعا
சுபுஹை நான்கு ரகாஅத் தொழுகிறீர்களா என்று கேட்டார்கள் 1
வேறு அறிவிப்பில் சுபுஹ் தொழுகையை இருமுறையா என்று கேட்டார்கள் என்றுள்ளது அதற்கு அந்த மனிதன்
إني لم
أكن صليت الركعتين اللتين قبلهما فصليتهما الآن، قال: فسكت عنه صلى الله عليه وسلم
நான் ஃபஜ்ருடைய முன் தொழக்க்கூடிய இரண்டு ரகாஅத் தொழவில்லை அதனை இப்போது தொழுகிறேன் என்று கூறினார் அதற்கு நபி அவர்கள் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்தார்கள் 2
சூரியன் உதயமானதற்கு பிறகு தான் தூக்கத்திலிருந்து விழித்து கொள்கிறார் எனில் அவர் முதலாவதாக சுன்னத் தொழுது பின்னர் ஃபஜர் தொழவேண்டும் இப்படித்தான் நபி அவர்கள் செய்தார்கல் சில பயணத்தின் போது சூரிய உதயத்திற்கு பின்னர் தான் எழுந்தார்கள் அப்போது பிலால் அவர்களிடம் அதான் சொல்வதற்கு ஏவினார்கள் பின்னர் வழமையாக செய்வதைப்போன்று இரண்டு ரகாஅத் தொழுது பின்னர் மக்களுக்கு இமாமக நின்று ஃபஜர் தொழுதார்கள் இதுவே சுன்னவாகும் எனவே தூங்கி எழுந்தவருக்கு ஜமாஅத் தவறி விட்டாலோ அல்லது சூரிய உதயத்திற்கு பின் எழுந்தாலோ முதலாவதாக சுன்னத் தொழுது பின்னர் ஃபரளை தொழுது கொள்ளலாம் சுன்னத்தை பிற்ப்படுத்தவேண்டிய அவசியமில்லை.
1 நூல் புஹாரி 663 முஸ்லிம் 711 நஸாயீ 867
2 நூல் அஹ்மத் 23248 அபூதாவூத் 1267 திர்மிதி 422 இப்னு மாஜா1154
மூலம் ஃபதாவா நூருன் அலல் தர்பு 10/352,354
No comments:
Post a Comment