Sunday, January 1, 2017

துன்பத்தின் போது…



43 . துன்பத்தின் போது…


عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ ‏"‏‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துன்பத்தின்காரணமாகக்) கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்'.

அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 1297 ) முஸ்லிம் ( 103 ) திர்மிதீ ( 999 ) நஸாயீ ( 1860 ) இப்னு மாஜா ( 1584 ) அஹ்மத் ( 3650 )

விளக்கம் ;

மனிதனின் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். அப்போது பொறுமை மேற்கொள்வது இறை நம்பிக்கையாளரின் கடமையாகும். ஆனால் பலர் துன்ப நேரங்களில் கன்னங்களில் அறைந்து கொள்வதும் சட்டையைக் கிழித்துக் கொள்வதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


இவ்வாறு நடந்து கொள்பவர்கள் இஸ்லாமியர்களாகக் கணிக்கப்பட்ட மாட்டார்கள். துன்பங்கள் நேரும் போது , படைத்தவன் நம்மைச் சோதிக்கின்றான் என்று எண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து , ` இறைவா ! இந்தச் சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு ! இதை விடச் சிறந்ததை வழங்கு ` என்று கூற வேண்டுமே தவிர, கன்னங்களில் அடித்துக் கொள்வதும் , சட்டைகளை கிழித்துக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் கண்டிப்பாகக் கூடாது.

No comments:

Post a Comment