Wednesday, January 11, 2017

நூதனப் பழக்கம்



46.   நூதனப் பழக்கம்


عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي أُنَاسٌ يُحَدِّثُونَكُمْ مَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلاَ آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ ‏"‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரிடையே சிலர் தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது) ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் ( 13 ) அஹ்மத் ( 8427 )

விளக்கம் :

இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர் ஆன் மற்றும் நபிமொழி ஆகும். இந்த இரண்டின் அடிப்படையில் தான் நம் வாழ்க்கை மற்றும் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று இந்த இரண்டையும் விட்டு விட்டுப் புதிய புதிய வணக்க வழிபாடுகளைக் கொண்டு வருகின்றனர். நபிகளார் காலத்தில் இல்லாத புதிய வணக்கங்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன. அவற்றுக்குத் திருக்குர் ஆனிலும் நபிமொழியிலும் இல்லாத செய்திகளை சான்றாகக் காட்டுவார்கள்.

இந்த அவ்லியா இப்படிச் செய்தார் , அவர் அப்படிச் செய்தார். அந்த மகான் இப்படிச் சொன்னார் என்று சொல்வார்கள். இப்படி மார்க்கத்தைப் புரட்டுபவர்கள், மார்க்கத்தில் இல்லாததைச் சொல்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


இஸ்லாத்தின் அடிப்படை இரண்டு மட்டுமே ! திருக்குர் ஆன் , ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் . இந்த இரண்டில் இல்லாத இந்த இரண்டும் அங்கீகரிக்காத எந்தச் செயலைச் செய்தாலும் அல்லாஹ்விடத்தில் அதற்கு அங்கீகாரம் கிடைக்காது தண்டனை தான் கிடைக்கும்.

No comments:

Post a Comment