Monday, January 23, 2017

போதுமென்ற மனம்



56.  போதுமென்ற மனம்


عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ ‏"‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 6446 ) திர்மிதீ ( 2402 ) இப்னு மாஜா ( 4170 ) அஹ்மத் ( 7169 )

விளக்கம் :

மனிதனுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்றே ஆசைப்படுவான். அதனால் தான் நபி ஸல் அவர்கள் , “ஆதமின் மக்களுக்கு இரண்டு தங்க ஓடைகள் இருந்தாலும் அவனுக்கு இன்னொரு ஓடை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுவான். மண்ணறையில் வைத்தால் மட்டுமே அவனது ஆசை நிறைவு பெறும்” என்று கூறினார்கள்.

மனிதனுக்கு இறந்து போகும் வரை ஆசை இருக்கும் என்பதால் நமக்குக் கிடைப்பதைப் பொருந்திக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் வாழ்க்கை நிம்மதியானதாக அமையும் இருப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒருவன் கற்றுக் கொண்டால் அவன் தான் உண்மையில் மிகப் பெரிய செல்வந்தன்.


பேராசைப்பட்டு பணம் பணம் என்றலைந்தால் மிஞ்சப் போவது அலைச்சலும் மன உளைச்சலும் தான். எனவே உழைப்போம் ; இருப்பதை வைத்து நிறைவு பெறுவோம்.

No comments:

Post a Comment