அத்தியாயம் : 4 ( பகுதி 06)
كتاب الوضوء
உளூ (அங்கசுத்தி)
(51)باب مَنْ مَضْمَضَ مِنَ السَّوِيقِ وَلَمْ يَتَوَضَّأْ
பாடம் : 51
மாவு சாப்பிட்டுவிட்டு (புதிதாக) உளூ செய்யாமல் வாய் கொப்பளிப்பது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ،
مَوْلَى بَنِي حَارِثَةَ أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ، أَخْبَرَهُ.
أَنَّهُ، خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى
إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ ـ وَهِيَ أَدْنَى خَيْبَرَ ـ فَصَلَّى الْعَصْرَ،
ثُمَّ دَعَا بِالأَزْوَادِ، فَلَمْ يُؤْتَ إِلاَّ بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ
فَثُرِّيَ، فَأَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَكَلْنَا، ثُمَّ قَامَ
إِلَى الْمَغْرِبِ، فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
209. சுவைத் பின் நுஃமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கைபர் போர் நடந்த (ஹிஜ்ரீ 7ஆம்) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்
(கைபருக்குச்) சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா எனும் இடத்தை அடைந்ததும் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். பிறகு பயண உணவைக் கொண்டு
வரச் சொன்னார்கள். அப்போது மாவைத் தவிர வேறெதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைத் தண்ணீரில்
நனைக்கும் படி பணித்தார்கள். (அது நனைக்கப்பட்டதும் அதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்
நாங்களும் சாப்பிட்டோம். பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது
அவர்கள் வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள்; நாங்களும் வாய் மட்டும்
கொப்பளித்தோம். பிறகு (புதிதாக) உளூ செய்யாமலேயே (மஃக்ரிப்) தொழு(வித்)தார்கள்.
وَحَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ،
قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى
وَلَمْ يَتَوَضَّأْ.
210. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுச் சப்பை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர்
(அதற்காகப் புதிதாக) உளூ செய்யாமலேயே தொழுதார்கள்.
(52)باب هَلْ يُمَضْمِضُ مِنَ اللَّبَنِ
பாடம் : 52
பால் குடித்தால் வாய் கொப்பளிக்க வேண்டுமா?
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، وَقُتَيْبَةُ، قَالاَ
حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ
بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا، فَمَضْمَضَ وَقَالَ " إِنَّ لَهُ
دَسَمًا ".
تَابَعَهُ يُونُسُ وَصَالِحُ بْنُ كَيْسَانَ عَنِ
الزُّهْرِيِّ.
211. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். பிறகு
இதில் கொழுப்பு இருக்கிறது (ஆகவே தான் வாய்கொப்பளித்தேன்) என்று சொன்னார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(53)بَابُ الْوُضُوءِ مِنَ النَّوْمِ وَمَنْ لَمْ يَرَ مِنَ
النَّعْسَةِ وَالنَّعْسَتَيْنِ أَوِ الْخَفْقَةِ وُضُوءًا
பாடம் : 53
ஆழ்ந்து உறங்கினால் உளூ செய்வதும், ஓரிரு முறை கண்ணயர்ந்து விடுவதாலோ, தூங்கி விழுவதாலோ உளூ செய்யாமலிருத்தலும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ
يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ
إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لاَ يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ
نَفْسَهُ ".
212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் தொழுது கொண்டிருக்கும்போது கண்ணயர்ந்து விடுவாரானால் அவரைவிட்டும்
உறக்கக் கலக்கம் விலகும் வரை (தொழுகையிலிருந்து பிரிந்து) அவர் உறங்கட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே
தொழுவாரானால் அவர் தம்மையும் அறியாமல் பாவமன்னிப்புக் கோர அது தமக்கெதிரான பிரார்த்தனையாகக்கூட
ஆகிவிடலாம்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ
الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي
الصَّلاَةِ فَلْيَنَمْ حَتَّى يَعْلَمَ مَا يَقْرَأُ ".
213 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகையில் கண்ணயர்ந்து விடுவாரானால், தாம் என்ன ஓதுகிறோம்
என்பதை(ச் சரியாக) அறியும் வரை அவர் (தொழுகையிலிருந்து விலகி) தூங்கிக் கொள்ளட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(54)باب الْوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ
பாடம் : 54
உளூ முறிவதற்குரிய காரணம் (ஹதஸ்) ஏற்படாமலேயே (புதிதாக) உளூ
செய்தல்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا
سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، ح قَالَ
وَحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ
حَدَّثَنِي عَمْرُو بْنُ عَامِرٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله
عليه وسلم يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ. قُلْتُ كَيْفَ كُنْتُمْ
تَصْنَعُونَ قَالَ يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ.
214 அம்ர் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (கடமையான) ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூ செய்வார்கள் என அனஸ்
(ரலி) அவர்கள் கூறினார்கள். (நபித்தோழர்களான) நீங்கள் எப்படிச் செய்வீர்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம்
நான் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் உளூவை முறிக்கும் காரணங்கள் (ஹதஸ்) நிகழாதவரை
ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது என்று கூறினார்கள்.
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ حَدَّثَنَا
سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ
يَسَارٍ، قَالَ أَخْبَرَنِي سُوَيْدُ بْنُ النُّعْمَانِ، قَالَ خَرَجْنَا مَعَ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا
بِالصَّهْبَاءِ، صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَصْرَ،
فَلَمَّا صَلَّى دَعَا بِالأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ إِلاَّ بِالسَّوِيقِ،
فَأَكَلْنَا وَشَرِبْنَا، ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى
الْمَغْرِبِ فَمَضْمَضَ، ثُمَّ صَلَّى لَنَا الْمَغْرِبَ وَلَمْ يَتَوَضَّأْ.
215 சுவைத் பின் நுஃமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மேற்படி
போருக்கு) புறப்பட்டுச் சென்றோம். (கைபரை அடுத்துள்ள) ஸஹ்பா என்ற இடத்தை நாங்கள் அடைந்ததும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும்
உணவு கொண்டு வரும்படி கூறினார்கள். (வேறெதுவும் இல்லாததால்) அவர்களிடம் மாவு மட்டும்
கொண்டு வரப்பட்டது. நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம்; குடித்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்தார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள்.
(புதிதாக) உளூ செய்யாமல் எங்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள்.
(55)باب مِنَ الْكَبَائِرِ أَنْ لاَ يَسْتَتِرَ مِنْ
بَوْلِهِ
பாடம் : 55
சிறுநீரிலிருந்து (உடையையும் உடலையும்) மறைக்காமலிருப்பது பெரும்
(பாவச்) செயல்களில் ஒன்றாகும்.
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ
مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله
عليه وسلم بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ
إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه
وسلم " يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ "، ثُمَّ
قَالَ " بَلَى، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ
الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ ". ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا
كِسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً. فَقِيلَ لَهُ
يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ " لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ
عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا ".
216 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள்
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது,
இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக
இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று சொல்லிவிட்டு, ஆம்! (ஒரு வகையில் இறைவனிடம் அது பெரிய பாவச் செயல்தான்) இவ்விருவரில் ஒருவரோ,
தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார்.
மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறிவிட்டு,
ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து
ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம்,
நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின்
வேதனை குறைக்கப்படலாம்என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜரீர் பின் அப்தில்ஹமீத் (ரஹ்) அவர்கள் (மதீனாவிலுள்ள
ஒரு தோட்டத்தை எனும் வாசகத்திற்குப் பின் அல்லது மக்காவிலுள்ள ஒரு தோட்டத்தை என்று
ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
(56)باب مَا جَاءَ فِي غَسْلِ الْبَوْلِ
பாடம் : 56
சிறுநீர் கழித்தபின் கழுவுதல்.
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لِصَاحِبِ الْقَبْرِ: «كَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ». وَلَمْ يَذْكُرْ
سِوَى بَوْلِ النَّاسِ.
அந்த சவக்குழியிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் தமது சிறுநீரிலிருந்து அவர்
(தம் உடலையும் உடையையும்) மறைக்கா மலிருந்தார் என்றே கூறினார்கள். மனிதர் களுடைய சிறுநீரைத்
தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي رَوْحُ بْنُ
الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَنَسِ بْنِ
مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ
أَتَيْتُهُ بِمَاءٍ فَيَغْسِلُ بِهِ.
217 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்ள (புறநகரிலிருக்கும்) திறந்தவெளிகளுக்குச்
செல்வார்களானால் அவர்களுக்கு நான் தண்ணீர் கொண்டு செல்வேன். அதன் மூலம் அவர்கள் சுத்தம்
செய்வார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ،
عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم
بِقَبْرَيْنِ فَقَالَ " إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي
كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا
الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ". ثُمَّ أَخَذَ جَرِيدَةً
رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً. قَالُوا
يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا قَالَ " لَعَلَّهُ يُخَفَّفُ
عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ". قَالَ ابْنُ الْمُثَنَّى وَحَدَّثَنَا
وَكِيعٌ قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ "
يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ ".
218 இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரு சவக்குழிகளைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் இருவரும்
வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை
செய்யப்படவில்லை; இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீரிலிருந்து
(தம் உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார்; மற்றவரோ,
கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு ஒரு
பச்சை பேரீச்ச மட்டையைப் பெற்று அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின்மீதும்
ஒன்றை ஊன்றினார்கள். அது பற்றி மக்கள், ஏன் இவ்வாறு செய்தீர்கள்,
அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். இவ்விரு
மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம் என்று நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் அஃமஷ் (ரஹ்)
அவர்கள் இந்த ஹதீஸைத் முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம்
பெற்றுள்ளது.
(57)باب تَرْكِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالنَّاسِ
الأَعْرَابِيَّ حَتَّى فَرَغَ مِنْ بَوْلِهِ فِي الْمَسْجِدِ
பாடம் : 57
பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்த கிராமவாசியை, அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை
நபி (ஸல்) அவர்களும் மக்களும் விட்டுவிட்டது.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا
هَمَّامٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى
الله عليه وسلم رَأَى أَعْرَابِيًّا يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ "
دَعُوهُ ". حَتَّى إِذَا فَرَغَ دَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ.
219 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்குள் சிறுநீர் கழிப்பதை நபி(ஸல்)
அவர்கள் கண்டார்கள். (அவரை மக்கள் கண்டித்த போது) நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள்
என்று சொல்லி விட்டு, அவர் (சிறுநீர் கழித்து) முடித்த பின் தண்ணீர்
கொண்டு வரச்சொல்லி அதன் மீது ஊற்றினார்கள்.
(58)باب صَبِّ الْمَاءِ عَلَى الْبَوْلِ فِي الْمَسْجِدِ
பாடம் : 58
பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்து விட்டால் அதன் மீது தண்ணீர்
ஊற்றுதல்.
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ
اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَامَ
أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ
النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ
سَجْلاً مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ
مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ ".
220 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலுக் குள் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள்
அவரைக் கண்டித்தனர். நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர்
மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தைக் கொண்டு)
நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப்பட்டுள் ளீர்கள். கடினமாக எடுத்துச்
செல்லக்கூடிய வர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை என்று கூறினார்கள்.
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ
اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ
مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
221 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்
தொடர் வழியாகவும் வந்தள்ளது
(58)باب يُهَرِيقُ الْمَاءَ عَلَى الْبَوْلِ
பாடம் : 58
சிறுநீர்(பட்ட இடத்தின்) மீது தண்ணீரை ஊற்றுவது.
حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ
يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ جَاءَ
أَعْرَابِيٌّ فَبَالَ فِي طَائِفَةِ الْمَسْجِدِ، فَزَجَرَهُ النَّاسُ،
فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ
النَّبِيُّ صلى الله عليه وسلم بِذَنُوبٍ مِنْ مَاءٍ، فَأُهْرِيقَ عَلَيْهِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலின் ஒரு பகுதியில் சிறுநீர் கழித்து விட்டார். அப்போது
அவரை மக்கள் கண்டித்தனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், மக்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்த
பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிக் கட்டளையிட்டார்கள்.
அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.
(59)باب بَوْلِ الصِّبْيَانِ
பாடம் : 59
சிறுவர்களின் சிறுநீர்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ
أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ
إِيَّاهُ.
222 இறை நம்பிக்கையாளர்களின் அன்னையார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு
வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ
اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ
بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حِجْرِهِ،
فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ.
223 உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத்
தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச்சொல்லி (சிறுநீர் பட்ட
இடத்தில்) அதைத் தெளித்தார்கள். அ(ந்த இடத்)தைக் கழுவவில்லை.
(60)باب الْبَوْلِ قَائِمًا وَقَاعِدًا
பாடம் : 60
நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் சிறுநீர் கழித்தல்.
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ
الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى
الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ،
فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ.
224 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்று கொண்டு
சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத்
தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள்.
No comments:
Post a Comment