அத்தியாயம் : 4 ( பகுதி 04)
كتاب الوضوء
உளூ (அங்கசுத்தி)
(31)باب
التَّيَمُّنِ فِي الْوُضُوءِ وَالْغُسْلِ
பாடம் : 31
உளூவிலும் குளியலிலும் வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ،
قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ،
قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُنَّ فِي غُسْلِ ابْنَتِهِ
" ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا ".
167. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் மக(ள் ஸைனப் (ரலி) இறந்தவிட்டபோது அவர்க)ளை நீராட்டுவது
குறித்துப் பெண்களிடம் கூறுகையில்,
அவருடைய வலப்பக்கத்திலிருந்தும், உளூச் செய்யவேண்டிய உறுப்புக்களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள்
என்று சொன்னார்கள்.
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ
مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم
يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي
شَأْنِهِ كُلِّهِ.
168. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும்
சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே
விரும்பி வந்தார்கள்.
(32)باب الْتِمَاسِ
الْوَضُوءِ إِذَا حَانَتِ الصَّلاَةُ
பாடம் : 32
தொழுகையின் நேரம் வந்ததும் உளூ செய்வதற்காகத் தண்ணீரைத் தேடுதல்.
وَقَالَتْ عَائِشَةُ حَضَرَتِ الصُّبْحُ فَالْتُمِسَ
الْمَاءُ، فَلَمْ يُوجَدْ، فَنَزَلَ التَّيَمُّمُ.
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வந்ததும் (உளூ செய்வதற்காகத்) தண்ணீர் தேடப்பட்டது.
ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தான்
தயம்மும் (சம்பந்தமான இறைவசனம்) அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ،
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ
يَجِدُوهُ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ، فَوَضَعَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ الإِنَاءِ يَدَهُ، وَأَمَرَ
النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ. قَالَ فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ
تَحْتِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ.
169. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். மக்கள் உளூ செய்வதற்குத் தண்ணீரைத்
தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு
பாத்திரத்தில் (சிறிது) தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
அந்தப் பாத்திரத்தினுள் தமது கரத்தை வைத்து,
அப்பாத்திரத்திலிருந்து உளூ செய்யுமாறு
மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விரல்களுக்குக்
கீழேயிருந்து தண்ணீர் சுரப்பதை நான் கண்டேன். மக்கள் (அதிலிருந்து) உளூ செய்தார்கள்.
எந்த அளவிற்கென்றால், அவர்களில் கடைசி நபர் வரை (அதிலேயே)
உளூ செய்துமுடித்தார்கள்.
(33)باب الْمَاءِ
الَّذِي يُغْسَلُ بِهِ شَعَرُ الإِنْسَانِ
பாடம் : 33
மனித ரோமம் கழுவிய தண்ணீர் (பற்றிய சட்டம்).
وَكَانَ عَطَاءٌ لاَ يَرَى بِهِ بَأْسًا أَنْ يُتَّخَذَ
مِنْهَا الْخُيُوطُ وَالْحِبَالُ، وَسُؤْرِ الْكِلاَبِ وَمَمَرِّهَا فِي
الْمَسْجِدِ.
وَقَالَ الزُّهْرِيُّ إِذَا وَلَغَ فِي إِنَاءٍ لَيْسَ
لَهُ وَضُوءٌ غَيْرُهُ يَتَوَضَّأُ بِهِ.
وَقَالَ سُفْيَانُ هَذَا الْفِقْهُ بِعَيْنِهِ، يَقُولُ
اللَّهُ تَعَالَى: {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا} وَهَذَا مَاءٌ، وَفِي
النَّفْسِ مِنْهُ شَيْءٌ، يَتَوَضَّأُ بِهِ وَيَتَيَمَّمُ.
மனித முடியிலிருந்து கயிறுகளும் நூல்களும் திரித்தெடுப்பதை அதாஉ பின் அபீரபாஹ்(ரஹ்)
அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. இவ்வாறே நாய் வாய் வைத்த தண்ணீரையும் பள்ளிவாசலுக்குள்
நாய் கடந்துசென்ற இடத்தையும் அசுத்தமானவையாக அவர்கள் கருதவில்லை.
தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட அந்தத் தண்ணீரைத் தவிர வேறு
தண்ணீர் இல்லையென்றால் அந்த தண்ணீரால் உளூ செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய)
இந்தச் சட்டம் நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளவில்லையானால் சுத்தமான மண்ணில்
தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் (4:43
ஆவது) இறைவசனத்திலிருந்தே பெறப்படுகிறது.
(ஏனெனில் தண்ணீர் என்று பொதுவாக அல்லாஹ் கூறுவதால் நாய் வாய் வைத்த) இந்தத் தண்ணீரும்
தண்ணீர்தான் என்றாலும் உளூ செய்பவருடைய மனத்தில் உறுத்தல் ஏற்படுகிறது. ஆகவே அந்தத்
தண்ணீரில் உளூ செய்பவர் தயம்மும் செய்து கொள்ளவும் வேண்டும்.
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا
إِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ قُلْتُ لِعَبِيدَةَ
عِنْدَنَا مِنْ شَعَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَصَبْنَاهُ مِنْ قِبَلِ
أَنَسٍ، أَوْ مِنْ قِبَلِ أَهْلِ أَنَسٍ فَقَالَ لأَنْ تَكُونَ عِنْدِي شَعَرَةٌ
مِنْهُ أَحَبُّ إِلَىَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.
170. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
நான் உபைதா (பின் அம்ர் அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்களிடம், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து
நாங்கள் பெற்ற நபி (ஸல்) அவர்களின் சில முடிகள் எங்களிடம் இருக்கின்றது என்று சொன்னேன்.
அதற்கு உபைதா(ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம்
இருப்பது உலகமும் அதில் உள்ளவற்றையும் விட எனக்கு மிக உகப்பானதாகும் என்று கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ، عَنِ ابْنِ
عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم لَمَّا حَلَقَ رَأْسَهُ كَانَ أَبُو طَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ مِنْ
شَعَرِهِ.
171. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) தமது தலைமுடியை (ஒருவரிடம்) மழித்தபோது
அபூதல்ஹா (ரலி) அவர்களே முதன்முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முடிகளில் சிலவற்றைப்
பெற்று (பத்திரப்படுத்தி)க் கொண்டார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ،
عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا شَرِبَ الْكَلْبُ فِي
إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا ".
172. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் குடித்துவிடுமானால் அவர் (அசுத்தமாகிவிட்ட)
அந்தப் பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ،
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعْتُ
أَبِي، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم " أَنَّ رَجُلاً رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ،
فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ،
فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ ".
173. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர்
பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு
அந்நாய் தாகம் தீரும்வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து
அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي، عَنْ
يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ،
عَنْ أَبِيهِ، قَالَ كَانَتِ الْكِلاَبُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي
الْمَسْجِدِ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَكُونُوا
يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ.
174. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்துகொண்டும்
போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிக்குள் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாக
இருக்கவில்லை.
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ، عَنِ ابْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ
حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " إِذَا
أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ فَقَتَلَ فَكُلْ، وَإِذَا أَكَلَ فَلاَ
تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ ". قُلْتُ أُرْسِلُ
كَلْبِي فَأَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ قَالَ " فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا
سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى كَلْبٍ آخَرَ ".
175. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது:
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு
அவர்கள் வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக்) கொன்றுவிட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். (அந்தப்பிராணியை)
நாய் சாப்பிட்டுவிட்டிருக்குமானால் அதை நீங்கள் சாப்பிடாதீர்கள். ஏனெனில் அது (அப்பிராணியை)
தனக்காகவே வைத்துக்கொண்டுள்ளது என்று கூறினார்கள். நான், எனது
நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும்போது)
அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிடித்தது எது என்று
எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?) என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் நாயைத்தான் பிஸ்மில்லாஹ்
(அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனுப்பவில்லை
என்று சொன்னார்கள்.
(34)باب مَنْ لَمْ يَرَ الْوُضُوءَ إِلاَّ مِنَ
الْمَخْرَجَيْنِ، مِنَ الْقُبُلِ وَالدُّبُرِ
பாடம் : 34
முன் பின் இரு துவாரத்திலிருந்து ஏதேனும் வெளியேறினால் மட்டுமே
உளூ முறியும் (துடக்கு ஏற்படும்).
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ
مِنَ الْغَائِطِ} وَقَالَ عَطَاءٌ فِيمَنْ يَخْرُجُ مِنْ دُبُرِهِ الدُّودُ أَوْ
مِنْ ذَكَرِهِ نَحْوُ الْقَمْلَةِ يُعِيدُ الْوُضُوءَ.
وَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ إِذَا ضَحِكَ فِي
الصَّلاَةِ أَعَادَ الصَّلاَةَ، وَلَمْ يُعِدِ الْوُضُوءَ.
وَقَالَ الْحَسَنُ إِنْ أَخَذَ مِنْ شَعَرِهِ
وَأَظْفَارِهِ أَوْ خَلَعَ خُفَّيْهِ فَلاَ وُضُوءَ عَلَيْهِ.
وَقَالَ أَبُو هُرَيْرَةَ لاَ وُضُوءَ إِلاَّ مِنْ
حَدَثٍ. وَيُذْكَرُ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَانَ فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ فَرُمِيَ رَجُلٌ بِسَهْمٍ،
فَنَزَفَهُ الدَّمُ فَرَكَعَ وَسَجَدَ، وَمَضَى فِي صَلاَتِهِ.
وَقَالَ الْحَسَنُ مَا زَالَ الْمُسْلِمُونَ يُصَلُّونَ
فِي جِرَاحَاتِهِمْ.
وَقَالَ طَاوُسٌ وَمُحَمَّدُ بْنُ عَلِيٍّ وَعَطَاءٌ
وَأَهْلُ الْحِجَازِ لَيْسَ فِي الدَّمِ وُضُوءٌ. وَعَصَرَ ابْنُ عُمَرَ بَثْرَةً
فَخَرَجَ مِنْهَا الدَّمُ، وَلَمْ يَتَوَضَّأْ. وَبَزَقَ
ابْنُ أَبِي أَوْفَى
دَمًا فَمَضَى فِي صَلاَتِهِ.
وَقَالَ ابْنُ عُمَرَ وَالْحَسَنُ فِيمَنْ يَحْتَجِمُ
لَيْسَ عَلَيْهِ إِلاَّ غَسْلُ مَحَاجِمِهِ.
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை முடித்து விட்டு) வந்தால்...
(தொழுகைக்காக அங்கசுத்தி செய்து கொள்ளவேண்டும்.) (4:43).
ஒருவருடைய பின் துவாரத்திலிருந்து புழு அல்லது முன் துவாரத்திலிருந்து பேன் போன்ற
சிறுபூச்சியோ வெளியேறினால் (அவருடைய அங்கசுத்தி நீங்கிவிடுகிறது.) அவர் மீண்டும் உளூச்
செய்யவேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தொழுகையில் (சப்தமிட்டுச்) சிரித்தால் அவர் அந்தத் தொழுகையைத்தான் திரும்பத்
தொழவேண்டும் (உளூமுறிவதில்லை. ஆகவே,)
திரும்பவும் உளூ செய்ய வேண்டியதில்லை
என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் (தம் உடலிலுள்ள) முடியையோ நகங்களையோ களைவதால் அல்லது தமது காலுறையைக் கழற்றிவிடுவதால்
அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டியதில்லை என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சிறுதுடக்கு (தூய்மைக்கேடு) ஏற்பட்டால் தான் உளூவைத் திரும்பச் செய்யவேண்டும் என
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தாத்துர் ரிகாஉ போரில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போரில் (முஸ்லிம்களில்)
ஒருவர் மீது அம்பு பாய்ந்தது. அவருக்கு கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டது. ஆயினும்
அவர் ருகூஉ, சஜ்தா செய்து தொழுகையைத் தொடர்ந்தார்
என ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.
தங்களுடைய உடலில் காயங்கள் இருக்கவே (நபித்தோழர்களான) முஸ்லிம்கள் தொழுது கொண்டேயிருந்தார்கள்
என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இரத்தம் வெளிவருவதன் காரணமாக உளூவைத் திரும்பச் செய்யவேண்டியதில்லை என தாவூஸ் பின்
கைசான் (ரஹ்), முஹம்மத் பின் அலீ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றுமுள்ள ஹிஜாஸ்வாசிகள் ஆகியோர்
கூறியுள்ளனர்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் உடலிலிருந்து) சிறு கொப்புளத்தை நசுக்கினார்கள்.
அதிலிருந்து இரத்தம் வெளியானது. ஆனால் அவர்கள் திரும்பவும் உளூச் செய்யவில்லை.
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் உமிழ்நீரில் இரத்தம் வந்தது. (அதற்காக
உளூவைத் திரும்பச்செய்யமாலே) அவர்கள் தொழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
இப்னு உமர் (ரலி), ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்:
ஒருவர் (நோய்க்காக) குருதி உறிஞ்சி எடுப்பாரானால் அவர் அந்த இடத்தை மட்டும் கழுவினால்
போதும் (உளூவை திரும்பச் செய்யவேண்டியதில்லை).
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا
ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَزَالُ الْعَبْدُ فِي صَلاَةٍ
مَا كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ، مَا لَمْ يُحْدِثْ ".
فَقَالَ رَجُلٌ أَعْجَمِيٌّ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ
الصَّوْتُ. يَعْنِي الضَّرْطَةَ.
176. சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடியார் (உ.ளூ செய்து) தொழுமிடத்தில் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி
இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறார். (இது எதுவரையில்
எனில்) அவருக்கு ஹதஸ் (சிறுதுடக்கு) ஏற்படாதவரை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (அரபி மொழி புரியாத) ஒரு பாரசீகர்
ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!? என்று கேட்டார். அதற்கு
அபூஹுரைரா (ரலி) அவர்கள், பின் துவாரத்திலிருந்து வெளியாகும்
காற்று என்று பதிலளித்தார்கள்.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا ابْنُ
عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ
صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ".
177. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில் நிற்கும்போது பின் துவாரத்திலிருந்து பிரியும் காற்றின்) சப்தத்தைக்
கேட்காத வரை அல்லது (அதன்) நாற்றத்தை உணராத வரை (தொழுகையை விட்டு) திரும்பிச் செல்லவேண்டியதில்லை.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا
جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ أَبِي يَعْلَى الثَّوْرِيِّ، عَنْ
مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ قَالَ عَلِيٌّ كُنْتُ رَجُلاً مَذَّاءً،
فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرْتُ
الْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ " فِيهِ الْوُضُوءُ
". وَرَوَاهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ.
178. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இச்சைக் கசிவு (மதீ) அதிமாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக்)
கேட்க வெட்கப்பட்டு மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம்
கேட்குமாறு பணித்தேன். அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்காக அங்கசுத்தி (உளூ) செய்வது தான் கடமை; (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ،
عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنْ
زَيْدَ بْنَ خَالِدٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ ـ رضى
الله عنه ـ قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ قَالَ عُثْمَانُ
يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، وَيَغْسِلُ ذَكَرَهُ. قَالَ
عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَسَأَلْتُ عَنْ
ذَلِكَ عَلِيًّا، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، وَأُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله
عنهم ـ فَأَمَرُوهُ بِذَلِكَ.
179. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் ஒருவர் (தம் மனைவியுடன்) தாம்பத்திய
உறவு மேற்கொண்டார். ஆனால் விந்து வெளியாகவில்லை (இந்நிலையில் அவர் மீது குளியல் கடமையாகுமா, என்ன) சொல்லுங்கள்?
என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவர் தமது குறியைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குச்
செய்வது போன்று அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளவேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள். மேலும் இது பற்றி அலீ,
ஸுபைர், தல்ஹா, உபை பின்
கஅப் (ரலி) ஆகியோரைக் கேட்டபோது இவ்வாறே அவர் செய்ய வேண்டுமென அவர்கள் அனைவரும் வலியுறுத்தினர்.
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا النَّضْرُ،
قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسَلَ
إِلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَجَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ، فَقَالَ النَّبِيُّ
صلى الله عليه وسلم " لَعَلَّنَا أَعْجَلْنَاكَ ". فَقَالَ
نَعَمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُعْجِلْتَ
أَوْ قُحِطْتَ، فَعَلَيْكَ الْوُضُوءُ ". تَابَعَهُ وَهْبٌ قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَلَمْ يَقُلْ غُنْدَرٌ وَيَحْيَى عَنْ
شُعْبَةَ الْوُضُوءُ.
180. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்.
தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்
நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் (மனைவியோடு தாம்பத்திய உறவு
கொள்ளும்போது) அவசரப்பட்டு எழநேர்ந்தால், அல்லது விந்து வெளியாகாமலிருந்தால் (குளிக்க வேண்டியதில்லை), உளூ செய்வது மட்டுமே உங்கள் மீது கடமையாகும்
என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:
ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து குன்துர் மற்றும் யஹ்யா (ரஹ்) ஆகியோர் வழியாக வரும்
அறிவிப்பில் உளூ கடமையாகும் எனும் வாசகம் இடம்பெறவில்லை. (உங்கள் மீது குளியல் கடமையாகாது
என்ற வாசகமே காணப்படுகிறது.)
(35)باب الرَّجُلِ يُوَضِّئُ صَاحِبَهُ
பாடம் : 35
ஒருவர் தம் நண்பருக்கு உளூ செய்ய உதவுதல்.
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا
يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ،
مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم لَمَّا أَفَاضَ مِنْ عَرَفَةَ عَدَلَ إِلَى الشِّعْبِ، فَقَضَى
حَاجَتَهُ. قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ فَجَعَلْتُ أَصُبُّ عَلَيْهِ
وَيَتَوَضَّأُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي فَقَالَ "
الْمُصَلَّى أَمَامَكَ ".
181. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) அரஃபா பெருவெளியிலிருந்து (முஸ்தலிஃபாவை
நோக்கி) வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு கணவாயை நோக்கிச் சென்று அங்கு இயற்கைக்
கடனை நிறைவேற்றினார்கள். அப்போது நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுக்க, அவர்கள் உளூ செய்யலானார்கள்.
அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?
என்று கேட்டேன். அதற்கு, தொழும் இடம் உமக்கு முன்னால்
(முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا
عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي
سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ
أَنَّهُ، سَمِعَ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، يُحَدِّثُ عَنِ
الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فِي سَفَرٍ، وَأَنَّهُ ذَهَبَ لِحَاجَةٍ لَهُ، وَأَنَّ مُغِيرَةَ جَعَلَ
يَصُبُّ الْمَاءَ عَلَيْهِ، وَهُوَ يَتَوَضَّأُ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ
وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ.
182. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் தமது
(இயற்கைத்) தேவைக்காக புறப்பட்டுச் சென்றார்கள்.(அவர்கள் திரும்பி வந்தபோது) அவர்களின்
(கை கால்கள்) மீது நான் தண்ணீர் ஊற்றிக் கொடுக்க, அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும்
கழுவினார்கள். ஈரக்கையால் தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். ஈரக்கையால் காலுறைகள்
மீது தடவினார்கள் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவவில்லை).
(36)باب قِرَاءَةِ الْقُرْآنِ بَعْدَ الْحَدَثِ وَغَيْرِهِ
பாடம் : 36
சிறு துடக்கான பின்னரும் குர்ஆன் முதலியவற்றை ஓதுதல்.
وَقَالَ مَنْصُورٌ عَنْ إِبْرَاهِيمَ لاَ بَأْسَ
بِالْقِرَاءَةِ فِي الْحَمَّامِ، وَبِكَتْبِ الرِّسَالَةِ عَلَى غَيْرِ وُضُوءٍ.
وَقَالَ حَمَّادٌ عَنْ إِبْرَاهِيمَ إِنْ كَانَ
عَلَيْهِمْ إِزَارٌ فَسَلِّمْ، وَإِلاَّ فَلاَ تُسَلِّمْ.
மன்சூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குளியல் அறையில் குர்ஆன்
ஓதுவதும் உளூவின்றி (அல்லாஹ்வின் திருப்பெயர் எழுதி) கடிதம் வரைவதும் குற்றமில்லை என்று
இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (குளியல் அறையில் இருப்போர்)
கீழாடை அணிந்திருந்தால் அவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்; அவ்வாறில்லை என்றால் சலாம் சொல்லாதீர்கள் என்று இப்றாஹீம் அந்நகஈ
(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،
عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ
عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ لَيْلَةً عِنْدَ
مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ فَاضْطَجَعْتُ
فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى
إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ،
اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ
وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ
آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا
فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ
فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ
يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى، يَفْتِلُهَا،
فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ
رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ
اضْطَجَعَ، حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ، فَقَامَ، فَصَلَّى رَكْعَتَيْنِ
خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
183. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின்
இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்)
படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது வீட்டாரும் அதன் நீள
வாட்டில் (தலைவைத்துப்) படுத்திருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்கு சற்று முன்புவரை
அல்லது சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து அமர்ந்து, தமது கரத்தால் தம்
முகத்தில் தடவித் தூக்க(க் கலக்கத்)தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின்
கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்)
தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து உளூ
செய்தார்கள். தமது உளூவை செம்மையாகச் செய்துகொண்ட பின்னர் தொழுவதற்காக நின்றார்கள்.
நானும் (எழுந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு
அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தம் வலக் கரத்தை என் தலைமீது
வைத்து, என் வலது காதைப் பிடித்து (தம் வலப் பக்கத்தில் இழுத்து)
நிறுத்தினார்கள்.
அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும்
இரண்டு ரக்அஅத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள், மறுபடியும் இரண்டு
ரக்அத்துகள், மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ர்
தொழுதார்கள்.
பின்னர் பாங்கு சொல்பவர் (பாங்கு சொல்லிவிட்டு தம்மிடம்) வரும்வரை சாய்ந்து படுத்திருந்தார்கள்.
பிறகு (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுவிட்டு
(வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழு(வித்)தார்கள்.
(37)باب مَنْ لَمْ يَتَوَضَّأْ إِلاَّ مِنَ الْغَشْىِ
الْمُثْقِلِ
பாடம் : 37
உணர்வு நிலையற்ற (முழுமையான) மயக்கத்தினால்தான் உளூ நீங்கும்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنِ امْرَأَتِهِ، فَاطِمَةَ عَنْ جَدَّتِهَا،
أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ
النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ خَسَفَتِ الشَّمْسُ، فَإِذَا النَّاسُ
قِيَامٌ يُصَلُّونَ، وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي فَقُلْتُ مَا لِلنَّاسِ
فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ وَقَالَتْ سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ
آيَةٌ فَأَشَارَتْ أَىْ نَعَمْ. فَقُمْتُ حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ،
وَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي مَاءً، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ " مَا مِنْ
شَىْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلاَّ قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا حَتَّى
الْجَنَّةِ وَالنَّارِ، وَلَقَدْ أُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي
الْقُبُورِ مِثْلَ أَوْ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ ـ لاَ أَدْرِي أَىَّ
ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ مَا عِلْمُكَ بِهَذَا
الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُوقِنُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ
قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، جَاءَنَا
بِالْبَيِّنَاتِ وَالْهُدَى، فَأَجَبْنَا وَآمَنَّا وَاتَّبَعْنَا، فَيُقَالُ نَمْ
صَالِحًا، فَقَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا، وَأَمَّا الْمُنَافِقُ ـ
أَوِ الْمُرْتَابُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ لاَ
أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ ".
184. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) சூரிய கிரகணம் எற்பட்டபோது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா
(ரலி) அவர்களிடம் சென்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
மக்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். (தொழுகையிலிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம்)
நான், மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (ஏதும் கூறாமல்) வானை நோக்கித்
தமது கரத்தால் சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக)
சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். இது (ஏதாவது) அடையாளமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஆம் என்று தலையால் சைகை செய்தார்கள்.
உடனே நானும் (அவர்களோடு நீண்ட நெடிய அத்தொழுகையில்) நின்று கொண்டேன். எந்த அளவிற்கென்றால்
(நீண்ட நேரம் நின்றதால்) எனக்கு கிறக்கமே ஏற்பட்டுவிட்டது. (கிறக்கம் நீங்க) என் தலை
மீது தண்ணீரை ஊற்றலானேன்.
தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத
அனைத்தையும் (இதோ) இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம்,
நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு அறிவிக்கப்பட்டது:
நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் தஜ்ஜால் என்பவனுடைய சோதனைக்கு நிகரான அல்லது
நெருக்கமான அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.
இதன் அறிவிப்பாளரான பாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) கூறுகிறார்: (நிகரான, நெருக்கமான) இவற்றில்
எந்த வாசகத்தை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
அப்போது (கப்றிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), இந்த மனிதரைப் பற்றி
உமக்கு என்ன தெரியும்? என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு
இறை நம்பிக்கையாளரோ அல்லது உறுதி கொண்டவரோ இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள்
என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள்.
அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார்கள். நாங்கள்
(அன்னாரின் அழைப்பை) ஏற்றுப் பின்பற்றினோம் என்று பதிலளிப்பார். அப்போது கேள்விகேட்ட(வான)வர்களின்
தரப்பிலிருந்து நல்லபடியாக நீர் உறங்குவீராக! நீர் (இந்த இறைத்தூதரை ஏற்ற நல்ல) நம்பிக்கையாளராய்
இருந்தீர் என்று நாங்கள் அறிந்துகொண்டோம் என்று (அவ்வானவர்களால்) கூறப்படும்.
நயவஞ்சகரோ அல்லது சந்தேகப்பேர்வழியோ இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள்
என்று எனக்குத் தெரியவில்லை எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன்.
அதையே நானும் சொன்னேன் என்று கூறுவார்.
(38)باب مَسْحِ الرَّأْسِ كُلِّهِ
பாடம் : 38
உளூவில் ஈரக்கையால் தலை முழுவதும் தடவுதல்.
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَامْسَحُوا بِرُءُوسِكُمْ}.
وَقَالَ ابْنُ الْمُسَيَّبِ الْمَرْأَةُ بِمَنْزِلَةِ
الرَّجُلِ تَمْسَحُ عَلَى رَأْسِهَا. وَسُئِلَ مَالِكٌ أَيُجْزِئُ أَنْ يَمْسَحَ
بَعْضَ الرَّأْسِ فَاحْتَجَّ بِحَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ.
ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ்,
(ஈரக்கையால்)
உங்களுடைய தலையையும் தடவுங்கள் (5:6) என்று கூறுகின்றான்.
சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள்,
பெண்களும் ஆண்களைப் போன்றே (ஈரக்கையால்
தலை முழுவதும்) தடவ வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
மாலிக் (ரஹ்) அவர்களிடம், (உளூவில்) தலையில் ஒரு பகுதி மட்டும்
(ஈரக்கையால்) தடவினால் போதுமா? என்று கேட்கப்பட்டது அதற்கு மாலிக்
(ரஹ்) அவர்கள் பின்வரும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு
பதிலளித்தார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ،
أَنَّ رَجُلاً، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ
يَحْيَى ـ أَتَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم يَتَوَضَّأُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ نَعَمْ. فَدَعَا
بِمَاءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَهُ مَرَّتَيْنِ، ثُمَّ مَضْمَضَ
وَاسْتَنْثَرَ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ
مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ
بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، حَتَّى
ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ
مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ.
185. யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் எப்படி உளூ செய்தார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்துகாட்ட முடியுமா? எனக் கேட்டார். அதற்கு
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஆம் (செய்துகாட்டுகிறேன்) என்று கூறித் தண்ணீர்
கொண்டுவரச் சொன்னார்கள். அதைத் தமது இரு (முன்) கைகளிலும் ஊற்றி இருமுறை கழுவினார்கள்.
பின்னர் மூன்றுமுறை வாய் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி)
மூக்கைச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்றுமுறை கழுவினார்கள். பின்னர் தமது
இரு கைகளையும் மூட்டுவரை இரண்டு இரண்டுமுறை கழுவினார்கள். பின்னர் (ஈரக்) கைகளால் தமது
தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். (அதாவது) தமது இரு கைகளையும் (முன்)தலையில்
வைத்து பின்னே கொண்டு சென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து முன்னே கொண்டு வந்தார்கள்.
ஆரம்பமாக முன் தலையில் வைத்து அப்படியே அதை தமது பிடரிவரை கொண்டு சென்ற பின் அப்படியே
ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டு சென்றார்கள். பிறகு இரு கால்களையும் கழுவினார்கள்.
(39)باب غَسْلِ الرِّجْلَيْنِ إِلَى الْكَعْبَيْنِ
பாடம் : 39
இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல்.
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ
عَمْرٍو، عَنْ أَبِيهِ، شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ سَأَلَ عَبْدَ اللَّهِ
بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَدَعَا بِتَوْرٍ مِنْ
مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَكْفَأَ
عَلَى يَدِهِ مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ
فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثَ غَرَفَاتٍ، ثُمَّ
أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ
يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ
فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ
غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ.
186. யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி(ஸல்)
அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்ட இடத்தில் நானும் இருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின்
ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, நபி (ஸல்) அவர்கள்
செய்தது போன்று உளூசெய்து காட்டினார்கள்.
(ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்றுமுறை கைகளைக்
கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்றுமுறை தண்ணீர் அள்ளி
வாய்கொப்பளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப்
பாத்திரத்தில் நுழைத்து மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும்
மூட்டுவரை இருமுறை கழுவினார்கள். பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக்கையால்)
தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இருகைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டு
சென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (அரம்பித்த இடத்திற்கே) கொண்டு
வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர்
தமது கால்களை கணுக்கால்கள் வரை கழுவினார்கள்.
(40)باب اسْتِعْمَالِ فَضْلِ وَضُوءِ النَّاسِ
பாடம் : 40
மக்கள் உளூ செய்துவிட்டு வைத்த மீதித் தண்ணீரைப் பயன்படுத்துதல்.
وَأَمَرَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ أَهْلَهُ أَنْ
يَتَوَضَّئُوا بِفَضْلِ سِوَاكِهِ.
தாம் பல் துலக்கிவிட்டு மீதிவைத்த தண்ணீரில் உளூ செய்ய தம் வீட்டாரை ஜரீர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அனுமதித்தார்கள்.
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ
حَدَّثَنَا الْحَكَمُ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، يَقُولُ خَرَجَ عَلَيْنَا
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ
فَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ
فَيَتَمَسَّحُونَ بِهِ، فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ
رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ.
187. அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின் போது அப்தஹ் எனுமிடத்திலிருந்த கூடாரத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் நண்பகல் நேரத்தில் எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கு உளூ செய்யத் தண்ணீர்
கொண்டு வரப்படவே, அதில் அவர்கள் உளூ செய்தார்கள். அவர்கள் உளூ
செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்று மக்கள் தங்கள் மீது தடவிக் கொள்ளலாயினர். அப்போது
தமக்கு முன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை (தடுப்பாக) வைத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டு இரண்டு ரக்அத்களாகத்
தொழுதார்கள்.
وَقَالَ أَبُو مُوسَى دَعَا النَّبِيُّ صلى الله عليه
وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ
ثُمَّ قَالَ لَهُمَا اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا
وَنُحُورِكُمَا.
188. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஜிஉரானா எனுமிடத்தில் நானும் பிலாலும் இருந்து கொண்டிருந்தபோது) நபி (ஸல்)
அவர்கள், தண்ணீர் குவளையைக் கொண்டு வரச்சொல்லி, அதில் தம்மிரு கைகளையும் தமது முகத்தையும் கழுவிவிட்டு, அதனுள் (தமது வாயிலிருந்த) தண்ணீரை உமிழ்ந்தார்கள். பிறகு எங்கள் இருவரிடமும்,
இதிலிருந்து சிறிது பருகிவிட்டு, உங்கள் முகத்திலும்
கழுத்திலும் ஊற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا أَبِي،
عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ،
قَالَ وَهُوَ الَّذِي مَجَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي وَجْهِهِ
وَهْوَ غُلاَمٌ مِنْ بِئْرِهِمْ. وَقَالَ عُرْوَةُ عَنِ الْمِسْوَرِ وَغَيْرِهِ
يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبَهُ وَإِذَا تَوَضَّأَ النَّبِيُّ صلى
الله عليه وسلم كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ.
189. இப்னுஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
தாம் (ஐந்து வயதுச்) சிறுவனாக இருந்தபோது தமது வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர்
எடுத்து நபி (ஸல்) அவர்கள் (உளூ செய்துவிட்டு) அதை தம்முடைய முகத்தில் உமிழ்ந்ததாக
என்னிடம் குறிப்பிட்ட மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) (பின்வருமாறும்) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யும்போது, அவர்கள் உளூசெய்துவிட்டு மீதி வைக்கின்ற தண்ணீரை
எடுத்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக மக்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக்
கொள்ளுமளவிற்குச் சென்றுவிடுவார்கள்.
இதை உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் (மர்வான்
பின் ஹகம் எனும்) மற்றொருவரிடமிருந்து அறிவிக்கிறார்கள். இவ்விருவரும் மற்றவர் சொன்னதை
உறுதிப்படுத்தியுமுள்ளார்கள்.
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يُونُسَ، قَالَ
حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنِ الْجَعْدِ، قَالَ سَمِعْتُ السَّائِبَ
بْنَ يَزِيدَ، يَقُولُ ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم
فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ. فَمَسَحَ رَأْسِي
وَدَعَا لِي بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ
قُمْتُ خَلْفَ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ
مِثْلِ زِرِّ الْحَجَلَةِ.
190. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே!
என் சகோதரி மகன் (இரு பாதங்களில்) நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். அப்போது நபி
(ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக் கொடுத்து எனது சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். அவர்கள் உளூ செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில்
சிறிதை நான் அருந்தினேன். பிறகு நபி (ஸல்) அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையே இருந்த
நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்றிருந்தது.
No comments:
Post a Comment