11. பாத்திரங்களை பற்றிய சட்டங்கள்
தங்கம் , வெள்ளித் தட்டுக்களில் சாப்பிடுவதற்குத் தடை
صحيح
البخاري (7 / 77):
حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَيْفُ بْنُ أَبِي سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا،
يَقُولُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى: أَنَّهُمْ كَانُوا عِنْدَ
حُذَيْفَةَ، فَاسْتَسْقَى فَسَقَاهُ مَجُوسِيٌّ، فَلَمَّا وَضَعَ القَدَحَ فِي يَدِهِ
رَمَاهُ بِهِ، وَقَالَ: لَوْلاَ أَنِّي نَهَيْتُهُ غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ،
كَأَنَّهُ يَقُولُ: لَمْ أَفْعَلْ هَذَا، وَلَكِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَلْبَسُوا الحَرِيرَ وَلاَ الدِّيبَاجَ، وَلاَ تَشْرَبُوا
فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وَلاَ تَأْكُلُوا فِي صِحَافِهَا، فَإِنَّهَا لَهُمْ
فِي الدُّنْيَا وَلَنَا فِي الآخِرَةِ»
பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில்
உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான)
அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான)
நமக்கும் உரியனவாகும்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
புஹாரி 5426
صحيح
البخاري (7 / 113):
عَنْ
أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الفِضَّةِ
إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ»
நபி ஸல் அவர்கள்
கூறினார்கள் : தங்கம் வெள்ளிப் பாத்திரங்கள் அருந்துகின்றவன் தனது வயிற்றில் மிடறு
மிடறாக விழுங்குவதெல்லாம் நரக நெருப்பைத்தான்.
புஹாரி 5634
பன்றி இறைச்சி பயன்படுத்திய பாத்திரங்களைப் பயன்படுத்தலாமா ?
حَدَّثَنَا
نَصْرُ بْنُ عَاصِمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ
بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ عَنْ أَبِي عُبَيْدِ اللَّهِ مُسْلِمِ بْنِ مِشْكَمٍ عَنْ
أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ إِنَّا نُجَاوِرُ أَهْلَ الْكِتَابِ وَهُمْ يَطْبُخُونَ فِي قُدُورِهِمْ
الْخِنْزِيرَ وَيَشْرَبُونَ فِي آنِيَتِهِمْ الْخَمْرَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ وَجَدْتُمْ غَيْرَهَا فَكُلُوا فِيهَا وَاشْرَبُوا
وَإِنْ لَمْ تَجِدُوا غَيْرَهَا
فَارْحَضُوهَا بِالْمَاءِ وَكُلُوا وَاشْرَبُوا
அபூ ஸஃலபா ( ரழி ) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் “ அல்லாஹ்வின் தூதரே நாங்கள் கிறிஸ்தவர்களான வேதக்கார்ர்களை அண்டை வீட்டார்களாகப் பெற்றிருக்கிறோம்
. அவர்கள் தங்களுடைய குடுவைகளில் பன்றி இறைச்சியை சமைக்கின்றார்கள்.
தங்களுடைய பாத்திரங்களில் மதுவை அருந்துகின்றார்கள். (அவற்றை நாங்கள் பயன்படுத்தலாமா
?) என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “( அவர்கள் சமைப்பதற்கு பயன்படுத்தும் பாத்திரங்கள்
) அல்லாத ( வேறு பாத்திரங்கள் ) உங்களுக்கு கிடைத்தால் அதில் சாப்பிடுங்கள், குடியுங்கள் அவை அல்லாத ( வேறு பாத்திரங்கள்
) கிடைக்கவில்லையென்றால் அவற்றை ( நன்றாக ) கழுவிய பிறகு அவற்றில் சாப்பிடுங்கள் குடியுங்கள் “.
நூல் : அபூதாவூத் 3342
பாத்திரத்தில் நாய் வாய் வைத்தால் என்ன செய்ய வேண்டும் ?
صحيح
مسلم (1 / 234):
عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا
وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ»
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : “ உங்களுடைய நீர் பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதனை கொட்டிவிடுங்கள்
பிறகு அதனை ஏழுமுறை கழுவுங்கள் “.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) நூல் : முஸ்லிம் 470
வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த பாத்திரங்களையும் தண்ணீரையும் பயன்படுத்தலாம்
سنن
الترمذي ت شاكر (1 / 153):
عَنْ
إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ
بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَتْ عِنْدَ ابْنِ
أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا، قَالَتْ: فَسَكَبْتُ لَهُ
وَضُوءًا، [ص:154] قَالَتْ: فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ، فَأَصْغَى لَهَا الإِنَاءَ
حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ
يَا بِنْتَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ
عَلَيْكُمْ، أَوِ الطَّوَّافَاتِ
»
அபூ கதாதா ( ரழி ) எனது இல்லத்திற்கு வந்தார் அவர் உளூச் செய்வதற்காக தண்ணீர் எடுத்து வந்தேன் அப்போது பூனை ஒன்று வந்து அந்தத் தண்ணீரை அருந்தலானது அதைக் கண்ட அபூ கதாதா ரழி அந்தப் பூனை குடிப்பதற்கேற்ப
அந்தப் பாத்திரத்தைச் சாய்த்துப் பிடித்தார் நான் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த்தைக் கண்டு “ என் சகோதர்ர் மகளே இதைப்பார்த்து நீ ஆச்சரியப்படுகிறாயா
என்றார். நான் ஆம் என்றேன் . அதற்கு அவர் பூனைகள் அசுத்தமான பிராணிகள் அல்ல அவை உங்களையே சுற்றிச் சுற்றி வரக்கூடியவை ஆகும் என்று நபி ஸல் அவர்கள் கூறியிருப்பதாக கூறினார்.
அறிவிப்பவர் : கப்ஷா ( ரழி ) நூல் : திர்மிதீ 85
No comments:
Post a Comment