9 . அன்னை உம்மு ஸலமா ( ரழி )
நபித்
தோழியர்களில் ஆரம்ப காலகட்டத்தில்
இஸ்லாத்தைத் தழுவியவர்களில் உம்மு
ஸலமா
( ரழி
) முக்கியமானவர்கள் இவர்களது கணவர்
அபூ ஸலமா ( ரழி )
அவர்களும் ஆரம்ப காலத்திலேயே
இஸ்லாத்தைத் தழுவியவர் தாம்.
ஸுஹைல் , ஆத்திக்கா தம்பதியரின்
மகளாக அன்னை உம்மு
ஸலமா
( ரழி
) பிறந்தார்கள்.
இவர்களது தந்தை அபூ
உமைய்யா என்ற ஸுஹைல்
அன்றைய காலத்தில் மக்களால்
பெரிதும் மதிக்கப்பட்டவர் இவர்
ஸாதுர் ரக்ப ( பயணிகளின்
உபகாரி ) என்று அழைக்கப்பட்டவர்
. மிகப் பெரிய கொடை
வள்ளல் இவருடன் தோழர்கள்
பயணித்தால் உணவு கொண்டு
சொல்ல மாட்டார்களாம் அவரே
மற்றவர்களுக்கும் உணவைக் கொண்டு
வருவாராம். இப்படி மக்களால் பாரட்டபட்ட
ஸுஹைல் அவர்களின் மகளார்
தான் உம்மு ஸலமா
( ரழி
).
அன்னை உம்மு ஸலமா
( ரழி
) அவர்களின் இயற்பெயர் ஹின்த்.
அவர்களுக்கு ஸலமா என்ற
மகன் பிறந்ததிலிருந்து உம்மு
ஸலமா
( ஸலமாவின் தாய் ) என்று
அழைக்கப்பட்டார்கள். அவர்களின் கணவர்
அப்துல்லாஹ்வும் அபூ ஸலமா
( ஸலமா வின் தந்தை
) என்றே அழைக்கப்பட்டார். அன்னை
உம்மு ஸலமா ( ரழி )
அவர்களுக்கு அப்துல்லாஹ் முஹாஜிர்,
ஆமிர், ஸுஹைர் என்ற சகோதர்களும்
கரீபா, சின்ன கரீபா , ருகைய்யா
என்ற சகோதரிகளும் இருந்தனர்.
அன்னை உம்மு ஸலமா
( ரழி
) அவர்களுக்கு அபூ ஸலமா ( ரழி) முதல்
கணவர் ஆவார். அவர்
மூலம் ஜைனப் , ஸலமா
, உமர்,
துர்ரா என்ற நான்கு
குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.
உம்மு ஸலமா ( ரழி )
அவர்களின் குணத்திற்கும் அழகிற்கும்
எற்றவாறு அன்பு நிறைந்த
கணவராக அபூ ஸலமா ( ரழி )
அவர்கள் அமைந்தார்கள் . பிற்காலத்தில்
அவர்களை நினைவு கூறும்
வண்ணம் அபூ ஸலமா ( ரழி )
நடந்து கொண்டார்கள்.அவர்கள் இருவரும்
ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை
ஏற்றிருந்ததால் அவர்களுக்கு இஸ்லாத்தின்
எதிர்கள் மூலம் பெரும்
தொல்லைகள் ஏற்பட்டன.
அல்லாஹ்வை மன நிறைவோடு வணங்கிக்
கொண்டு மக்கா நகரில்
வாழ முடியாது என்ற
நிலை ஏற்பட்டதால் அவர்கள்
இருவரும் அபி ஸீனியாவிற்கு நாடு
துறந்து சென்றனர்.. பின்னர்
உம்மு ஸலமா , அபூ
ஸலமா மற்றும் அபி
ஸீனியாவிற்கு நாடு துறந்து
சென்ற அனைவரும் மதீனா
நகருக்கு நாடு துறந்து
சென்றனர்.
இவ்வாறு புறப்பட்டுச் சென்றவர்களில்
மதீனாவில் நுழைந்த முதன்
பெண்மணி உம்மு ஸலமா
( ரழி
) என்று கூறப்படுகின்றது .
நூல்
: அல் இஸாபா 12061
மதீனா
வாழ்க்கையைத்
தம்
கணவருடன்
மகிழ்ச்சியாகத் தொடங்கினார்கள். அவர்களின்
கணவர்
அபூ
ஸலமா
( ரழி
) பத்ருப்
போரில்
கலந்து
கொண்டார்கள்
அதன்
பின்னர்
நடந்த
உஹுத்
போரில்
கலந்து
கொண்ட
போது
அபூ
உஸாமா
அல்
ஜஷ்மீ
என்பவன்
எறிந்த
அம்பு
அபூ
ஸலமா
( ரழி
) அவர்களின்
தொடையை
பதம்
பார்க்க
ஒரு
மாத
காலம்
மருத்துவம்
செய்தார்கள்
குணம்
அடைந்து
வருவதாக
அவர்கள்
நினைத்திருந்தாலும் அவர்களை
அறியாமல்
புண்
முற்றிக்
கொண்டு
வந்தது
ஹிஜ்ரத்
செய்து
முப்பத்தைந்தாவது மாதத்தின்
துவக்கத்தில்
முஹர்ரம்
மாதத்தில்
நபி
ஸல்
அவர்கள்
ஒரு
படையை
பனூ
உஸைத்
கூட்டாத்தாரிடம் அனுப்பி
வைத்தார்கள்
அக்கூட்டத்தில் அபூ
ஸலமா
( ரழி
) சென்று
பத்து
நாட்கள்
கழித்து
வந்தார்கள்
அப்போது
அவர்களின்
புண்
வெடித்து
நோயுற்று
ஜமாதுல்
ஆகிர்
பிறை
3 ல்
மரணித்தார்கள்.
அபூ ஸலமா ( ரழி ) அவர்களுடன் அன்னை உம்மு ஸலமா ( ரழி ) அவர்கள் வாழ்ந்த போது ,” என்னுடைய கட்டளைக்கு நீ கட்டுப்படுவாயா ?” என்று அபூ ஸலமா ( ரழி ) கேட்டார்கள்.” உங்களுக்குக் கட்டுப்படத் தானே நான் உள்ளேன் “ என உம்மு ஸலமா ( ரழி ) கூறினார்கள். “ அப்படியானால் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் “ என்று கூறிவிட்டு , “ இறைவா ! எனக்குப் பிறகு உம்மு ஸலமாவிற்கு அவரை கவலை கொள்ளச் செய்யாத அவரை நோவினை செய்யாத , என்னை விடச் சிறந்த ஒருவரைக் கொடுப்பாயாக !” என்று பிரார்த்தனை செய்தார்கள் . அவர்கள் இறந்த போது , ‘ அபூ ஸலமாவை விடச் சிறந்த மனிதர் எவர் இருக்கிறார் ‘ என்று நான் கேட்டுக் கொண்டேன் . அவருடன் இப்படி இப்படியெல்லாம் நான் வாழ்ந்தேன் என்று எண்ணிக் கொண்டேன் பின்னர் நபி ஸல் அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள்.
நூல் : தபகாத் இப்னு ஸ அத் பாகம் 8 பக் 88 , அல் இஸாபா 11845
நபி ஸல் அவர்கள் உம்மு ஸலமா ( ரழி ) அவர்களை எவ்வாறு திருமணம் செய்தார்கள் என்ற விபரமும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது
”உங்களில் எவருக்கேனும் துன்பம் ஏற்பட்டால் அவர், “ நிச்சயமாக நாங்கள்
அல்லாஹ்விற்கு உரியவர்கள் ; நிச்சயமாக நாங்கள்
அவனிடமே திரும்பச் செல்வபர்கள்; ( இறைவா !) எனக்கு ஏற்பட்ட
துன்பத்திற்கு உன்னிடமே நன்மையை எதிர்பார்க்கிறேன் . அதற்குரிய கூலியைத்
தருவாயாக ! என்று கூறுங்கள் “ என்று நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
எனது கணவர் அபூ ஸலமா இறக்கும் நேரத்தில் ,” இறைவா ! என் மனைவிக்கு
சிறந்த ஒன்றைப் பகரமாக வழங்கு !” என்று பிரார்த்தித்தார்கள் . அவர்கள் இறந்த
போது,” நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கு உரியவர்கள்; நிச்சயமாக நாங்கள்
அவனிடமே திரும்பச் செல்பவர்கள் ; ( இறைவா ! ) எனக்கு ஏற்பட்ட
துன்பத்திற்கு உன்னிடமே நன்மையை எதிர்ப்பார்க்கிறேன், அதற்குரிய கூலியைத்
தருவாயாக !” என்று கூற எண்ணிய போது அபூ ஸலமாவை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார் என்று நான்
சொல்லிக் கொண்டு இறுதியில் ( அந்த பிரார்த்தனையைக் ) கேட்டு விட்டேன்.
என்னுடைய இத்தா காலம் முடிந்தவுன் அபூபக்ர் ( ரழி ) என்னைப் பெண்
கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன். பின்னர் உமர் ( ரழி ) பெண் கேட்டார்கள்
அவர்களையும் நான் மறுத்து விட்டேன். பிறகு நபி ஸல்
அவர்கள் பெண் கேட்டு அனுப்பினார்கள் அதற்கு ,” நான் ரோஷம்
நிறைந்த பெண் . மேலும் எனக்குக் குழந்தைகள் உள்ளன. எனக்குப் பொறுப்பாளர்களும்
இல்லை” என்று நபி ஸல் அவர்களிடம் தெரிவிக்குமாறு சொல்லியனுப்பினேன்.
‘ நான் குழந்தை உள்ளவளாக இருக்கிறேன் ‘ என்று கூறினீர்கள்
அல்லாஹ் த ஆலா உங்கள்குழந்தைகளுக்குப் போதுமானவனாக இருப்பான் “ நான் ரோஷம்
நிறைந்தவள் “ என்று கூறினீர்கள் உங்கள் ரோஷ உணர்வைப்
போக்கும் வண்ணம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன் . என்னை வெறுக்கக்
கூடிய உங்களுடைய பொறுப்பாளர் இங்கோ வெளியிலோ இல்லை என்று நபி ஸல் அவர்கள் சொல்லியனுப்பினார்கள்.
நான் ( என் மகன் உமரை நோக்கி ) “ உமரே ! என்னை நபி ஸல்
அவர்களுக்குத் திருமணம் செய்து வை ! “ என்று கூறினேன் ( திருமணம் முடிந்தது )
“உன்னுடைய இன்ன சகோதரிக்கு ( அதாவது நபியவர்களின்
மற்ற மனைவிக்கு ) வழங்கிய இரண்டு திருகை , இரண்டு தோல்
பாத்திரம் , பேரீத்த நார்கள் அடைக்கப்பட்ட தலையணை
இவற்றில் அதையும் நான் உனக்குக் குறைத்து வழங்க மாட்டேன் “ என்று நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல் அவர்கள் என்னிடம் வருவார்கள் ( என் மகள் ) ஜைனபிற்குப்
பால் கொடுப்பதற்காக நான் மடியில் வைத்திருந்த போது அவர்கள் வந்தார்கள் அவர்கள் வெட்ட
உணர்வு கொண்டவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருந்தார்கள். இதனால் திரும்பிச்
சென்று விட்டார்கள். இப்படி பல முறை
நடந்தது.
இதை கண்ட அம்மார் பின் யாஸிர் ( ரழி ) ஒரு நாள் வந்தார்கள்
அவர்கள் என் தாய்வழிச் சகோதர் ஆவார்கள் அவர்கள் ஒருமுறை என் வீட்டிற்கு வந்த போது ஜைனப்
என் மடியில் அமர எத்தனித்தார். உடனே அவர்கள் “ நபி ஸல் அவர்களுக்கு
இடயூறு செய்யும் இவளை என்னிடம் தாருங்கள் “ என்று கூறினார்கள்.
அதன் பின் நபி ஸல் அவர்கள் வந்தார்கள், “ ஜைனப் எங்கே ? என்னவானாள் ? என்று வினவினார்கள் , “ அம்மார் வந்தார் ; ஜைனப் நடந்து
கொள்வதைத் கண்டு தூக்கிச் சென்று விட்டார் “ என்று கூறினேன் ( அன்று ) நபி ஸல் அவர்கள்
உறவு கொண்டார்கள் , பின்னர் “ நீ விரும்பினால்
உன்னிடம் ஏழு நாங்கள் தங்குகிறேன் இதைப் போன்று மற்ற மனைவியரிடமும் தங்குகிறேன் “ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா ( ரழி )
நூல் : முஸ்னத் அஹ்மத் ( 25496 ) ( 25497 ) ( 25320 )
இப்னு ஸ அத் அவர்களின் தபகாத்துல் குப்ரா
எனும் நூலில் , “ நீ விரும்பினால் ஏழு நாட்கள் உன்னிடமும் மற்ற மனைவியரிடமும்
தங்குகிறேன் ; நீ விரும்பினால் மூன்று நாட்கள் உன்னிடம் தங்குகிறேன் , மனைவியரிடம் சுழ்ற்சி முறையில் சென்று வருகிறேன்” என்றார்கள் அதற்கு
உம்மு ஸலமா ( ரழி ) அவர்கள் மூன்று நாட்கள் போதும் என்று
கூறியதாக இடம் பெற்றுள்ளது.
உம்மு ஸலமா (ரழி ) அவர்களை நபி ஸல் அவர்களுக்காகப் பெண் கேட்டுச் சென்றவர் ஹாதிப் பின் அல் பல்த ஆ ( ரழி ) ஆவார் என்ற
செய்தி முஸ்லிமில் 1674 ல் இடம் பெற்றுள்ளது
“என்னை நபி ( ஸல் ) அவர்கள் திருமணம்
செய்தவுடன் அவர்களின் மற்றொரு மனைவி ஜைனப் பின்த் குஸைமா ( ரழி ) அவர்கள் தங்கியிருந்த
வீட்டில் என்னைத் தங்க வைத்தார்கள் ( அப்போது ஜைனப் ( ரழி ) உயிருடன் இல்லை ) அங்கு சிறிதளவு
பார்லீ, ஒரு திருகை , ஒரு கல் பாத்திரம் , கால் குளம்பும்
இருந்தது, நான் பார்லியை திருகையில் அரைத்து , அரித்து, கல் பாத்திரத்தில்
போட்டு மாவாக்கினேன் . கால் குளம்பை
வைத்து குழம்பு வைத்தேன். இது தான் நபி
ஸல் அவர்களுக்கு உணவாகவும் திருமண நாளில் அவர்களது குடும்பத்தினரின் உணவாகவும் இருந்தது “ என உம்மு ஸலமா ( ரழி ) தெரிவிக்கின்றார்கள்.
நூல் : தபகாத் இப்னு ஸ அத் பாகம் 8 பக் 92
திருமணம் புரிந்த அன்றே வேலைகளை தொடங்கிய
சிறப்பு மிகுந்த பெண்னாக உம்மு ஸலமா ( ரழி ) திகழ்ந்தார்கள்.
இதைப் பற்றி முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் கன்தப் அவர்கள் ,” இஷாவின் ஆரம்பத்தில்
முஸ்லிம்களின் தலைவர் வீட்டில் ( மனைவியாக ) ஒரு அரபுல விதவைப்
பெண் நுழைந்து இரவின் கடைசியில் மாவு அரைப்பவர் ஆனார் “ என்று குறிப்பிடுகின்றார்.
நூல் : தபகாத் இப்னு ஸஅத் பாகம் 8 பக் 92
உம்மு ஸலமா ( ரழி ) அவர்களை நபி ஸல் அவர்கள் ஷவ்வால் மாதத்தில் திருமணம் புரிந்தார்கள் அதே ஷவ்வால்
மாதத்திலேயே உறவும் கொண்டார்கள்.
நூல் : தபகாத் இப்னு
ஸ அத் பாகம் 8 பக் 95
உம்மு ஸலமா ( ரழி ) அவர்கள் நபி ஸல் அவர்களைத் திருமணம் புரிந்த போது அவர்கள் வயது
முதிர்ந்தவர்களாக இருந்தார்கள் எனினும் அழகிய தோற்றமுள்ளவர்களாகக் காட்சியளித்தார்கள்.
நபி ஸல் அவர்கள்
உம்மு ஸலமா ( ரழி ) அவர்களைத் திருமணம்
புரிந்த போது அவர்களின் அழகைப் பற்றி எங்களிடம் கூறப்பட்டதால் நான் மிகவும் கவலையடைந்தேன்
அவர்களைப் பார்த்தேன் .அல்ல்லாஹ்வின்
மீது ஆணையாக ! எனக்குத் தெரிவிக்கப்பட்ட அழகை விடப்
பன்மடங்கு கூடுதலாகவே கண்டேன். இதுபற்றி நான்
ஹஃப்ஸா ( ரழி ) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் ,” அல்லாஹ்வின்
மீது ஆணையாக ! இது ரோஷ உணர்வால் ஏற்பட்டது தான். அவர்கள் வர்ணிக்கும்
அளவுக்கு அழகுள்ளவராக இருக்க முடியாது “ என்று கூறி
விட்டு உம்மு ஸலமாவைப் பார்த்தார்கள். பின்னர் ,” அல்லாஹ்வின்
மீது ஆணையாக ! அவர்கள் நீங்கள் கூறும் அளவுக்கு மிக
அழகானவர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள்
அழகு நிறைந்தவர் தான் “ என்று ஹஃப்ஸா ( ரழி ) கூறினார்கள்
பின்னர் நான் அவர்களைப் பார்த்த போது ஹஃபஸா ( ரழி ) கூறியதைப் போன்று
தான் இருந்தார்கள் என் ரோஷ உணர்வு தான் இவ்வாறு எண்ணச் செய்து விட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல் : தபகாத் இப்னு ஸ அத் பாகம் 8 பக் 94
உம்மு ஸலமா ( ரழி ) அவர்களுக்கும் ஆயிஷா ( ரழி ) அவர்களுக்கும் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட்ட துண்டு.
நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் சண்டை
வந்துள்ளது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல ஏனெனில் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களும் மனிதர்கள்
தான் மற்ற மனிதர்களிடம் இருக்கும் பண்புகள் அவர்களிடமும் இருக்கத் தான் செய்யும் , எனினும் இறைவனின் போதனைகள் வரும் போது
உடனே தமது தவறுகளை திருத்திக் கொள்ளக் கூடிய நற்பண்புகள் அவர்களிடம் நிறைந்திருந்தன.
மேலும் நபி ஸல் அவர்கள் மற்ற ஆன்மீகத்
தலைவர்களை போன்று மனைவிகளை அடக்கி ஒடுக்கி எதைக் கூறினாலும் கேட்க வேண்டும் என்ற நிலையை
ஏற்படுத்தவில்லை. தவறு என்று அவர்கள் மனதிற்குள் பட்டால் அதைத் தைரியமாக கேட்கலாம்
என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தது நபிகளாரின் உயர் பண்புகள் எடுத்துகாட்டாகும்.
Hello
ReplyDelete