Thursday, May 18, 2017

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ( பகுதி 04 )


                                                           9. சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ( பகுதி 04 ) 




வலப் பக்கத்தில் இருப்பவருக்கே முன்னுரிமை

صحيح البخاري (7 / 109):
 أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، وَأَتَى دَارَهُ [ص:110]، فَحَلَبْتُ شَاةً، فَشُبْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ البِئْرِ، فَتَنَاوَلَ القَدَحَ فَشَرِبَ، وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، فَأَعْطَى الأَعْرَابِيَّ فَضْلَهُ، ثُمَّ قَالَ: «الأَيْمَنَ فَالأَيْمَنَ»

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, 'வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)' என்று கூறினார்கள்.

நூல் : புஹாரி ( 5612 ) முஸ்லிம் ( 2029 ) அபூதாவூத் ( 3726 ) திர்மிதீ ( 1893 ) இப்னு மாஜா ( 3260 )

இருவரின் உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும்

صحيح مسلم (3 / 1630):
عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَعَامُ الرَّجُلِ يَكْفِي رَجُلَيْنِ، وَطَعَامُ رَجُلَيْنِ يَكْفِي أَرْبَعَةً، وَطَعَامُ أَرْبَعَةٍ يَكْفِي ثَمَانِيَةً»

 நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : ( கூட்டாக சாப்பிடும் போது ) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்கு போதுமானதாகும் நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் ( ரழி

நூல் : முஸ்லிம் ( 2059 ) அபூதாவூத் ( 3254 ) அஹ்மத் ( 14222 ) தாரமீ ( 2087 )


கூட்டாகச் சாப்பிடுவதற்கு அனுமதி :


{لَيْسَ عَلَى الْأَعْمَى حَرَجٌ وَلَا عَلَى الْأَعْرَجِ حَرَجٌ وَلَا عَلَى الْمَرِيضِ حَرَجٌ وَلَا عَلَى أَنْفُسِكُمْ أَنْ تَأْكُلُوا مِنْ بُيُوتِكُمْ أَوْ بُيُوتِ آبَائِكُمْ أَوْ بُيُوتِ أُمَّهَاتِكُمْ أَوْ بُيُوتِ إِخْوَانِكُمْ أَوْ بُيُوتِ أَخَوَاتِكُمْ أَوْ بُيُوتِ أَعْمَامِكُمْ أَوْ بُيُوتِ عَمَّاتِكُمْ أَوْ بُيُوتِ أَخْوَالِكُمْ أَوْ بُيُوتِ خَالَاتِكُمْ أَوْ مَا مَلَكْتُمْ مَفَاتِحَهُ أَوْ صَدِيقِكُمْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَأْكُلُوا جَمِيعًا أَوْ أَشْتَاتًا فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ (61)} [النور: 61]
 


உங்கள் வீடுகளிலோ, தந்தையர் வீடுகளிலோ, அன்னையர் வீடுகளிலோ, சகோதரர்கள் வீடுகளிலோ, சகோதரிகளின் வீடுகளிலோ, தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அல் குர்ஆன் ( 24 : 61 )

இரண்டு பேரித்தம் பழங்களைச் சேர்த்து உண்பதற்குத் தடை :
صحيح البخاري (3 / 130):
فَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَمُرُّ بِنَا فَيَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:131] نَهَى عَنِ الإِقْرَانِ، إِلَّا أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ»

'இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர' என்று கூறுவார்கள்.

புஹாரி ( 2456 ) முஸ்லிம் ( 2045 ) அபூதாவூத் ( 3834 ) திர்மிதீ ( 1814 ) இப்னு மாஜா ( 3331 ) 

பணியாளருக்குக் கொடுத்துத்தான் சாப்பிட வேண்டும்

صحيح البخاري (7 / 82):

سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، أَوْ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ حَرَّهُ وَعِلاَجَهُ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு 'ஒரு பிடி அல்லது இருபிடிகள்' அல்லது 'ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்' உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புஹாரி ( 5460 ) முஸ்லிம் ( 1663 ) அபூதாவூத் ( 3846 ) திர்மிதீ ( 1853 ) இப்னு மாஜா ( 3289 )


முதல் சாப்பாடு பிறகுதான் தொழுகை
صحيح البخاري (1 / 135):
سَمِعْتُ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا وُضِعَ العَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَابْدَءُوا بِالعَشَاءِ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.'

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

புஹாரி ( 671 ) இப்னு மாஜா ( 935 ) அபூதாவூத் ( 2184 ) 

சிறு நீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது

صحيح مسلم (1 / 393):
(560) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ هُوَ ابْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي عَتِيقٍ، قَالَ: تَحَدَّثْتُ أَنَا وَالْقَاسِمُ، عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، حَدِيثًا وَكَانَ الْقَاسِمُ رَجُلًا لَحَّانَةً وَكَانَ لِأُمِّ وَلَدٍ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: مَا لَكَ لَا تَحَدَّثُ كَمَا يَتَحَدَّثُ ابْنُ أَخِي هَذَا، أَمَا إِنِّي قَدْ عَلِمْتُ مِنْ أَيْنَ أُتِيتَ هَذَا أَدَّبَتْهُ أُمُّهُ، وَأَنْتَ أَدَّبَتْكَ أُمُّكَ، قَالَ: فَغَضِبَ الْقَاسِمُ وَأَضَبَّ عَلَيْهَا، فَلَمَّا رَأَى مَائِدَةَ عَائِشَةَ، قَدْ أُتِيَ بِهَا قَامَ، قَالَتْ: أَيْنَ؟ قَالَ: أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ، قَالَ: إِنِّي أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ غُدَرُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»

…..நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உணவு வந்து காத்திருக்கும் போதும் சிறு நீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது .

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )

 நூல் : முஸ்லிம் ( 560 ) அபூதாவூத் ( 89 )


உணவைக் குறை கூறக்கூடாது :
صحيح البخاري (4 / 190):
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِلَّا تَرَكَهُ»

நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறைகூறியதில்லை அவர்கள் ஒர் உணவை விரும்பினால் உண்பார்கள் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) 

நூல் : புஹாரி  ( 3563 ) முஸ்லிம் ( 2064 ) அபூதாவூத் ( 3763 ) திர்மிதீ ( 2031 ) இப்னு மாஜா ( 3259 )

உணவைப் பங்கிட்டுக் கொடுப்பவர் இறுதியில் தான் உண்ண வேண்டும்


عَنْ أَبِي قَتَادَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَاقِي الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا قَالَ وَفِي الْبَاب عَنْ ابْنِ أَبِي أَوْفَى قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : ஒர் கூட்ட த்தாருக்கு ( குடிபானத்தை ) பங்கிட்டுக் கொடுக்க்க் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்க்க் கூடியவராவார்.

அறிவிப்பவர் : அபூ கதாதா ( ரழி ) நூல் : திர்மிதீ ( 1816 )



No comments:

Post a Comment