Saturday, January 28, 2017

நரகத்தின் கடுமை



59. நரகத்தின் கடுமை

قَالَ سَمِعْتُ النُّعْمَانَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَةٌ يَغْلِي مِنْهَا دِمَاغُهُ‏"‏.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரின் மூளை கொதிக்கும்.

என நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 6561 ) முஸ்லிம் ( 345 ) திர்மிதீ ( 2646 ) அஹ்மத் ( 18107 )

விளக்கம் :

மறுமையில் தீயவர்களுக்குக் கடும் தண்டனை காத்திருக்கிறது அந்தத் தண்டனையிலிருந்து மீள்வதற்கு இவ்வுலகில் இறைவன் தடுத்த காரியங்களிலிருந்து தவிர்ந்து கொண்டு அவன் கடமையாக்கிய செயல்களை நிறைவேற்றி வர வேண்டும்.


இவ்வுலகில் செய்யும் தவறுகளுக்கு மறுமையில் தரப்படும் தண்டனை மிக மிகக் கடுமையானாதாகும் அவற்றை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது மறுமை நாளில் மிக மிகக் குறைவான தண்டனை பெறுபவனுக்கு அவனது காலுக்கு கீழ் நெருப்புக் கங்கு வைக்கப்படும் அதன் கடுமை எவ்வளவு பெரிதாக இருக்குமென்றால் அவன் மூளையே கொதிக்கும்  சிறிய தண்டனையே இப்படி இருக்குமானால் பெரிய பெரிய தண்டனை பெறுபவர்கள் எத்தகைய துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பதை எண்ணிப் பார்த்து பாவமான காரியங்களீலிருந்து முற்றிலும் தவிர்ந்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment