Monday, January 30, 2017

மனத் தூய்மை



60. மனத் தூய்மை

قَالَ سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَيْرَهُ فَدَنَوْتُ مِنْهُ فَسَمِعْتُهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ ‏"‏‏.‏

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்' என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பாளர் ஸலமா இப்னு குஹைல்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப்(ரலி) அவர்கள் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டதில்லை.பகுதி
இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காக மனதுடன் போராடுவது.

நூல் : புஹாரி ( 6499 ) முஸ்லிம் ( 5436 ) இப்னு மாஜா ( 4241 ) அஹ்மத் ( 18507 )

விளக்கம் :

இறைவனுக்குச் செய்யும் எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும் மனத் தூய்மை இல்லாத எந்த அமலும் அது பெரிதாக இருந்தாலும் சரி ! சிறியதாக இருந்தாலும் சரி ! அது ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்த அடிப்படை உணமையை விளங்காத பலர் அரசியல்வாதிகளைப் போல் விளம்பரத்திற்காகச் செயல்படுவதைப் பார்க்கிறோஒம் அடுத்தவர்கள் தர்மம் செய்யும் போது கூட அதை விளம்பரப்படுத்தி அதில் தம்  பெயரையும் இணைத்து நான் தான் வழங்கினேன் என்று கூறுவதையும் அடுத்தவர்கள் புகழ வேண்டுமென்பதற்காக வணக்கங்களில் ஈடுபடுவதையும் பார்க்கிறோம்.

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றான ஹஜ் என்ற கடமையைக் கூட இன்று நாங்கள் ஹஜ் செய்யச் செல்கிறோம் என்றூ போஸ்டர்கள் பேனர்கள் மாலைகள் விருந்துகள் என விளம்பரம் செய்வது தங்கல் நன்மைகளைத் தாங்களே அழித்துக் கொள்ளும் காரியமாகும் இவ்வாறு செய்யும் மக்களை மறுமை நாளில் அல்லாஹ் அம்பலப்படுத்தி அவர்களின் நன்மைகளை இல்லாமல் ஆக்கி விடுவான்.
எனவே வணக்க வழிபாடுகளில் மனத் தூய்மையுடன் செயல்பட முயல வேண்டும்


இத்துடன் இந்த நபிமொழி தொகுப்பு நிறைவு பெறுகிறது ….

No comments:

Post a Comment