Wednesday, January 11, 2017

அங்கீகாரம் இல்லாத அமல்கள்



47. அங்கீகாரம் இல்லாத அமல்கள்


عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‏"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புஹாரி ( 2578 ) முஸ்லிம் ( 3540 ) அபூதாவூத் ( 4053 ) இப்னு மாஜா ( 14 ) அஹ்மத் ( 24579 )

விளக்கம் :

இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையை விளக்கும் ஒரு நபிமொழியாகும் இது ! இன்று மார்க்கத்தின் பெயரால் எத்தனையோ புதுமையான அமல்கள் நிறைந்துள்ளன. இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை முழுமையாக மறைக்கும் அளவிற்கு இந்தப் புதிய களைகள் நிறைந்து விட்டன.

இவற்றைப் பிடுங்கி எறியாவிட்டால் இஸ்லாம் முழுமையாக இவற்றில் மூழ்கிப் போய்விடும்.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள ஒவ்வொரு அமலும் மார்க்க அங்கீகாரம் இல்லாததாகவே இருக்கின்றது மவ்லித் ஓதுதல் , ஒன்று , ஏழு ,  நாற்பது மற்றும் வருட பாத்திஹாக்கள் ஓதுதல் , தொழுகை முறைகள் , தர்ஹா வழிபாடுகள் என்று ஏராளமான மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இவை வளர்வதற்குக் காரணம் இந்த நபிமொழியைப் பற்றி விளங்காதது தான்.


மார்க்கம் தொடர்பான எந்த அமலாக இருந்தாலும் இதற்கு நபிகளாரின் அங்கீகாரம் இருக்கிறதா ? கட்டளையிடுக்கிறதா ? என்ற கேள்வியை மட்டும் நாம் கேட்டு அமல் செய்தால் தற்போது முளைத்திருக்கும் இந்தக் களைகள் அனைத்தும் இல்லாமல் போய்விடும்.


No comments:

Post a Comment