16 .
கேள்வி:
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி
தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு
பின்னால் தொழுவது கூடுமா?
பதில்:
தாங்கள் கூறியதைப்போன்று அவர்கள்
அல்லாஹ் அல்லாதவர்களிடமும்,இறந்தவர்களிடமும்,இன்னும் உயிருடன் இருப்பவர்களில் மறைவாக உள்ளவர்களிடத்திலும்,மேலும் மரங்கள்,கற்ச்சிலைகள்,நட்ச்சத்திரங்கள் போன்றவற்றிடம் உதவிதேடுபவர்களாக இருந்தால் அவர்கள் இனைவைப்பாளர்கள்
ஆவார்கள் இத்தகைய இனைவைப்பு அவர்களை இஸ்லாத்தைவிட்டு வேளியேற்றிவிடும் பெரிய வகை இனைவைப்பாகும்.
நிராகரிப்பாளர்களிடம் நேசம்பாராட்டுவது எவ்வாறு கூட்தோ அதேபோன்றுதான் இவர்களிடமும்
நேசம்பாராட்டுவதுகூடாது.
மேலும் அவர்களுக்கு பின்னால்
நின்றுதொழுவதும் கூடாது.அவர்களுடன் உறவுபாராட்டுவதும் அவர்களுடன்வசிப்பதும் கூடாது.தெளிவான
ஆதாரத்தின்மூலம் அவர்களை நேர்வழியின்பக்கம் அழைப்பவர்களைத்தவிற,அவரது அழைப்பிற்குபதிலளிப்பதன்மூலம் அவர்களது மார்கம்
சீராகும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர் அதனைச்செய்யவேண்டும்.
அப்படி இல்லையெனில் அவர்களைவிட்டு
விலகி வேறு ஜமாஅத்துடன் இனைந்த்து மார்கத்தின் அடிப்படையான,அடிப்படையல்லாதவிஷயங்களை நிலைநாட்டுவதற்கு அதனுடன் ஒத்துழைப்புவழங்கவேண்டும்.
மேலும் நபி அவர்களின் சுன்னாவை
உயிப்பிக்கவும் உதவிசெய்யவேண்டும்.அதற்கு தகுதியான ஜமாஅத்து இல்லாவிட்டால் அனைத்து
குழுக்களையும்விட்டுவிலகி வாழவேண்டும் அதன்காரணமாக அவர் சிரமங்களை அனுபவித்தாலும் சரியே.நபி
ﷺ அவர்கள் கூறினார்கள்
حُذَيْفَةَ بْنَ اليَمَانِ يَقُولُ: كَانَ النَّاسُ يَسْأَلُونَ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الخَيْرِ، وَكُنْتُ
أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ يَا رَسُولَ
اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللَّهُ بِهَذَا
الخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَهَلْ
بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ؟ قَالَ: «نَعَمْ، وَفِيهِ دَخَنٌ» قُلْتُ:
وَمَا دَخَنُهُ؟ قَالَ: «قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي، تَعْرِفُ مِنْهُمْ
وَتُنْكِرُ» قُلْتُ: فَهَلْ بَعْدَ ذَلِكَ الخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ،
دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا»
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صِفْهُمْ لَنَا؟ فَقَالَ: «هُمْ مِنْ جِلْدَتِنَا،
وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا» قُلْتُ: فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي
ذَلِكَ؟ قَالَ: تَلْزَمُ جَمَاعَةَ المُسْلِمِينَ وَإِمَامَهُمْ، قُلْتُ: فَإِنْ
لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ؟ قَالَ «فَاعْتَزِلْ تِلْكَ الفِرَقَ
كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ، حَتَّى يُدْرِكَكَ المَوْتُ
وَأَنْتَ عَلَى ذَلِكَ»
மக்கள் இறைத்தூதர்ﷺ அவர்களிடம் நன்மையைப் பற்றிக்
கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத்
தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான்,
'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும்,
தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம்.
அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்)
நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?'
என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
'ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள்.
நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை
ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டேன்.
நபிﷺ அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க
நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?'
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக்
கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள்.
நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு)
அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து
விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத்
தெரிவியுங்கள்" என்று கேட்க, நபிﷺ அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்;
நம் மொழிகளாலேயே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால்
என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபிﷺ அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும்
(இறுகப்) பற்றிக் கொள்" என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை
(பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபிﷺ அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி
விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை
பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும்
சேராமல் தனித்தே இரு)" என்று பதிலளித்தார்கள்.1
1. அறிவிப்பாளர் ஹுதைஃபதுபின் யமான் நூல் புஹாரி
3606,7084
மூலம் :லஜ்னத்து தாயிமா ஃபத்வா எண்:2787 தொகுதி எண்:-1/102,103
No comments:
Post a Comment