அத்தியாயம் : 6 ( பகுதி 2 )
كتاب الحيض
மாதவிடாய்
(11)باب هَلْ تُصَلِّي الْمَرْأَةُ فِي ثَوْبٍ حَاضَتْ فِيهِ
பாடம்
: 11
ஒரு பெண்
மாதவிடாய் ஏற்பட்ட ஆடையுடன் தொழலாமா?
٣١٢حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي
نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ مَا كَانَ لإِحْدَانَا إِلاَّ
ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِذَا أَصَابَهُ شَىْءٌ مِنْ دَمٍ، قَالَتْ
بِرِيقِهَا فَقَصَعَتْهُ بِظُفْرِهَا.
312 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் சிலருக்கு ஒரேயொரு ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவருடை மாதவிடாய்
ஏற்படும். இரத்தம் ஏதேனும் அந்த ஆடையில் பட்டு(க் காய்ந்து)விட்டால் தமது உமிழ் நீரைத்
தொட்டு அந்த இடத்தில் வைத்து தமது நகத்தால் சுரண்டிவிடுவார்கள்.
(12)باب الطِّيبِ لِلْمَرْأَةِ عِنْدَ غُسْلِهَا مِنَ
الْمَحِيضِ
பாடம் : 12
மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது நறுமணத்தைப் பயன்படுத்துதல்.
٣١٣حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ،
عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ ـ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ أَوْ هِشَامِ بْنِ
حَسَّانَ عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ قَالَتْ كُنَّا نُنْهَى أَنْ
نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ
وَعَشْرًا، وَلاَ نَكْتَحِلَ وَلاَ نَتَطَيَّبَ وَلاَ نَلْبَسَ ثَوْبًا مَصْبُوغًا
إِلاَّ ثَوْبَ عَصْبٍ، وَقَدْ رُخِّصَ لَنَا عِنْدَ الطُّهْرِ إِذَا اغْتَسَلَتْ
إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ كُسْتِ أَظْفَارٍ، وَكُنَّا نُنْهَى
عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ. قَالَ رَوَاهُ هِشَامُ بْنُ حَسَّانَ عَنْ
حَفْصَةَ عَنْ أُمِّ عَطِيَّةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
313 உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென
நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய)
மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்)
நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ,
நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ
கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.)
எங்களில் ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது ளிஃபார் நகரத்து
குஸ்த் (கோஷ்டம் அல்லது அகில்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டது. மேலும் நாங்கள் ஜனாஸாவைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடைவிதிக்கப்பட்டிருந்தோம்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(13)باب دَلْكِ
الْمَرْأَةِ نَفْسَهَا إِذَا تَطَهَّرَتْ مِنَ الْمَحِيضِ وَكَيْفَ تَغْتَسِلُ،
وَتَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَتَّبِعُ بِهَا أَثَرَ الدَّمِ
பாடம் : 13
ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் போது தமது
உடலைத் தேய்த்துக் கழுவுவதும்,
அவள் எப்படிக் குளிக்க
வேண்டும் என்பதும், இரத்தம்போன இடத்தில்
கஸ்தூரி தடவப்பட்ட பஞ்செடுத்து இரத்தம் படிந்த இடத்தை எப்படித் துடைக்க வேண்டும் எனும்
முறையும்.
٣١٤حَدَّثَنَا
يَحْيَى، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ،
عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلَتِ النَّبِيَّ صلى الله
عليه وسلم عَنْ غُسْلِهَا مِنَ الْمَحِيضِ، فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ قَالَ
" خُذِي فِرْصَةً مِنْ مِسْكٍ فَتَطَهَّرِي بِهَا ". قَالَتْ
كَيْفَ أَتَطَهَّرُ قَالَ " تَطَهَّرِي بِهَا ". قَالَتْ كَيْفَ
قَالَ " سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي ". فَاجْتَبَذْتُهَا
إِلَىَّ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ.
314 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயிலிருந்து நீங்கிக் கொள்ள தாம் எவ்வாறு
குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குளிக்கும்
முறையைக் கூறினார்கள். கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால்
(உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக் கொள்! என்று பதிலளித்தார்கள்.
அந்தப் பெண்மணி, அதனால் நான் எப்படித்தூய்மைப்படுத்த
வேண்டும்? என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் அதனால் தூய்மைப்படுத்திக் கொள்! என்று (மட்டும்) சொன்னார்கள்.
அப்பெண்மணி மீண்டும் எப்படி(த்தூய்மைப்படுத்த வேண்டும்)? என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்டவாறு) சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக்
கொள்! என்று பதிலளித்தார்கள்.
(நபியவர்கள் என்ன சொல்லவருகிறார்கள்
என்பதை நான் புரிந்து கொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து இரத்தம் படிந்த
இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக! என்று கூறினேன்.
(14)باب
غُسْلِ الْمَحِيضِ
பாடம் : 14
மாதவிடாய்க் குளியல்.
٣١٥حَدَّثَنَا
مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أُمِّهِ، عَنْ
عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه
وسلم كَيْفَ أَغْتَسِلُ مِنَ الْمَحِيضِ قَالَ " خُذِي فِرْصَةً
مُمَسَّكَةً، فَتَوَضَّئِي ثَلاَثًا ". ثُمَّ إِنَّ النَّبِيَّ صلى الله
عليه وسلم اسْتَحْيَا فَأَعْرَضَ بِوَجْهِهِ أَوْ قَالَ " تَوَضَّئِي بِهَا
" فَأَخَذْتُهَا فَجَذَبْتُهَا فَأَخْبَرْتُهَا بِمَا يُرِيدُ النَّبِيُّ
صلى الله عليه وسلم.
315 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), மாதவிடாயிலிருந்து தூய்மையாகிக் கொள்ள நான் எவ்வாறு குளிக்க
வேண்டும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்ட்ட பஞ்சுத்துண்டு
ஒன்றை எடுத்து மூன்று முறை சுத்தம் செய்! என்றோ அல்லது அதன் மூலம் சுத்தம் செய்! என்றோ
சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்ட்டுக் கொண்டு தமது முகத்தைத் திருப்பிக்
கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து நபி (ஸல்)
அவர்கள் சொல்லவருவதை அவருக்கு விளக்கிக் கொடுத்தேன்.
(15)باب امْتِشَاطِ الْمَرْأَةِ
عِنْدَ غُسْلِهَا مِنَ الْمَحِيضِ
பாடம் : 15
ஒருபெண் மாதவிடாய் நின்றபின் குளியலின் போது சீப்பினால் தலையை
வாரிக் கொள்ளுதல்.
٣١٦حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ،
عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ أَهْلَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى
الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَكُنْتُ مِمَّنْ تَمَتَّعَ، وَلَمْ
يَسُقِ الْهَدْىَ، فَزَعَمَتْ أَنَّهَا حَاضَتْ، وَلَمْ تَطْهُرْ حَتَّى دَخَلَتْ
لَيْلَةُ عَرَفَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ لَيْلَةُ عَرَفَةَ،
وَإِنَّمَا كُنْتُ تَمَتَّعْتُ بِعُمْرَةٍ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " انْقُضِي رَأْسَكِ، وَامْتَشِطِي، وَأَمْسِكِي عَنْ
عُمْرَتِكِ ". فَفَعَلْتُ، فَلَمَّا قَضَيْتُ الْحَجَّ أَمَرَ عَبْدَ
الرَّحْمَنِ لَيْلَةَ الْحَصْبَةِ فَأَعْمَرَنِي مِنَ التَّنْعِيمِ مَكَانَ
عُمْرَتِي الَّتِي نَسَكْتُ.
316 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜத்துல் வதா எனும்) விடைபெறும் ஹஜ்ஜின்
போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டினேன். அப்போது நான் குர்பானிப்
பிராணியைக் கொண்டுவராத தமத்துஉ வகை இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். இந்நிலையில்
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. (துல்ஹஜ் எட்டாம் நாள்) அரஃபாவுடைய இரவு வரும் வரை
நான் சுத்தமாகவில்லை. (மாதவிடாயிலிருந்து நீங்கிய அந்த இரவு) நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! இது அரஃபாவுடைய இரவு; நான் உம்ரா செய்து விட்டுத் திரும்ப இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வதாக
நினைத்திருந்தேன். ஆனால், என்னால் உம்ரா செய்யமுடியாமற் போய்விட்டது
என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள்! உம்ரா செய்வதை
நிறுத்திவிடு! (ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்!) என்றார்கள் நானும் அவ்வாறே செய்தேன்.
ஹஜ்ஜின் கிரியைகளை நான் செய்து முடித்த போது (மதீனா செல்லும் வழியில்) முஹஸ்ஸப் (எனுமிடத்தில்
நாங்கள்) இரவில் (தங்கியிருந்த போது என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தன்ஈம் என்ற இடத்திலிருந்து (இஹ்ராம் கட்டி) புறப்பட்டுச் சென்று என்னை
உம்ரா செய்விக்குமாறு பணித்தார்கள். இந்த உம்ரா (மாதவிடாயினால் செய்ய முடியாமற்போன)
அந்த உம்ராவின் இடத்தில் (பதிலாக) அமைந்தது.
(16)باب نَقْضِ
الْمَرْأَةِ شَعَرَهَا عِنْدَ غُسْلِ الْمَحِيضِ
பாடம் : 16
ஒருபெண் மாதவிடாய் நின்ற பின் குளியலின் போது தனது தலைமுடியை
அவிழ்த்து விடுவது (அவசியமா?).
٣١٧حَدَّثَنَا
عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ،
عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مُوَافِينَ لِهِلاَلِ ذِي
الْحِجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَحَبَّ
أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهْلِلْ، فَإِنِّي لَوْلاَ أَنِّي أَهْدَيْتُ
لأَهْلَلْتُ بِعُمْرَةٍ ". فَأَهَلَّ بَعْضُهُمْ بِعُمْرَةٍ، وَأَهَلَّ
بَعْضُهُمْ بِحَجٍّ، وَكُنْتُ أَنَا مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَأَدْرَكَنِي
يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم
فَقَالَ " دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي
بِحَجٍّ ". فَفَعَلْتُ حَتَّى إِذَا كَانَ لَيْلَةُ الْحَصْبَةِ أَرْسَلَ
مَعِي أَخِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، فَخَرَجْتُ إِلَى
التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِي. قَالَ هِشَامٌ وَلَمْ
يَكُنْ فِي شَىْءٍ مِنْ ذَلِكَ هَدْىٌ وَلاَ صَوْمٌ وَلاَ صَدَقَةٌ.
317 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
துல்ஹஜ் மாதப் பிறை நெருங்கிக் கொண் டிருந்த நிலையில் நாங்கள் (மதீனாவிலிருந்து)
நாங்கள் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள விரும்புகிறாரோ அவர்
அவ்வாறே செய்து கொள்ளலாம். ஏனெனில் குர்பானிப் பிராணியை நான் கொண்டுவராமல் இருந்தி
ருந்தால் கட்டாயம் நானும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருப்பேன் என்று கூறினார்கள்.
அப்போது சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். மற்ற சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினர்.
நான் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி
ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால்
முதலில் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடம்
இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக
இஹ்ராம் கட்டிக் கொள்! என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.
ஹஸ்பா (முஹஸ்ஸப்) எனுமிடத்தில் நாங்கள் தங்கியிருந்த இரவில் (உம்ரா செய்வதற்காக)
என்னுடன் என் சகோதரர் அப்துர்ரஹ்மானை அனுப்பிவைத்தார்கள். (அவருடன்) நான் தன்ஈம் என்ற
இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டுப்போன எனது உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம்
கட்டினேன்.
ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(மூவகை இஹ்ராம் முறைகளான தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய) இந்த முறைகள் எதிலும்
(பரிகாரமாக) குர்பானி கொடுப்பதோ நோன்பு நோற்பதோ தான தர்மங்கள் செய்வதோ இருக்கவில்லை.
(17)باب
مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ
பாடம் : 17
(பெண்ணின் கருவறையில்)
வடிவமைக்கப்படும் சதைக்கட்டியும் வடிவமைக்கப்படாத (விழு) கட்டியும்.
٣١٨حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ،
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "
إِنَّ اللَّهَ ـ عَزَّ وَجَلَّ ـ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ
نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ. فَإِذَا أَرَادَ أَنْ
يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا
الرِّزْقُ وَالأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ ".
318 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் (பெண்ணின்) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான்.
(அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணமா மாற்றங்கள் ஏற்படும் போது) அந்த வானவர், என் இறைவா! (இது ஒரு துளி) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும்
கரு. என்இறைவா! இது மெல்லப்ட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு என்று கூறிக் கொண்டிருப்பார்.
அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும் போது அவ்வானவர், என் இறைவா! (இது) ஆணா அல்லது பெண்ணா?
துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா?
(இதன்) வாழ்வாதாரம்
எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?
என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையணைத்தும்
நிர்ணயிக் கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போது எழுதப்படும்.
இதை அனஸ் பின்மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(18)باب كَيْفَ تُهِلُّ
الْحَائِضُ بِالْحَجِّ وَالْعُمْرَةِ
பாடம் : 18
மாதவிடாய் ஏற்பட்டுவிட்ட பெண் எப்படி ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும்
இஹ்ராம் கட்ட வேண்டும்?
٣١٩حَدَّثَنَا
يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ
شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى
الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ،
وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، فَقَدِمْنَا مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيُحْلِلْ،
وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ بِنَحْرِ
هَدْيِهِ، وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ ". قَالَتْ
فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ، وَلَمْ أُهْلِلْ
إِلاَّ بِعُمْرَةٍ، فَأَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَنْقُضَ
رَأْسِي وَأَمْتَشِطَ، وَأُهِلَّ بِحَجٍّ، وَأَتْرُكَ الْعُمْرَةَ، فَفَعَلْتُ
ذَلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّي، فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي
بَكْرٍ، وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مَكَانَ عُمْرَتِي مِنَ التَّنْعِيمِ.
319 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென்றோம். எங்களில் சிலர்
உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். மற்ற சிலர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டினர். நாங்கள் மக்காவை
அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உங்களில்) எவர் குர்பானிப் பிராணியைத்
தம்முடன் கொண்டுவராமல் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் (உம்ராவின் கிரியைகளை
நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலகிக் கொள்ளலாம். எவர் தம்முடன் குர்பானிப் பிராணியைக்
கொண்டு வந்து இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது குர்பானிப் பிராணியை அறுக்கும் (துல்ஹஜ்
பத்தாம்) நாள் வரை தமது இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம்.
(உங்களில்) எவர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம்
கட்டியிருந்தாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவாக்கட்டும் என்று சொன்னார்கள்.
(இந்நிலையில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த)
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே
இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபி ஸல் அவர்களிடம் முறையிட்ட போது) எனது
தலை முடியை அவிழ்த்து தலை வாரிக் கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக
இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை
நான் செய்துமுடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி
தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக உம்ராச்
செய்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.
(19)باب
إِقْبَالِ الْمَحِيضِ وَإِدْبَارِهِ
பாடம் : 19
மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும்.
وَكُنَّ نِسَاءٌ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ بِالدُّرْجَةِ
فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ فَتَقُولُ لاَ تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ
الْقَصَّةَ الْبَيْضَاءَ. تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنَ الْحَيْضَةِ. وَبَلَغَ
ابْنَةَ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ نِسَاءً يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ
اللَّيْلِ يَنْظُرْنَ إِلَى الطُّهْرِ فَقَالَتْ مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ
هَذَا. وَعَابَتْ عَلَيْهِنَّ.
சில பெண்கள் (தங்கள் மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா என்பதை அறிய) மாதவிடாய் காலத்தில்
அணையாடைக்குள் பயன்படுத்திய பஞ்சை ஒரு சிறிய கூடைக்குள் வைத்து ஆயிஷா (ரலி) அவர்களிடம்
அனுப்பிவைத்தனர். அந்தப் பஞ்சில் மஞ்சள் நிறம் இருந்தது. (இதைக் காணும்) ஆயிஷா (ரலி)
அவர்கள் அந்த பஞ்சில் (நிறமேதும் படாமல்) வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டுவிடாதீர்கள்
என் றார்கள். அதாவது மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள்
என்றார்கள். சில பெண்கள் நடு நிசி நேரத்தில் விளக்குகளைக் கொண்டு வரச் சொல்லி மாதவிடாயிலிருந்து
தூய்மைய டைந்து விட்டோமா என்பதை (சிரமப்பட்டு) பார்க்கிறார்கள் என்ற செய்தி ஸைத் பின்
ஸாபித் (ரலி) அவர்களின் புதல்விக்கு எட்டியது. அப்போது அவர் (நபி ஸல் அவர்களது காலத்தில்
வாழ்ந்த) அந்தப் பெண்கள் இப்படிச் செய்ததில்லை என்று கூறி அச்சிலரைக் கடிந்து கொண்டார்கள்.
٣٢٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ
أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ
تُسْتَحَاضُ فَسَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " ذَلِكِ
عِرْقٌ، وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي
الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي ".
320 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி உயர் இரத்தப்போக்கு (அல் இஸ்திஹாளா) உடையவராக
இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்ட போது, இது இரத்தக் குழா(யிலிருந்து வெளிவருவதே)யாகும்; மாதவிடாயன்று. எனவே மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு!
மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுது
கொள்! என்றார்கள்.
(20)باب
لاَ تَقْضِي الْحَائِضُ الصَّلاَةَ
பாடம் : 20
மாதவிடாய் காலத்தில் விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ
வேண்டியதில்லை.
وَقَالَ جَابِرٌ وَأَبُو سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَدَعُ الصَّلاَةَ.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்:
(மாதவிடாய் ஏற்பட்ட) அந்தப் பெண் தொழுகைகளை
விட்டுவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
٣٢١حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنَا
قَتَادَةُ، قَالَ حَدَّثَتْنِي مُعَاذَةُ، أَنَّ امْرَأَةً، قَالَتْ لِعَائِشَةَ
أَتَجْزِي إِحْدَانَا صَلاَتَهَا إِذَا طَهُرَتْ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ
كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلاَ يَأْمُرُنَا بِهِ.
أَوْ قَالَتْ فَلاَ نَفْعَلُهُ.
321 முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பெண்களாகிய நாங்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமானதற்குப்
பின்புள்ள தொழுகைகளைத் தொழுதால் போதுமா?
(அல்லது மாதவிடாய்க்
காலத்தில் விடுபட்டத் தொழுகைகளையும் தொழ வேண்டுமா?)என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் நீ (காரிஜிய்யா கூட்டத்தாரின் பிறப்பிடமான
கூஃபா நகருக்கு அருகிலுள்ள) ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய்
ஏற்படும். அப்போது விடுபட்டத் தொழுகைகளை தொழுமாறு எங்களை நபி (ஸல்) அவர்கள் பணிக்க
மாட்டார்கள் அல்லது அத்தொழுகைகளை நாங்கள் தொழ மாட்டோம் என்று கூறினார்கள்.
(21)باب النَّوْمِ مَعَ
الْحَائِضِ وَهْىَ فِي ثِيَابِهَا
பாடம் : 21
மாதவிடாய் இரத்தம்பட்ட ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் அவளுடைய
கணவன் உறங்குவது.
٣٢٢حَدَّثَنَا
سَعْدُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي
سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ
قَالَتْ حِضْتُ وَأَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي الْخَمِيلَةِ،
فَانْسَلَلْتُ فَخَرَجْتُ مِنْهَا، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَلَبِسْتُهَا،
فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنُفِسْتِ ".
قُلْتُ نَعَمْ، فَدَعَانِي فَأَدْخَلَنِي مَعَهُ فِي الْخَمِيلَةِ. قَالَتْ
وَحَدَّثَتْنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُقَبِّلُهَا وَهُوَ
صَائِمٌ، وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ
وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ.
322 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப்போர்வைக்குள்
இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது .மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை
எடுப்பதற்காக போர்வைக்குளிருந்து மெல்ல நழுவிச் சென்று அதை அணிந்து கொண்டேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆயினும் அவர்கள் என்னை
(த் தம்மருகில்) அழைத்து அந்தப் போர்வைக்குள் என்னைக் கிடத்திக் கொண் டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றி ருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள். நானும்
நபி (ஸல்) அவர்களும் (ஒருமித்து) ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் மொண்டு) பொருந்துடக்கின்
(கடமையான) குளியலை நிறைவேற்றுவோம்.
(22)باب مَنِ اتَّخَذَ
ثِيَابَ الْحَيْضِ سِوَى ثِيَابِ الطُّهْرِ
பாடம் : 22
சுத்தமாக இருக்கும் போது அணியும் துணி அல்லாமல் மாதவிடாய்க்
காலத்திற்கென பிரத்யோக துணியை ஒருபெண் வைத்துக் கொள்வது.
٣٢٣حَدَّثَنَا
مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي
سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ
بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم مُضْطَجِعَةً فِي خَمِيلَةٍ
حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَقَالَ " أَنُفِسْتِ
". فَقُلْتُ نَعَمْ. فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ.
323 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப்
போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது.
மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக ள நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாத
வாறு போர்வைக்குள்ளிருந்துன மெல்ல நழுவினேன். (அதை எடுத்து அணிந்து கொண்டேன்.) அப்போது
நபி (ஸல்) அவர்கள் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆயினும் அவர்கள் என்னை
(த் தமக்கருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களோடு அந்தப் போர்வைக்குள் படுத்துக்
கொண்டேன்.
(23)باب شُهُودِ
الْحَائِضِ الْعِيدَيْنِ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَيَعْتَزِلْنَ الْمُصَلَّى
பாடம் : 23
மாதவிடாயுள்ள பெண்கள் இரு பெரு நாள் தொழுகைகளிலும் முஸ்லிம்களுடைய
பிரசாரத்திலும் கலந்து கொள்வதும் அப்போது தொழும் இடத்தை விட்டும் அவர்கள் விலகி இருக்க
வேண்டும் என்பதும்.
٣٢٤حَدَّثَنَا
مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ
أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ
فِي الْعِيدَيْنِ، فَقَدِمَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ،
فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا، وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صلى
الله عليه وسلم ثِنْتَىْ عَشَرَةَ، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ. قَالَتْ
كُنَّا نُدَاوِي الْكَلْمَى، وَنَقُومُ عَلَى الْمَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي
النَّبِيَّ صلى الله عليه وسلم أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا
جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ قَالَ " لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ
جِلْبَابِهَا، وَلْتَشْهَدِ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ ".
فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ صلى الله
عليه وسلم قَالَتْ بِأَبِي نَعَمْ ـ وَكَانَتْ لاَ تَذْكُرُهُ إِلاَّ قَالَتْ
بِأَبِي ـ سَمِعْتُهُ يَقُولُ " يَخْرُجُ الْعَوَاتِقُ وَذَوَاتُ
الْخُدُورِ، أَوِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ وَالْحُيَّضُ، وَلْيَشْهَدْنَ
الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى
". قَالَتْ حَفْصَةُ فَقُلْتُ الْحُيَّضُ فَقَالَتْ أَلَيْسَ تَشْهَدُ
عَرَفَةَ وَكَذَا وَكَذَا
324 ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
நாங்கள் இரு பெரு நாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள்
குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப்
குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக
வந்த செய்தியை அறிவித்தார்.
-என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா
-ரலி) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார்.
இதில் என் சகோதரி ஆறுபோர்களில் தம் கணவரோடு இருந்தார்.-
என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:
(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின்
காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில்
ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே
இருப்பது) குற்றமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு
அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும்
கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள்.
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு
கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா
(ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து
செவியுற்றேன்ன என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை
அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.
-நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்-
வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள
பெண்களும் (பெரு நாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின்
காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள
பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு
அத்திய்யா.
(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்)
நான், மாதவிடாயுள்ள பெண்களுமா (பெரு நாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச்
செல்வார்கள்)? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா
(ரலி) அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தலிஃபா,
போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(24)بَابُ إِذَا حَاضَتْ
فِي شَهْرٍ ثَلاَثَ حِيَضٍ وَمَا يُصَدَّقُ النِّسَاءُ فِي الْحَيْضِ وَالْحَمْلِ
فِيمَا يُمْكِنُ مِنَ الْحَيْضِ
பாடம் : 24
ஒரு பெண்ணுக்கு ஒரே மாதத்தில் மூன்றுமுறை மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாய், கர்ப்பம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட
பெண்ணின் கூற்றை ஏற்றுக் கொள்வதும், மாதவிடாய் தொடர்பாக சாத்தியமுள்ள கூற்றே ஏற்கப்படும் என்பதும்.
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ يَحِلُّ لَهُنَّ أَنْ
يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ}. وَيُذْكَرُ عَنْ عَلِيٍّ
وَشُرَيْحٍ إِنِ امْرَأَةٌ جَاءَتْ بِبَيِّنَةٍ مِنْ بِطَانَةِ أَهْلِهَا
مِمَّنْ
يُرْضَى دِينُهُ، أَنَّهَا حَاضَتْ ثَلاَثًا فِي شَهْرٍ. صُدِّقَتْ.
وَقَالَ عَطَاءٌ أَقْرَاؤُهَا مَا كَانَتْ، وَبِهِ قَالَ
إِبْرَاهِيمُ.
وَقَالَ عَطَاءٌ الْحَيْضُ يَوْمٌ إِلَى خَمْسَ عَشْرَةَ.
وَقَالَ مُعْتَمِرٌ عَنْ أَبِيهِ سَأَلْتُ ابْنَ
سِيرِينَ عَنِ الْمَرْأَةِ تَرَى الدَّمَ بَعْدَ قَرْئِهَا بِخَمْسَةِ أَيَّامٍ
قَالَ النِّسَاءُ أَعْلَمُ بِذَلِكَ.
உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
(அப்பெண்கள்) தங்கள் கருவறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது (2:228).
ஒரு பெண் மார்க்கப்பற்றுள்ள தன் நெருங்கிய உறவினர்களில் ஒரு சாட்சியைக் கொண்டு
வந்து (வழக்கமாக தனது குடும்பத்துப் பெண்களுக்கு ஏற்படுவது போன்று) தமக்கும் ஒரே மாதத்தில்
மூன்று முறை மாதவிடாய் ஏற்பட்டதாகக் கூறினால் அவளது கூற்று ஏற்கப்படும் என அலீ (ரலி)
, ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
(விவகாரத்துச் செய்யப்பட்ட) ஒரு பெண்ணின்
இத்தா காலம் (விவாகரத்துக்கு) முன்னாலுள்ள அவளது (மாதவிடாய்கால) வழக்கத்தை ஒட்டியே
கணிக்கப்படும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இப்ராஹீம்
அந்நகஈ (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மாதவிடாய் (குறைந்தது) ஒரு நாளிலிருந்து (அதிகபட்சமாக) பதினைந்து நாட்கள் வரை நீடிக்கலாம்.
சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் மாதவிடாய் நின்று தூய்மையடைந்ததிலிருந்து
ஐந்து நாட்கள் கழித்து ஒரு பெண் இரத்தத்தைக் காண்பது குறித்து (அது மாதவிடாயாகக் கருதப்படுமா? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், இது விஷயமாக பெண்களே நன்கறிவார்கள் என்று பதிலளித்தார்கள்.
இதைத் தம் தந்தை சுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஅதமிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٣٢٥حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ سَمِعْتُ
هِشَامَ بْنَ عُرْوَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ،. أَنَّ
فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، سَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ
إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ " لاَ،
إِنَّ ذَلِكِ عِرْقٌ، وَلَكِنْ دَعِي الصَّلاَةَ قَدْرَ الأَيَّامِ الَّتِي كُنْتِ
تَحِيضِينَ فِيهَا، ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي ".
325 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), நான் உயர் இரத்தப்போக்கு (அல் இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை.
எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை (தொழுகையை விட்டுவிடாதே!) (உனக்கு ஏற்பட்டுள்ள) இது இரத்தக்
குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு
மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்கு தொழுகையை விட்டுவிடு! பிறகு குளித்து விட்டு
(ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுது கொள்! என்றார்கள்.
(25)باب الصُّفْرَةِ
وَالْكُدْرَةِ فِي غَيْرِ أَيَّامِ الْحَيْضِ
பாடம் : 25
மாதவிடாய் அல்லாத நாட்களில் மஞ்சளாகவோ கலங்கலான நிறமாகவோ வெளிப்படும்
இரத்தம்.
٣٢٦حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ
مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا لاَ نَعُدُّ الْكُدْرَةَ
وَالصُّفْرَةَ شَيْئًا.
326 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மாதவிடாய் அல்லாத நாட்களில் வெளிப்படும்) மஞ்சள் நிற நீர்மத்தியும் கலங்கல் நிற நீர்மத்தியும் நாங்கள் (நபிஸல்அவர்களது காலத்தில்) மாதவிடாயாகக் கருதவில்லை.
(26)باب
عِرْقِ الاِسْتِحَاضَةِ
பாடம் : 26
உயர் இரத்தப்போக்கு நோய்.
٣٢٧حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ
أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَنْ عَمْرَةَ، عَنْ
عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ أُمَّ حَبِيبَةَ
اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَسَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ
ذَلِكَ، فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ فَقَالَ " هَذَا عِرْقٌ ".
فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلاَةٍ.
327 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு
ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (அல் இஸ்திஹாளா) ஏற்பட்டது. இது குறித்து அவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கேட்ட போது (அதற்காக குளியல் கடமை இல்லாவிட்டாலும்
நல்லது என்ற அடிப்படையில்) குளித்துக் கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்த நாள நோயாகும். (மாதவிடாயன்று) என்று கூறினார்கள்.
எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக
இருந்தார்.
(27)باب
الْمَرْأَةِ تَحِيضُ بَعْدَ الإِفَاضَةِ
பாடம் : 27
ஹஜ்ஜில்,
தவாஃபுல் இஃபாளா எனும்
தவாஃபை முடித்தபின் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் (அவளுக்கு கடைசித் தவாஃபான
தவாஃபுல் விதாஉ செய்ய அனுமதி உண்டா?)
٣٢٨حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ
عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله
عليه وسلم أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ
اللَّهِ، إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ قَدْ حَاضَتْ. قَالَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم " لَعَلَّهَا تَحْبِسُنَا، أَلَمْ تَكُنْ طَافَتْ
مَعَكُنَّ ". فَقَالُوا بَلَى. قَالَ " فَاخْرُجِي ".
328 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுக்கு மாதவிடாய்
ஏற்பட்டுவிட்டது என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் நம்மை (ஊருக்குச்) செல்லவிடாமல் தடுத்து விடுவார் போலிருக்கிறதே!
என்று கூறிவிட்டு அவர் உங்களுடன் தவாஃப் (அல்இஃபாளா) செய்ய வில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தோர், ஆம் (தவாஃப் செய்தார்) என்று பதிலளித்தார்கள்.
அப்படியானால் புறப்படு! (போகலாம்) என்றார்கள்.
٣٢٩
حَدَّثَنَا مُعَلَّى
بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ
أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا
حَاضَتْ
329 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜில் தவாஃபுல் இஃபாளாவை முடித்த)
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் (மக்காவை விட்டுச்) சென்றுவிடுவதற்கு அவளுக்கு
அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ: " فِي أَوَّلِ
أَمْرِهِ إِنَّهَا لاَ تَنْفِرُ، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: «تَنْفِرُ، إِنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لَهُنَّ»٣٣٠
330 தாவூஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாதவிடாய் ஏற்பட்ட பெண் (கடைசித் தவாஃபான தவாஃபுல் விதா செய்யாமல்) மக்காவை விட்டுச்
செல்லக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள்.
பிறகு அவர்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுக்கு
(மட்டும் கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை செய்யாமலேயே மக்காவை விட்டும் செல்ல) அனுமதி
வழங்கினார்கள் என்று கூறியதைக் கேட்டேன்.
(28)باب إِذَا رَأَتِ الْمُسْتَحَاضَةُ الطُّهْرَ
பாடம் : 28
உயர் இரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு பெண் தமது இரத்தம் மாதவிடாய்க்
கால இரத்தமல்ல என்று அறிந்து கொண்டால் (என்ன செய்யவேண்டும்?)
قَالَ ابْنُ عَبَّاسٍ تَغْتَسِلُ وَتُصَلِّي وَلَوْ
سَاعَةً، وَيَأْتِيهَا زَوْجُهَا إِذَا صَلَّتْ، الصَّلاَةُ أَعْظَمُ.
சிறிது நேரம் அவள் சுத்தமானாலும் குளித்து விட்டு அவள் தொழுகையை நிறை வேற்றவேண்டும்; மிகப் பெரிய விஷயமான தொழுகையையே அவள் நிறைவேற்றலாம் எனும் போது
அவளுடன் கணவன் தாம்பத்திய உறவுகொள்வதில் தவறில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
٣٣١حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُرْوَةَ،
عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا أَقْبَلَتِ
الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ
وَصَلِّي ".
331 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உயர் இரத்தப் போக்கு ஏற்பட்டுவந்த ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ்
எனும் பெண்மணியிடம்) (வழக்கம் போல்) மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு!
மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைக் கழுவிட்டுத் தொழுது கொள்! என்று சொன்னார்கள்.
(29)باب الصَّلاَةِ عَلَى النُّفَسَاءِ وَسُنَّتِهَا
பாடம் : 29
பிரசவ இரத்தப் போக்கின் போது உயிர்நீத்த பெண்ணுக்கு இறுதித்
தொழுகை (ஸலாத்துல் ஜனாஸா) தொழுவதும், அதன் வழிமுறையும்.
٣٣٢حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، قَالَ أَخْبَرَنَا شَبَابَةُ، قَالَ أَخْبَرَنَا
شُعْبَةُ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ
جُنْدُبٍ، أَنَّ امْرَأَةً، مَاتَتْ فِي بَطْنٍ، فَصَلَّى عَلَيْهَا النَّبِيُّ
صلى الله عليه وسلم فَقَامَ وَسَطَهَا.
332 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிரசவ இரத்தப்போக்குடனேயே ஒருபெண் இறந்து விட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள்
ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது நபியவர்கள் மய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக
நின்றார்கள்.
(30)باب
பாடம் : 30
٣٣٣حَدَّثَنَا
الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ
أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ ـ اسْمُهُ الْوَضَّاحُ ـ مِنْ كِتَابِهِ قَالَ
أَخْبَرَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ،
قَالَ سَمِعْتُ خَالَتِي، مَيْمُونَةَ ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم
أَنَّهَا كَانَتْ تَكُونُ حَائِضًا لاَ تُصَلِّي، وَهْىَ مُفْتَرِشَةٌ بِحِذَاءِ
مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُصَلِّي عَلَى خُمْرَتِهِ،
إِذَا سَجَدَ أَصَابَنِي بَعْضُ ثَوْبِهِ.
333 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு நான் தொழாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்
இடத்திற்கு அருகில் படுத்திருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது
(பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட) தொழுகைவிரிப்பில் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள்
சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது அவர்கள் அணிந்திருந்த அடையின் ஒரு பகுதி என் மீது
படும்.
No comments:
Post a Comment