Tuesday, March 21, 2017

அல்லாஹ்வின் நல்லடியார்களிடம் உதவி தேடுவது



54. அல்லாஹ்வின் நல்லடியார்களிடம் உதவி தேடுவது


رواه الطبراني في المعجم الكبير (17 /117) من طريق عبد الرحمن بن شريك قال : حدثني أبي ، عن عبد الله بن عيسى ، عن زيد بن علي ، عن عتبة بن غزوان ، عن نبي الله صلى الله عليه وسلم قال : (إذَا أَضَلَّ أَحَدُكُمْ شَيْئًا ، أَوْ أَرَادَ أَحَدُكُمْ عَوْنًا ، وَهُوَ بِأَرْضٍ لَيْسَ بِهَا أَنِيسٌ ، فَلْيَقُلْ : يَا عِبَادَ اللَّهِ أَغِيثُونِي ، يَا عِبَادَ اللَّهِ أَغِيثُونِي ، فَإِنَّ لِلَّهِ عِبَادًا لا نَرَاهُمْ).
وهذا الحديث فيه ثلاث علل توجب ضعفه
எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும்.
(ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹஸீன்)

ப்ரானியில் (பாகம் 12 பக்கம் 44) சில வாசக மாற்றத்துடன் இவர்கள் கூறும் செய்தி இடம்பெறுகிறது.
இதுவும் பல காரணங்களால் மிகவும் பலவீனமான செய்தியாகும்.
இதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பார் ஹதீஸ் துறையில் மிகவும் மோசமானவர் ஆவார்.
இவ்வாறு அபூஹாதம் விமர்சித்துள்ளார்.
தஹ்தீபுல் கமால் பாகம் 17 பக்கம் 170
இதில் இடம் பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் மீதும் நினைவாற்றல் ரீதியாக விமர்சனம் உள்ளது.
அதுதவிர இச்செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகும்.
ஏனெனில் இதில் ஜைது பின் அலீ என்பவர் உத்பா பின் கஸ்வான் ரலி யிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது.
இதில் ஜைது பின் அலீ ஹிஜ்ரி 122ல் மரணமடைகிறார்.
தாரீகுல் கபீர் பாகம் 2 பக்கம் 403
அப்படி எனில் சுமார் ஹிஜ்ரி 20 ல் பிறந்திருப்பார் என்று பார்த்தாலும் கூட உத்பா ரலி யிடமிருந்து ஜைது அறிவிக்க இயலாது. ஏனெனில் உத்பா ரலி ஹிஜ்ரி 20 க்குள் மரணித்து விட்டதாக வரலாறு சொல்கிறது.
எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகவும் இருப்பதால் இது முழுக்க பலவீனமானகும்.
தப்ரானியின் மற்றொரு அறிவிப்பில் (பாகம்9 பக்கம்67) மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பார் இடம்பெறுகிறார்.
இவரது நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் அதுவும் பலவீனம் ஆகும்.
(அல்ஜரஹ் வத்தஃதீல்  பாகம் 8 பக்கம் 323)

No comments:

Post a Comment