Thursday, July 27, 2017

இமாமுடைய எண்ணமும் மாமூனுடைய எண்ணமும் தொழுகையில் ஒன்றாக இருக்க வேண்டுமா ?



கேள்வி - 27





ஜமா அத் நேரத்தொழுகை முடிந்துவிட்டது அந்த நேரத்தில் ஒருவர் பள்ளிக்கு வருகிறார் அங்கு சிலர் தொழுது கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் எந்த தொழுகை தொழுகிறார்கள் என்று தெரியாது அவர்களை பின்பற்றி நாம் தொழுகலாமா ?

பதில்

பின்பற்றி தொழுகலாம் ஏனெனில் ஒருவர் இந்த தொழுகையை தான் தொழுகிறார் என்று கவணித்து தொழுக வேண்டும் என்ற ரீதியான சட்டம் குர் ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லபடவில்லை., ஆனால் இதை பார்க்க தேவை இல்லை என்ற ரீதியில் பல ஹதீஸ்கள் உள்ளது. உதாரணத்திற்க்கு எடுத்து கொண்டால்
முஆத் பின் ஜபல் ( ரழி ) அவர்கள் தன்னுடைய கூட்டாதார்களுக்கு தொழுகை வைக்கும் இமாமாக இருந்து உள்ளார்கள். அதே நேரத்தில் நபி ஸல் அவர்களை பின்பற்றி தொழுதால் அதில் கிடைக்கும்  நன்மையையும் விடகூடாது என்பதற்காக ஒவ்வொரு வக்த் தொழுகைக்கும் மஸ்ஜித் நவவீ பள்ளிவாசல்களுக்கு வந்துவிடுவார்கள் ., பிறகு நபி ஸல் அவர்களை பின்பற்றி தொழுது முடித்த பிறகு தன்னுடைய கூட்டாதார்களுக்கு வேகமாக சென்று தொழுகைக்கு இமாமத் செய்யகூடியவர்களாக இருந்தார்கள்


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ‏.‏
 
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.( நூல் புஹாரி 700 )

முஆத் இப்னு ஜபல் அவர்கள் ஒவ்வொரு தொழுகையும் தன்னுடைய வாழ் நாளில் இரண்டு முறை தொழகூடியவர்களாக இருந்தார்கள் ( மதீனாவில் இருந்தவரை ) ஆனால் ஒர் நபர்க்கு கடமையான தொழுகை என்பது ஒன்று மட்டுமே கடமை நபி ஸல் அவர்களை பின்பற்றி தொழுத்தின் மூலம் அந்த கடமையான தொழுகை அவர்க்கு முடிந்துவிட்டது.இப்போது அவர் தம்முடைய கூட்டாதர்களுக்கு வைத்தது கடமை இல்லாத தொழுகை . 

ஆனால் அவரை பின்பற்றி தொழுதவர்களுக்கு அது கடமையான தொழுகை .இப்படி இருவருடைய தொழுகையும் எண்ணமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இருந்தால் இந்த செய்தியை நபி ஸல் அவர்கள் கண்டித்து இருப்பார்கள் . அடுத்ததாக இன்னொரு செய்தியையும் ஹதீஸ்களில் பார்க்கலாம் ஒருவர் ஜமா அத் முடிந்த பிறகு பள்ளிக்கு வரும் போது நபி ஸல் அவர்கள் மக்களை பார்த்து இவர்க்கு எவரேனும் தர்மம் செய்கிறீர்களா ? என்று கேட்கிறார்கள் இதில் நபி ஸல் அவர்கள் தர்மம் என்று எதை சொல்லுகிறார்கள் என்றால் ஒருவர் கூட்டாக தொழுதார் என்றால் 27 மடங்கு நன்மை கிடைக்கும் தனியாக தொழுதால் 1 நன்மை தான் கிடைக்கும் அப்போது சேர்ந்து தொழுதால் 27 மடங்கு நன்மை அதிகமாக கிடைக்கிறது ., 

ஆகவே நபி ஸல் அவர்கள் இலக்கிய நடையில் சொல்லுகிறார்கள் இவர்க்கு எவரேனும் தர்மம் செய்கிறீர்களா என்று அப்போது ஒர் நபர் முன்வருகிறார் அவருடன் சேர்ந்து இவரையும் தொழு சொல்லுகிறார்கள் இப்போது நாம் இங்கு கவணிக்க வேண்டும் யார் இமாமாக நின்று தொழுதார் என்றும் யார் பின்பற்றி தொழுதார் என்றும் தெளிவாக சொல்லபட வில்லை .

மேலும் இருவரில் எவர் தொழுகை வைத்தாலும் தொழுகை வேறு தான் ஏனெனில் ஒருவர் கடமையான தொழுகையை முடித்த நிலையில் உள்ளார் இன்னொருவர் முடிக்காமல் உள்ளார் எப்படியாக இருந்தாலும் இதில் இருவருடைய தொழுகையும் வெவ்வேறாக  தான் இருந்தது என்று நாம் விளங்கி கொள்ளலாம் ( சுன்னத் & கடமையான தொழுகை )

ஆகவே இமாமுடைய தொழுகையும் மாமூனுடைய தொழுகையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சட்டம் கிடையாது ஆனால் சில நேரங்களில் இதில் சின்ன சிக்கல் வரவும் வாய்ப்புகள் உண்டு நாம் மஹ்ரீப் தொழுகை தொழவில்லை அல்லது பிராயனத்தில் இருக்கிறோம் என்றால் அந்த இடத்தில் வசிப்பவர்  இஷாவை நான்காக தொழுவார் பிராயனத்தில் இருக்கிறவர் மஹ்ரீபை 3 ரக் அத்தாக தொழும் போது 4 கா அல்லது 3 ஆ என்று வரும் போது பின்பற்றி தொழுபவர் ஒர் ரக் அத்தை பிற்படுத்தினால் இந்த பிரச்சனையும் முடிந்துவிடும்  

 ( அல்லாஹ் மிக அறிந்தவன் )  

No comments:

Post a Comment