10. கவ்லா பின்த் ஹகீம் ஸல்மியா ( ரழி )
கவ்லா என்பது பெயர் உம்மு
ஷுரைக் என்பது பட்டப் பெயர் சுலைம் கூட்டத்தை சார்ந்தவர் முஹம்மது ஸல் அவர்களுக்கு
முறையில் இவர்கள் அத்தையாவார்கள்
நூல் : முஸ்னத் ( பாகம்
6 , பக்கம் 409 )
பொது விஷயங்கள்
கவ்லா ( ரழி ) மக்கா நகரில்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிமானதும் ஹிஜ்ரத் செய்து மதீனமா நகரையடைந்தார்கள். ஹிஜ்ரீ
2 ஆம் ஆண்டில் நடைபெற்ற பத்ர் யுத்த த்திற்குப் பின் உதுமான் பின் மல் ஊன் ( ரழி )
மரணமானார்கள் பின்னர் கவ்லா ( ரழி ) வேறு எவரையும்
மறுமணம் செய்துகொள்ளவில்லை. பெரும்பாலும் கவ்லா ரழி நிம்மதியற்ற நிலையிலேயே இருந்து
கொண்டிருந்தார்கள் எனினும் கவ்லா ரழி தம்மை ஏற்றுகொள்ள வேண்டுமென்று ஒரு விஷயம் ஸஹீஹ்
புஹாரியில் காணப்படுகிறது ( பார்க்க புஹாரி 5113 )
சிறப்பு
மேன்மையும்
கவ்லா ( ரழி ) அவர்கள்
நபி ஸல் அவர்கள் இருந்து செவிமடுத்து இந்த உம்மத்திற்க்கு 15 ஹதீஸ்களை அறிவித்து உள்ளார்கள்
கவ்லா ரழி மூலமாக ஸ அத் பின் அபீவக்காஸ் , ஸயீத் பின் முஸய்யித் , பிஷ்ர் பின் ஸயீத்
, உர்வா , ரபீஃபின் மாலிக் போன்ற ஸஹாபாக்கள் ஹதீஸ்களை கேட்டு கூறியிருக்கிறார்கள்.
குறிப்பு கவ்லா அவர்கள்
நேரடியாக அறிவித்த ஹதீகள் ( முஸ்லிம் 6541,6542 திர்மிதீ 3437 , நஸாயீ 198 இப்னு மாஜா
602 ,3547 )
நற்குணம்
கவ்லா( ரழி ) ஒர் நற்குணமுள்ள
பெண்மணியாக இருந்தார்கள் பெரும்பாலும் பகற்காலங்களில் நோன்பிருந்தார் . இராக் காலங்களில்
தொழுகை வணக்கத்திலீடுபட்டிருந்தார். ஆதிகாலத்தில் கவ்லா ( ரழி ) ஆபரணங்களை அணிவதில்
அளவற்ற ஆசை கொண்டவராயிருந்தார் ( உ + த ) ஒரு
முறை நபி ஸல் அவர்களிடம் “ தாயிப் நகரம் தங்களால் கைப்பற்றப்பட்டுவிட்டால் குறிப்பிட்ட
ஒரு பெண்ணின் நகையை எனக்குத் தாங்கள் கொடுத்துவிட வேண்டும் “ என்று கூறினார் . இதை
கேட்ட நபி ஸல் அவர்கள் “ அல்லாஹ் இதற்கு அனுமதிக்க வில்லையாயின் நான் என்ன செய்ய முடியும்
?” என்று பதிலளித்தார்கள். இதிலிருந்து கவ்லா ( ரழி ) என்பவருக்கு ஆபரணங்களின் மீது
எத்தகைய ஆசை இருந்து என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நூல் : இஸாபா ( பாகம்
8 பக்கம் 70 )
No comments:
Post a Comment