Sunday, May 21, 2017

புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 02 )

                                       புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 02 )



06. தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவிப்பது.


عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُوجِزُ الصَّلاَةَ وَيُكْمِلُهَا‏.
அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்.( புஹாரி 706 )

07. இகாமத்" கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவது.

سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ‏"‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.'

என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். ( புஹாரி 717 )

08. அல்ஹம்து சூரா ஓதாதவருக்கு தொழுகை இல்லை

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ ‏"‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.' இதை உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 756 )

09. ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும்,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ‏"‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 877 )

10. மழை பொழியும் போது கூற வேண்டியவை.

عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ ‏ "‏ صَيِّبًا نَافِعًا ‏"‏‏.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)' என்று கூறுவார்கள். ( புஹாரி 1032 )

No comments:

Post a Comment