Friday, June 16, 2017

உறங்கும் ஒழுங்குகள்






                    12.   உறங்கும் ஒழுங்குகள்

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்

விளக்குகளை அனைத்தல், கதவுகளைத் தாள்பாழிடுதல், உணவு தண்ணீரை மூடி வைத்தல்

صحيح البخاري (7 / 112):
عَنْ جَابِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَطْفِئُوا المَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ - وَأَحْسِبُهُ قَالَ - وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْهِ»

ஜாபிர்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்' என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.

நூல் : புஹாரி ( 5624 ) முஸ்லிம் ( 2011,2012 ) அபூதாவூத் ( 3731 ) திர்மிதீ ( 1812 ) இப்னு மாஜா ( 360 ) முஅத்தா மாலிக் ( 2686 )  அஹ்மத் ( 14137 )

எண்ணெய் விளக்குகளை அணைக்க வேண்டும்

صحيح البخاري (8 / 65):
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: احْتَرَقَ بَيْتٌ بِالْمَدِينَةِ عَلَى أَهْلِهِ مِنَ اللَّيْلِ، فَحُدِّثَ بِشَأْنِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ هَذِهِ النَّارَ إِنَّمَا هِيَ عَدُوٌّ لَكُمْ، فَإِذَا نِمْتُمْ فَأَطْفِئُوهَا عَنْكُمْ»

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர்.
அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்' என்றார்கள்.

நூல் : புஹாரி ( 6294 ) முஸ்லிம் ( 2016 ) இப்னு மாஜா ( 3770 ) அஹ்மத் ( 19571 )

தூங்கும் முன் உளூச் செய்ய வேண்டும்
صحيح البخاري (1 / 58):
  
عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள்.

நூல் : புஹாரி ( 247 ) முஸ்லிம் ( 2710 ) அபூதாவூத் ( 5046 ) திர்மிதீ ( 3394 ) இப்னு மாஜா ( 3876 ) தாரமீ ( 2725 ) அஹ்மத் ( 18515 ) 

தூங்கும் விரிப்பை ( பாய் , போர்வை ) மூன்று முறை தட்ட வேண்டும்

صحيح البخاري (9 / 119):

  
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள்.

நூல் : புஹாரி ( 7393 ) முஸ்லிம் ( 2714 ) அபூதாவூத் ( 5050 ) திர்மிதீ ( 3401 ) இப்னு மாஜா ( 3874 ) தாரமீ ( 2726 ) அஹ்மத் ( 7360 ) 

விரிப்பைத் தட்டும் போதும் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும்

صحيح مسلم (4 / 2084):
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ، فَلْيَأْخُذْ دَاخِلَةَ إِزَارِهِ، فَلْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ، وَلْيُسَمِّ اللهَ، فَإِنَّهُ لَا يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ

உங்களில் ஒருவர் படுக்கைக்குச் சென்றால் தன்னுடைய ஆடையின் ஓரத்தால் பிஸ்மில்லாஹ் என்று கூறி விரிப்பை தட்டிக் கொள்ளட்டும் ஏனெனில் அவர் ( காலையில் எழுந்த ) பின் அதில் என்ன நுழைந்திருக்கும் என்பதை அறியமாட்டார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : முஸ்லிம்  ( 2714 )

No comments:

Post a Comment