Tuesday, December 13, 2016

வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 11 முதல் 15 வரை


வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 11 முதல் 15 வரை 


11 )அல்லாஹுவிடம் மக்களில் மிக மேன்மையானவராகத் திகழ்பவர் யார் என்று நபி ஸல் கூறினார்கள் ????


A ) ஸலாம் கூறுவதை முதலில் ஆரம்பித்தவர்கள்


B ) பசித்தவர்களுக்கு மறைமுகமாக உணவு அளித்தவர்கள்


C ) ரகசியமாக தர்மம் செய்பவர்கள்



இதற்கான விடை :

وعن أبي أمامة صُدي بن عجلان الباهلي رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ “إن أولى الناس بالله من بدأهم بالسلام‏"‏ ‏(‏‏(‏رواه أبو داود )‏‏)

ஸலாம் கூறுவதை அவர்களில் முதலில் ஆரம்பித்தவர்தான் , அல்லாஹ்விடம் மக்களில் மிக மேன்மையானவராக திகழ்வார் என்று நபி ஸல் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூ உமாமா சுதய் இப்னு அஜ்லான் பாஹிலீ ( ரழி )

நூல் : அபூதாவூத் ( 5197 )


12 ) “ தர்மத்தில் மிகச் சிறந்த தர்மம் எது என்று அல்லாஹுவின் தூதர் கூறினார்கள் ????




A ) யாசகம் கேட்காத நபர்க்கு கூடும் தர்மம்


B ) அல்லாஹுவின் வழியில் போர் புரிபவருக்கு செய்யும் தர்மம்


C ) அனதைகளுக்கு செய்யும் தர்மம்


இதற்கான விடை :

وعن أبي أمامة رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ "‏أفضل الصدقات ظل فسطاط في سبيل الله، ومنيحة خادم في سبيل الله، أو طروقة فحل في سبيل الله‏"‏ ‏(‏‏(‏رواه الترمذي وقال‏:‏ حديث حسن صحيح‏)‏‏

தர்மத்தில் மிகச் சிறந்தது, அல்லாஹ்வின் வழியில் ( உள்ளவருக்கு ) நிழல் தரும் கூடாரம் வழங்குவதாகும். மேலும் அல்லாஹ்வின் வழியில் உள்ளவருக்கு ஒரு ஊழியரையோ அல்லது அல்லாஹ்வின் வழியில் பெண் ஓட்டகை ஒன்றையோ வழங்குவதாகும் என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா ( ரழி )

நூல் : திர்மிதீ ( 1627 )


13 ) மக்களில் சிறந்தவர் யார் என்று நபி ஸல் கூறினார்கள் ??

A )  நற்குணம் கொண்டவர்

B )  உண்மையே கூறுபவர்

C ) குர் ஆனைக் கற்று அதை கற்றுக் கொடுப்பவர்

இதற்கான விடை :

وعن عثمان بن عفان رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ "‏خيركم من تعلم القرآن وعلمه‏"‏ ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏

குர் ஆனை கற்று அதை ( பிறருக்கும் ) கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார் என்று நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் இப்னு அஃப்பான் ( ரழி )

நூல் : புகாரி (5027 )


 14 )நபி ( ஸல் ) அவர்களும் , படையினரும் மேடுகளில் ஏறினால் --------- கூறுபவர்களாகவும் பள்ளங்களில் இறங்கினால் ------------ கூறுபவர்களாகவும் இருந்தனர் ???


A ) தக்பீர்

B ) தஸ்பீஹ்

C ) தக்பீர் மற்றும் தஸ்பீஹ்


இதற்கான விடை :

وعن ابن عمر رضي الله عنهما قال‏:‏ كان النبي صلى الله عليه وسلم وجيوشه إذا علو الثنايا كبروا، وإذا هبطوا سبحوا‏.‏ ‏(‏‏(‏رواه أبو داود بإسناد صحيح((

 நபி ( ஸல் ) அவர்களும் , படையினரும் மேடுகளில் ஏறினால் தக்பீர்கூறுபவர்களாகவும் பள்ளங்களில் இறங்கினால் தஸ்பீஹ் கூறுபவர்களாகவும் இருந்தனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ( ரழி )

நூல் : அபூதாவூத் ( 2599 )


 15) நபி ஸல் அவர்கள் ------------ தொழுகையை நான்கு ரக் அத்துகள் ( இரண்டு இரண்டாக தொழுவார்கள்.அல்லாஹ் நாடிய அளவுக்கு அதிகமாக்கிக் கொள்வார்கள் ???


A ) லூஹா தொழுகை

B ) இரவு தொழுகை

C )  நஃபிலான தொழுகை

இதற்கான விடை :


وعن عائشة رضي الله عنها قالت‏:‏ كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعًا ويزيد ما شاء الله ‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏

 நபி ஸல் அவர்கள் , லூஹா தொழுகையை நான்கு ரக் அத்துகள் ( இரண்டு இரண்டாக தொழுவார்கள் , அல்லாஹ் நாடிய அளவுக்கு ( சில நேரம் ) அதிகமாக்கிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா ( ரழி )


நூல் : முஸ்லிம் 719

No comments:

Post a Comment