8. கொட்டாவி மற்றும் தும்மல்
தும்மல் இறைவனிடமிருந்தும் கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا
عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ
وَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنْ الشَّيْطَانِ فَلْيَرُدَّهُ مَا
اسْتَطَاعَ فَإِذَا قَالَ هَا ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ رواه البخاري
அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான்.
(உங்களில் ஓருவர்) தும்பி அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கு) என்று
கூறினால் அவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக) என்று கூறுவது
அதை கேட்ட ஓவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். கொட்டாவி ஷைத்தானிடமிருந்த தான் ஏற்படுகிறது.
முடிந்த அளவு அதை அவர் அடக்கிக்கொள்ளட்டும். ஏனெனில் கொட்டாவியால் ஹா என்று அவர் சப்தமிடும்
போது அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6223
கொட்டாவியை முடிந்த அளவுக்கு அடக்கிக் கொள்ள வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ
الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَحَقٌّ
عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ وَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا
هُوَ مِنْ الشَّيْطَانِ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ فَإِذَا قَالَ هَا ضَحِكَ
مِنْهُ الشَّيْطَانُ رواه البخاري
கொட்டாவி ஷைத்தானிடமிருந்து ஏற்படுகிறது. உங்களில் ஒருவருக்கு
கொட்டாவி வந்தால் அவர் அதை முடிந்த அளவு அடக்கிக்கொள்ளட்டும். ஏனெனில் உங்களில் ஒருவர்
ஹா என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 3289
தும்மியவர் சொல்ல வேண்டியது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا عَطَسَ
أَحَدُكُمْ فَلْيَقُلْ الْحَمْدُ لِلَّهِ وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ
يَرْحَمُكَ اللَّهُ فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ فَلْيَقُلْ يَهْدِيكُمُ
اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ رواه البخاري
உங்களில் ஒருவர் தும்பினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும்
அல்லாஹ்வுக்கு) என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு எர்ஹமுக்கல்லாஹ்
(அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக) என்று கூறட்டும். எர்ஹமுக்கல்லாஹ் என்று அவர்
கூறினால் (தும்பியவர்) அவருக்கு யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் (அல்லாஹ் உங்களுக்கு
நேர்வழி காட்டுவானாக. உங்கள் நிலையை சீர்செய்வானாக.) என்று கூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6224
தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால்தான் பதில் சொல்ல வேண்டும்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتْ الْآخَرَ فَقِيلَ لَهُ فَقَالَ
هَذَا حَمِدَ اللَّهَ وَهَذَا لَمْ يَحْمَدْ اللَّهَ رواه البخاري
நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் தும்பினார்கள். நபி(ஸல்)
அவர்கள் அவர்களில் ஓருவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறினார்கள். இன்னொருவருக்கு எர்ஹமுக்கல்லாஹ்
என்று கூறவில்லை. (இதைப் பற்றி) அவர்களிடத்தில்
கேட்கப்பட்டது. இவர் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினார். இவர் அல்ஹம்து லில்லாஹ் என்று
கூறவில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பாளார் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6221
தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் அவருக்கு பதில் சொல்வதும்
ஒரு முஸ்லிமின் கடமைதான்
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حَقُّ
الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيضِ
وَاتِّبَاعُ الْجَنَائِزِ وَإِجَابَةُ الدَّعْوَةِ وَتَشْمِيتُ الْعَاطِسِ رواه
البخاري
ஒரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.
1. சலாமிற்கு
பதில் சொல்லுதல்.
2. நோயாளியை
நலம் விசாரித்தல்.
3. ஜனாசாவை
பின்தொடர்ந்து செல்லுதல்.
4. அழைப்பை
ஏற்றுக்கொள்ளுதல்.
5. தும்பியவருக்கு
எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (1240)
No comments:
Post a Comment