48. சிந்தித்துப்
பேசுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم يَقُولُ "
إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ فِيهَا، يَزِلُّ
بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ الْمَشْرِقِ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார்.
அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில்
நரகத்தில் விழுகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 6477 ) முஸ்லிம் ( 5438 ) திர்மிதீ ( 2341 ) இப்னு மாஜா (
3997 ) அஹ்மத் (8759 ) முத்தா மாலிக் ( 1810 )
விளக்கம் :
மனிதனின் உறுப்புகளில் நாக்கு முக்கியமான உறுப்பாகும் இதன் மூலம் ஏராளமான நன்மைகளைப்
பெறும் மனிதன் இதனால் இழிவடையவும் செய்கின்றான்.
நல்லதைப் பேசுவதற்கும் , நன்மையை மற்றவர்களிடம் எடுத்துரைப்பதற்கும் பயன்படும்
இந்த நாவு, மற்றவர்களைப் கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் பயன்படுகிறது சில நேரங்களில்
நரகத்தின் அடிபாதாளத்தில் விழும் நிலை ஏற்படுகிறது.
இதனால் தான் மனிதனிடம் அதிகம் பயப்பட வேண்டியது நாவு என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மனிதன் சில நேரங்களில் பயன்படுத்தும் வார்த்தைகள் பல குடும்பங்களைப் பிரிப்பதற்கும்
, சில உயிரைப் பறிப்பதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது . எனவே எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும்
அளந்து கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment