இணைவைத்தல் ( ஷிர்க் ) விளக்கம் வகைகள்
விளக்கம் : படைத்தாள்வதிலும் , வணங்கபடுவதிலும் அல்லாஹ்விற்கு மற்றதை இணையாகக் கருதுவது.
பெரும்பாலும் இணைவைத்தல் வணக்கவழிபாடுகளில் தான் ஏர்படுகிறது அல்லாஹ்வோடு மற்றதை வணங்குவது உதவிக்கு அழைப்பது அல்லது வணக்கங்களின் அவகைகளான அறுத்துப் பலியிடுதல் , நேர்ச்சை
, பயம் , எதிர்ப்பார்ப்பு ,அன்பு கொள்வது போன்ற வணக்கங்களில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செய்வதின் மூலமே இணைவைத்தல் ஏற்படுகிறது.
பின்வரும் காரணங்களை முன்னிட்டு இணைவைத்தல் மிகப் பெரிய பாவமாகும்
:
1.
இணைவைப்பில் , படைப்பினங்களை படைத்தவனுக்கு நிகராக்கப்படுகிறது எனவே எவரோருவர் அல்லாஹ்விற்கு ஒன்ரை இணையாக்குகிறாரோ அவர் அதனை அல்லாஹ்விர்கு நிகராக ஆக்கிவிட்டார் . இவ்வாறு செய்வது மாபெரும் அநீதியாகும்
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ﴿١٣﴾
இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ( 31 : 13 )
அ நீதி என்பது ஒரு பொருளை அதற்கு உரிய இடத்தில் வைக்காமல் வேறு இடத்தில்
வைப்பதாகும் . ஆகவே எவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குகிறாரோ அவர் வணக்கத்தை
செலுத்த வேண்டியவருக்கு செலுத்தாமல் வேறொருவருக்கு செலுத்துகிறார். இவ்வாறு
செய்வது மாபெரும் அநீதியாகும்.
2.
இணைவைப்பவர் தவ்பா செய்யவில்லை எனில் அவரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்
إِنَّ اللَّـهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ
وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்.( 4:48)
3.
இணைவைப்பவர் மீது அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்கி விடுவதாகவும் அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பதாகவும் அல்லாஹ் தெரிவிக்கிறான்
إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّـهِ فَقَدْ حَرَّمَ
اللَّـهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ
أَنصَارٍ ﴿٧٢﴾
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள்
சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை ( 5 : 72
)
4.
இணைவைப்பு அனைத்து நற்செயல்களையும் அழித்துவிடுகிறது
وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا
يَعْمَلُونَ ﴿٨٨﴾
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை
விட்டும் அழிந்திருக்கும்.( 6:88)
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن
قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ
الْخَاسِرِينَ ﴿٦٥﴾
"நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.(
39:65)
5.
இணைவைப்பவனை போர்க்களத்தில்
கொல்வதும் அவௌடைய பொருளை உடைமையாக்கி கொள்வதும் முஸ்லிம்களுக்கு
அனுமதிக்கப்பட்டதாகும்.
فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ
وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ
இணை கற்பிப்போரை, கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப்
பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக்
காத்திருங்கள்!.... ( 9 : 5 )
( குறிப்பு : இஸ்லாமிய அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட வருபவர்களுக்கு எதிராக
முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியே இவ்வசனத்தில் அல்லாஹ்
கூறிப்பிடுகிறான்., இதற்க்கும் இஸ்லாம் என்ற போர்வையில் செய்ய படும்
ஜிஹாத்துக்கும் சமந்தம் இல்லை )
6.
ஷிர்க் பாவங்களிலேயே பெரிய பாவம்
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ
أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ". قُلْنَا بَلَى
يَا رَسُولَ اللَّهِ. قَالَ " الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ
الْوَالِدَيْنِ
(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் 'பெரும் பாவங்களிலேயே
மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்றார்கள்…. ( நூல் ; புஹாரி 5976 )
அல்லாமா இப்னுல் கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள் ; அல்லாஹ்வின் அழகிய பெயர்களையும் உயர்ந்த
பண்புகளையும் அறிந்து அவனுக்கு எதையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்கி மனிதர்கள்
நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதே உலகை படைத்த தின் நோக்கம் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான்
அல்லாஹ்வின் நீத த்தின் அடிப்படையிலேயே வானமும் பூமியும் இயங்குகின்றன.
لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ
وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம்.( 57:25)
அல்லாஹ் இந்த வசனத்தில் மனிதர்கள் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே
வேதங்களை இறக்கி வைத்து தூதர்களை அனுப்பியதாக கூறுகிறான். மனிதர்கள் நிலை நாட்ட
வேண்டிய மிகப்பெரிய நீதியென்பது அல்லாஹ்வை
மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்று நம்புவதாகும். இதுவே நீதிகளில்
தலையாயதாகவும், ஆணிவேராகவும் இருக்கிறது .
நிச்சயமாக அல்லாஹ்விற்கு இணைவைப்பது மிகப்பெரிய அ நீதியாகும்
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ﴿١٣﴾
இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ( 31 : 13 )
இணைவைத்தல் மிகப்பெரிய அ நீதியாகவும் , தவ்ஹீத் மிகப்பெரிய நீதியாகவும் இருக்கிறது ஆகவே அல்லாஹ்வை மட்டுமே
வணங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு இணைவைப்பு முற்றிலும் முரணாக இருப்பதால்
அது மிகபெரிய பாவமாகும்.
மேலும் இப்னுல் கய்யிம் அவர்கள் இதனை தெளிவுபடுத்தும் விதமாக கூறுகிறார்கள் :
அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு எதிரானதாக எப்போது
இணைவைப்பு ஆனதோ அப்போதே அது மிகப்பெரிய பாவம் என்ற நிலையை அடைந்துவிட்டது.
ஷிர்க் செய்பவர்கள் மீது அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டான்.அவர்களின்
உயிர், உடைமை மற்றும் குடும்பங்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் தவ்ஹீதின்
சொந்தக்காரர்களுக்கு ஹலாலாக்கி விட்டான். அல்லாஹ்வை வணங்குவதை அவர்கள்
விட்டுவிட்டதனால் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்கள் அவர்களை தங்களின் அடிமைகளாக
ஆக்கிகொள்வதற்கு அல்லாஹ் அனுமதியளித்துள்ளான்.
அல்லாஹ், இணைவைப்பவர்களின் செயல்களை அங்கீகரிக்கவும் மாட்டான் அவனுக்காக
செய்யப்படும் பரிந்துரைகளை ஏற்கவும் மாட்டான். மறுமை நாளில் அவனது அழைப்பிற்கு
பதிலளிக்கவும் மாட்டான். மேலும் அவனது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றவும் மாட்டான்.
நிச்சயமாக இணைவைப்பவன் அல்லாஹ்வைப் பற்றி அறியாத மிகப்பெரிய மூடனாவான். அந்த
அறியாமையின் காரணமாகவே அல்லாஹ்வின் படைப்பினங்களை அல்லாஹ்விற்கு இணையாக்குகிறான் .
இவ்வாறு படைப்பினங்களை அல்லாஹ்விற்கு இணையாக்குவது மிகப்பெரிய அறியாமையாகவும்
,அல்லாஹ்விற்கு செய்யும் மாபெரும் அ நீதியாகவும் இருக்கிறது. இணைவைப்பவன்
இணைவைத்தலின் மூலம் உண்மையில் தனது இரட்சகனுக்கு எந்த அ நீதியும் இழைப்பதில்லை
மாறாக தனக்குத் தானே அ நீதி இழைத்துக்கொள்கிறான் .( அல் ஜவாபுல் காஃபி, பக்கம் 109
)
7.
நிச்சயமாக இணைவைப்பவர் குறையுடைய
பலவீனமானவற்றை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்குகிறார் .எனவே எவர் அல்லாஹ்விற்கு
இணைவைக்கிறாரோ அவர் அல்லாஹ் எந்த குறைகளைவிட்டு தன்னை தூய்மைப்படுத்துகிறானோ அந்த
குறைகளை அல்லாஹ்விற்கு இருப்பதாகக் கூறுகிறார் இவ்வாறு செய்வது அல்லாஹ்வை
பகைத்துக்கொள்வதும் அவனுக்கு எதிராக செயல்படுவதும் ஆகும்.
No comments:
Post a Comment