📚மார்க்க விளக்க கேள்வி-பதில்
21. ஆதமுக்கு பணியுங்கள் என்று இறைவன் கூறிய போது
பணிய மறுத்தவன் யார்? எதற்காக மறுத்தான்? அதற்கு இறைவன் செய்தது என்ன?
✏பதில்: ஆதமுக்கு பணியுங்கள் என்று இறைவன் கூறிய
போது பணிய மறுத்தவன் இப்லீஸ்.
"நான் உனக்குக் கட்டளையிட்ட
போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான்.
"நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.
"இங்கிருந்து நீ இறங்கி விடு!
இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 7:11,12,13
22. இஸ்ரவேலர்களுக்கு பிர்அவ்ன் செய்த கொடுமை என்ன?
✏பதில்: இஸ்ரவேலர்களுக்கு கடுமையான வேதனையை அனுபவிக்கச்செய்தான்.
அவர்களது ஆண் குழந்தைகளை கொன்றான்.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:49
23. இறைவன் "கட்டுபடு" என்று கூறிய போது
"அகிலத்தின் இறைவனுக்கு கட்டுபட்டேன்" என்று கூறியவர் யார்?
✏பதில்: இப்ராஹிம் (அலை)
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:131
44. கிப்லா மாற்றத்திற்கான காரணமாக இறைவன் கூறுவது
என்ன?
✏பதில்: இத்தூதரை பின்பற்றுவோர் யார் என்பதையும் மார்க்கத்தை விட்டும் விரண்டு ஓடுபவர்
யார் என்பதை பிரித்துக்காட்டுவதற்காக கிப்லா மாற்றம் நிகழ்ந்தது.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:143
25. முஃமின்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பதாக
கூறுகிறான்?
✏பதில்: ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி
கூறுவீராக!
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:143
26. நபி (ஸல்) அவர்கள் எவற்றை தற்பெருமை என்று கூறினார்கள்?
✏பதில்: உண்மையை மறுப்பதும், மக்களை கேவலமாக கருதுவம்.
📒ஆதாரம்: முஸ்லிம் 147
27.தொழுகைக்கு நபியே முன்மாதிரி என்பதற்காக ஆதாரம்
என்ன?
✏பதில்: "என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே
நீங்களும் தொழுங்கள்" என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
📒ஆதாரம்: புகாரி 631
28. எந்த இரண்டு நபர்களின் மீது மட்டும் பொறாமை கொள்ளலாம்?
✏பதில்: நல்ல வழியில் செலவு செய்பவர், அல்லாஹ் வழங்கிய அறிவு ஞானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி கற்றுக்கொடுப்பவர்.
📒ஆதாரம்: புகாரி 73
29. எதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக்கொண்டு
பிறகு அதை நாம் குதிரைக்குட்டியை வளர்ப்பதை போன்று வளர்த்து மலைப்போல் உயரச்செய்கிறான்?
✏பதில்: முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரிச்சம்
பழத்தின் அளவுக்கு தர்மம் செய்தவர்
📒ஆதாரம்: புகாரி 1410
30. கவ்ஸர் தடாகத்தில் தடுக்கப்படுவோர் யார்?
✏பதில்: மார்க்கத்தின் பெயரால் புதிது புதிதாக
உருவாக்கியதால்.
📒ஆதாரம்: புகாரி 6584
No comments:
Post a Comment