Monday, May 8, 2017

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ( பகுதி 03 )




                                                    9. சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ( பகுதி 03 ) 
 
 
பாத்திரத்திற்குள் மூச்சு விடக்கூடாது

صحيح البخاري (1 / 42):

 أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ»

 நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் ( எதை  ) அருந்தினாலும்அந்தப்பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூ கதாதா ( ரழி ) நூல் : புஹாரி ( 153 ) முஸ்லிம் ( 267 ) அபூதாவூத் ( 31 ) திர்மிதீ ( 15 )

விரல் சூப்பவதும் தட்டை வழிப்பதும்

صحيح مسلم (3 / 1607):

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ، فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيَّتِهِنَّ الْبَرَكَةُ» ،

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் சாப்பிட்டு ( முடிக்கும்) போது விரல்களை சூப்பட்டும் ஏனெனில் அவைகளில் எதில் இறைவனுடைய பரகத் ( அருள் ) இருக்கிறதென அவர் அறியமாட்டார் இன்னும் கூறினார்கள் ( சாப்பிட்டு முடிக்கும் போது ) தட்டை ( நன்றாக ) வழிக்கட்டும் ஏனெனில் உங்களுடைய உணவில் எதில் பரகத் இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி ) நூல் : முஸ்லிம் ( 4140 )

பால் குடித்தால் வாய் கொப்பளிக்க வேண்டும்
صحيح البخاري (1 / 52):

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ، وَقَالَ: «إِنَّ لَهُ دَسَمًا»

நபி ஸல் அவர்கள் பால் குடித்தபின் வாய்கொப்பளித்தார்கள் பிறகு “ அதிலே கொழுப்பு இருக்கிறது “ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி ) நூல் : புஹாரி ( 211 )

சாப்பிட்டு முடிந்த பின் ஓத வேண்டியவை

صحيح البخاري (7 / 82):

عَنْ أَبِي أُمَامَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ: «الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا»
அபூ உமாமா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு விரிப்பை எடுக்கும்போது 'அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

நூல் : புஹாரி ( 5458 )

விருந்தளித்தவருக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனை 

صحيح مسلم (3 / 1615):

عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ، قَالَ: نَزَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي، قَالَ: فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً، فَأَكَلَ مِنْهَا، ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ، وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى - قَالَ شُعْبَةُ: هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الْإِصْبَعَيْنِ - ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ، ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ، قَالَ: فَقَالَ أَبِي: وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ، ادْعُ اللهَ لَنَا، فَقَالَ: «اللهُمَّ، بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ»

( அல்லாஹும்ம , பாரிக் லஹும் ஃபீமா ரஸ்க்த்தஹும்.. வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும் ) என உணவுவளித்தவருக்காக நபி ஸல் அவர்கள் பிரார்த்தித்தார்கள் .
பொருள் : இறைவா ! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் புரிவாயாக ! இவர்களை மன்னித்து இவர்களுக்குக் கருணை புரிவாயாக !.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் ( ரழி )
நூல் : முஸ்லிம் ( 2042 ) அபூதாவூத் ( 3729 ) திர்மிதீ ( 3576 ) தாரமீ ( 2065 )



 
 

No comments:

Post a Comment