Thursday, July 27, 2017

இணைவைத்தலின் வகைகள்



( இந்த தொடர்க்கு செல்லுவதற்க்கு முன்பு சில விஷயங்களை இங்கு குறிப்பிட கடமை பட்டு உள்ளேன் ., இந்த புத்தகத்தின் ஆசிரியர் மேற்கொள் காட்டி இருக்கும் சில கருத்துகளில் எமக்கு மாற்று கருத்து உண்டு இருப்பினும் நாகரீகம் கருதி அவர் எழுதின ஆக்கத்தில் எந்த ஒர் திருத்தமும் இல்லாமல் அப்படியே இங்கு பதிகிறேன் மேலும் .பின்வரும் (RBG - Red ,Bule And Green) அவர்கள்  சரி என்று கருத்தும் ( சூனியம் , கண்ணேறு ) போன்ற விஷயங்களை( சரி கண்டு சில விஷயங்களை நூல் ஆசிரியர் இந்த நூலில் சொல்லி இருப்பார்கள்) ஆனால் அவர்களே   தன்னுடைய நூல்களில்  அந்த கருத்தை மறுக்கு விதத்தில் எழுதி உள்ள வரிகளை
 நாம் HIGHLIGHTS செய்து உள்ளோம் வாசிப்பவர்கள் கட்டுரை போன்று படிக்காமல் அந்த வாதங்களையும் நினைவில் நிறுத்தி படித்து கொள்ளவும் )

*குறிப்பு (    )  என்று RED  நிறத்தில் உள்ளது எம்முடைய கருத்து ஆகும்



இணைவைத்தலின் வகைகள்

இவை இருவகைப்படும்

முதலாவது : இஸ்லாத்தைவிட்டே வெளியேற்றிவிடுகின்ற பெரிய இணைவைப்பு . இதனை செய்பவர் தவ்பா செய்யாமல் மரணித்துவிட்டால் நிரந்தர நரகத்தில் தான் இருப்பார்.

பெரிய இணைவைத்தல் என்பது வணக்கங்களின் வகைகளில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நிறைவேற்றுவது உதாரணத்திற்கு அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை உதவிக்கு அழைப்பது அறுத்து பலியிட்டு நேர்ச்சை செய்து அல்லாஹ் அல்லாத கப்றில் அடக்கமாகியிருப்பவர்கள் , ஜின்கள் மற்றும் ஷைத்தான்கள் ஆகியோர்களின் நெருக்கத்தைப் பெற வேண்டும் என நினைப்பது மேலும் மரணித்தவர்கள் . ஜின்கள் மற்றும் ஷைத்தான்கள் இடர்களை ( தடங்கல்) ஏற்படுத்தி விடுவார்கள் , நோய்களை ஏற்படுத்தி விடுவார்கள் என அவர்களுக்கு அஞ்சுவது

மேலும் அல்லாஹ்வால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற காரியங்களை அல்லாஹ் அல்லாதவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புவது உதாரணத்திற்கு தேவைகளை நிறைவேற்றுவது துன்பங்களை போக்குவது இவ்வகையான இணைவைப்புகள் இன்று அவ்லியாக்கள் மற்றும் நல்லடியார்கள் என்பவர்களின் கப்றுகளில் தான் அதிகமாக நடக்கின்றன.

وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّـهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَـٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّـهِ

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். ( 10 : 18 )

இரண்டாவது : சிறிய ஷிர்க்இவ்வகையான இணைவைப்பின் மூலம் ஒருவர் இஸ்லாட்த்ஹை விட்டு வெளியேற மாட்டார். ஆனால் அவரது ஓரிறைக் நம்பிக்கையில் இது குறைவினை ஏற்படுத்தும் மேலும் இந்த சிறிய ஷிர்க்கானது பெரிய ஷிர்க்கில் விழுவதற்கு வழி வகுக்கும் இதனை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்.

முதல் பிரிவு : வெளிப்படையான ஷிர்க்இது சொல் மற்றும் செயலில் ஏற்படும்

சொல் ரீதியாக ஏற்படுவதற்கான உதாரணம் : அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது

فَقَالَ ابْنُ عُمَرَ لاَ يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ ‏"

…. அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூற நான் கேட்டேன் ; எவர் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் ( அல்லாஹ்வை) நிராகரித்து விட்டார் ( அல்லாஹ்விற்கு ) இணைவைத்து விட்டார் .
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழி , நூல் : திர்மிதீ 1535

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ் நாடியவாரும் நீங்கள் நாடியவாரும் நடந்தது என்று கூறினார். அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வுக்கு நிகராக என்னை ஆக்குகின்றீர்களா ? என்று கூறிவிட்டு அல்லாஹ் மட்டுமே நாடினான் என்று கூறுங்கள் என்றார்கள் ( நூல் : நஸாயீ )

இந்த ஹதீஸில் உள்ளதைப் போலவே அல்லாஹ்வும் இந்த நபரும் இல்லையென்றால் என்று கூறுவதும் இதுபோன்று கூறும் இடங்களில் அல்லாஹ் நாடியவாறும் பிற்கு நீங்கள் நாடியவாரும் என்றும் அல்லாஹ்வும் பிறகு நீங்களும் இல்லையென்றால் என்றும் கூறுவதே சரியான முறையாகும். ஏனெனில் (ثم ( என்ற சொல் அரபி மொழியில் அதற்குப் பிறகு என்ற பொருளில் வரிசைத் தொடரில் இடம்பெறும் எனவே இவ்வாறு கூறும் போது மனிதனின் நாட்டம் அல்லாஹ்வின் நாட்டத்தைத் தொடர்ந்து அதற்குப் பிறகு இருக்கிறது என்ற பொருள் வெளிப்படும்

وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّـهُ رَبُّ الْعَالَمِينَ ﴿٢٩﴾

அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை ( 81 : 29 )

(      الواو)   என்ற சொல் அரபி மொழியில் பொதுவாக சேர்ந்துவரும் பன்மைப் பொருளில் வரும் அது வரிசையமைப்பு பின் தொடர்தல் என்ற பொருளைத் தராது உதாரணத்திற்க்கு எனக்கு அல்லாஹ்வும் நீங்களும் போதுமானவர்கள் இவ்வாறான வார்த்தை அல்லாஹ்வின் அருளாலும் உங்களின் அருளினாலும் நிகழ்ந்தது என்ற தவறான பொருளைத் தரும்

சிறிய இணைவைப்பு செயல் ரிதியாக ஏற்படுவதற்கான உதாரணம் :

துன்பங்களை நீக்குவதற்கும் , போக்குவதற்கும் இரும்பு வளையம் , கயிறு  போன்றவற்றை அணிவது .அவ்வாறே கண்ணேறு மற்றும் அதைப்போன்ற தீமைகளிலிருந்து விடுபடுவதற்காக தாயத்தை தொங்க விடுவது இவை துன்பங்கள் நீங்குவதற்கு காரணமாக இருக்கின்றது என்ற நம்பிக்கையில் ஒருவர் அணிந்தால் அது சிறிய ஷிர்க் ஆகும். ஏனெனில் அல்லாஹ் துன்பங்களை நீக்குவதற்கு காரணமாக இந்தப் பொருட்களை ஆக்கவில்லை

( குறிப்பு : கண்ணேறு அல்லது கண் திருஸ்தி இவை மூலம் ஒருவர் அல்லாஹ்வை போல் நோய், அல்லது உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவது சிறிய இணைவிப்பில் அடங்கும் என்பதே எம்முடைய நிலைபாடு )

ஆனால் அதே நேரத்தில் ஒருவர் இதனை அணிந்துகொண்டு இதுவே துன்பங்களை நேரடியாக போக்கிவிடும் துன்பங்களை நீக்கிவிடும் அதற்கான சக்தி இதற்கு இருக்கிறது என்று நம்பினால் அது ஷிர்க் ஆகும்.

இரண்டாவது பிரிவு : மறைமுகமான ஷிர்க்எண்ணங்களில் இணைவைப்பது உதாரணத்திற்கு முகஸ்துதி  அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்கான நல்லறங்களை செய்து அதனைக் கொண்டு மக்கள் தம்மைப் புகழ வேண்டும் என எண்ணுவது . மக்கள் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக தொழுகையை அழகாக்கிக் கொள்வது , தர்மத்தை வழங்குவது திக்ர் வாசகங்கள் மற்றும் குர் ஆனை நன்கு ராகமாக ஒதி அதனை மக்கள் கேட்டு தம்மைப் பாராட்ட வேண்டும் என நினைப்பது. முகஸ்துதி ரியா எந்த நல்லறங்களுடன் கலந்து விடுகின்றதோ அது அந்த நல்லறங்களை வீணாக்கி விடுகிறது.

فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ﴿١١٠﴾

தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும் ( 18:110)





22528 قَالَ عَبْد اللَّهِ وَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي كِتَابِ أَبِي بِخَطِّهِ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ الشِّرْكُ الْأَصْغَرُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ قَالَ الرِّيَاءُ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ يَوْمَ تُجَازَى الْعِبَادُ بِأَعْمَالِهِمْ اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ بِأَعْمَالِكُمْ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً رواه احمد

உங்களிடம் நான் அதிகம் பயப்படுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைத்தல் என்றால் என்ன என்று வினவினர். அதற்கு முகஸ்துதி என்று கூறி, அல்லாஹ் அடியார்களுக்கு கூலி வழங்கும் நாளில் (முகஸ்துதிக்காக நற்செயல் புரிந்தவர்களை நோக்கி) உலகத்தில் யார் பார்க்க வேண்டுமென நீங்கள் நற்செயல்கள் புரிந்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். உங்களுக்கு அவர்களிடம் கூலி கிடைக்கிறதா? என்பதை பாருங்கள்! என்று அல்லாஹ் கூறுவான் என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் லபீத் (ரலி)   நூல் : அஹ்மத் 22528


முகஸ்துதி என்பது உலக ஆதாயங்களுக்காக செய்யப்படுவதாகும் . உதாரணத்திற்கு ஹஜ் , பாங்கு , இமாமத் போன்ற செயல்களை பொருளாதாரத்தை அடைவதற்காகச் செய்வது செல்வத்தை திரட்டுவதற்காக மார்க்க கல்வியை கற்பது ஜிஹாத் செய்வது

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ ‏"‏‏.‏ لَمْ يَرْفَعْهُ إِسْرَائِيلُ عَنْ أَبِي حَصِينٍ‏.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் : புஹாரி 2886

அல்லாமா இப்னுல் கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள் : நாட்டம் மற்றும் எண்ணங்களில் இணைவைக்காமல் இருப்பது என்பது கரையில்லாத கடலை போன்றதாகும். மிகக் குறைவானவர்களே இந்த இணைவைப்பில் இருந்து தப்பிக்க முடியும். ஆகவே யாரொருவர் தனது செயலின் மூலம் அல்லாஹ் அல்லாதவர்களின் திருப்தியை நாடுகிறாரோ அவர்களின் நெருக்கத்தைப் பெறுவதற்கான எண்ணம் கொள்கிறாரோ அதற்கான பிரதிபலனை எதிர் பார்க்கிறாரோ அவர் தனது நாட்டம் மற்றும் எண்ணங்களில் அல்லாஹ்விற்கு இணைவைத்தவர் ஆவார்.

தூய எண்ணம் என்பது ஒருவர் தனது செயல்களை , சொற்களை , எண்ணங்களை தூய்மையான முறையில் அல்லாஹ்விற்காகவே செயவதாகும் . இதுவே இப்ராஹீம் நபியின் மார்க்கமாகும் . இந்த வழிமுறையைப் பின்பற்றவே அல்லாஹ் அனைத்து அடியார்களுக்கும் கட்டளையிடுகிறான். இதுவல்லாத வேறு வழிமுறையை அவன் அங்கீகரிக்கவே மாட்டான். இந்த வழிமுறைதான் உண்மையான இஸ்லாமாகவும் இருக்கிறது.

وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ﴿٨٥﴾

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.( 3:85)

இதுவே இப்ராஹீம் நபியின் மார்க்கம் ஆகும் இதனை யார் புறக்கணிக்கின்றாரோ அவர் மூடர்களில் உள்ளவராவார் ( அல் ஜவாபுல் காஃபீ – 115 )


தொடரும் இன்ஷா அல்லாஹ்..,

No comments:

Post a Comment