Thursday, August 3, 2017

அத்தியாயம் : 6 மாதவிடாய் ஹதீஸ்கள் 294 முதல் 311 வரை




                                                 அத்தியாயம் : 6

                                                      كتاب الحيض

                                                   மாதவிடாய்


وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {وَيَسْأَلُونَكَ عَنِ المَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي المَحِيضِ} [البقرة: 222]- إِلَى قَوْلِهِ - {وَيُحِبُّ المُتَطَهِّرِينَ} [البقرة: 222]
அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) மாதவிடாய் பற்றியும் உங்களிடம் வினவுகிறார்கள்; கூறுக: அது (ஓர் உபாதை யான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உறவுகொள்ள) அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களை விட்டு மீள்பவர்களை திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (2:222)

(1)باب كَيْفَ كَانَ بَدْءُ الْحَيْضِ
பாடம் : 1

மாதவிடாய் எப்படி ஆரம்பமானது?

وَقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ هَذَا شَىْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ ‏"‏‏.‏ وَقَالَ بَعْضُهُمْ كَانَ أَوَّلُ مَا أُرْسِلَ الْحَيْضُ عَلَى بَنِي إِسْرَائِيلَ، وَحَدِيثُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَكْثَرُ‏.‏

நபி (ஸல்) அவர்கள், இ(ந்த மாதவிடா யான)து, ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய விஷயமாகும் என்று சொன்னார்கள்.
சிலர், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்களிலிருந்தே முதன் முதலில் மாதவிடாய் ஆரம்ப மானது என்று கூறுகின்றனர்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட பொன் மொழி பொதுப்படையானது (ம், அடிப்படை உள்ளதும்) ஆகும்.

(1.1)باب الأَمْرِ بِالنُّفَسَاءِ إِذَا نُفِسْنَ
பாடம் ( 1.1)

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால்


٢٩٤حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ خَرَجْنَا لاَ نَرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي قَالَ ‏"‏ مَا لَكِ أَنُفِسْتِ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ ‏"‏‏.‏ قَالَتْ وَضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ‏.‏
294 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜிற்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணவில்லை. (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப் என்ற இடத்தில் நாங்கள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருக்கவே, உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது (மாதவிடாய்) அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு விதியாக்கிய விஷயமாகும். ஆகவே நீ, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நிறைவேற்று! ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின் போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.

(2)باب غَسْلِ الْحَائِضِ رَأْسَ زَوْجِهَا وَتَرْجِيلِهِ
பாடம் : 2

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும் அவரது தலைமுடியை வாரிவிடுவதும்.



٢٩٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ‏.‏

295 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன்.

٢٩٦حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ عُرْوَةَ، أَنَّهُ سُئِلَ أَتَخْدُمُنِي الْحَائِضُ أَوْ تَدْنُو مِنِّي الْمَرْأَةُ وَهْىَ جُنُبٌ فَقَالَ عُرْوَةُ كُلُّ ذَلِكَ عَلَىَّ هَيِّنٌ، وَكُلُّ ذَلِكَ تَخْدُمُنِي، وَلَيْسَ عَلَى أَحَدٍ فِي ذَلِكَ بَأْسٌ، أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ ـ تَعْنِي ـ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ مُجَاوِرٌ فِي الْمَسْجِدِ، يُدْنِي لَهَا رَأْسَهُ وَهْىَ فِي حُجْرَتِهَا، فَتُرَجِّلُهُ وَهْىَ حَائِضٌ‏.‏

296 ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடம் மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்கு பணிவிடை செய்யலாமா? பெருந்துடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு, (மாதவிடாயிலிருப்பவள் பணிவிடை செய்வது, குளியல் கடைமையானவள் நெருங்குவது ஆகிய) இதுவெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் இயல்பான விஷயம்தான். (மாதவிடாய் அல்லது பெருந்துடக்கு ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்கு பணிவிடை செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலைவாரிவிடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தார்கள். (பள்ளி வாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களுக்கு தலைவாரிவிடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(3)باب قِرَاءَةِ الرَّجُلِ فِي حَجْرِ امْرَأَتِهِ وَهْىَ حَائِضٌ
பாடம் : 3

மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது.

وَكَانَ أَبُو وَائِلٍ يُرْسِلُ خَادِمَهُ وَهْيَ حَائِضٌ إِلَى أَبِي رَزِينٍ، فَتَأْتِيهِ بِالْمُصْحَفِ فَتُمْسِكُهُ بِعِلاَقَتِهِ.


அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் மாதவிடாய் நிலையிலிருக்கும் தம் பணிப் பெண்ணை (தம் முன்னாள் அடிமையான) அபூரஸீன் (மஸ்ஊத்பின் மாலிக் - ரஹ்) அவர்களிடம் அனுப்பிவைத்து, திருக்குர்ஆனை வாங்கி வரச் சொல்வார்கள். அவள் அந்தக் குர்ஆனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம் வருவாள்.

٢٩٧حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، سَمِعَ زُهَيْرًا، عَنْ مَنْصُورٍ ابْنِ صَفِيَّةَ، أَنَّ أُمَّهُ، حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ‏.‏


297 (நபி ஸல் அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

(4)باب مَنْ سَمَّى النِّفَاسَ حَيْضًا
பாடம் : 4

பிரசவத் தீட்டைக் குறிக்கும் நிஃபாஸ் எனும் சொல்லை மாதவிடாய் (-ஹைள்)க்கும் பயன்படுத்துவது.

٢٩٨حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أُمِّ سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ، بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم مُضْطَجِعَةً فِي خَمِيصَةٍ إِذْ حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي قَالَ ‏ "‏ أَنُفِسْتِ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ‏.‏


298 நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன் உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.

(5)باب مُبَاشَرَةِ الْحَائِضِ
பாடம் : 5

மாதவிடாய் ஏற்பட்டுள்ள மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.

٢٩٩حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ كِلاَنَا جُنُبٌ


299 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெருந்துடக்குடனிருந்த நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.

وَكَانَ يَأْمُرُنِي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ»٣٠٠
300 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக் கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்.) அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்.

وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ»٣٠١
301 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசலில்) இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்த போது அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாத விடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவுவேன்.


٣٠٢حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، قَالَ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ ـ هُوَ الشَّيْبَانِيُّ ـ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُبَاشِرَهَا، أَمَرَهَا أَنْ تَتَّزِرَ فِي فَوْرِ حَيْضَتِهَا ثُمَّ يُبَاشِرُهَا‏.‏ قَالَتْ وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ كَمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْلِكُ إِرْبَهُ‏.‏ تَابَعَهُ خَالِدٌ وَجَرِيرٌ عَنِ الشَّيْبَانِيِّ‏.


302 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் போகுமிடமிடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இன்னும் சில அறிவிப்பாளர்களும் இணைகி றார்கள்.

٣٠٣حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ مَيْمُونَةَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يُبَاشِرَ امْرَأَةً مِنْ نِسَائِهِ أَمَرَهَا فَاتَّزَرَتْ وَهْىَ حَائِضٌ‏.‏ وَرَوَاهُ سُفْيَانُ عَنِ الشَّيْبَانِيِّ‏.‏

303 மைமூனா(ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.

(6)باب تَرْكِ الْحَائِضِ الصَّوْمَ
பாடம் : 6

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட்டுவிடுவது.

٣٠٤حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ ـ هُوَ ابْنُ أَسْلَمَ ـ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَضْحًى ـ أَوْ فِطْرٍ ـ إِلَى الْمُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ ‏"‏ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ، فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ ‏"‏‏.‏ فَقُلْنَ وَبِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ الْعَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ ‏"‏‏.‏ قُلْنَ وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ ‏"‏‏.‏ قُلْنَ بَلَى‏.‏ قَالَ ‏"‏ فَذَلِكَ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ ‏"‏‏.‏ قُلْنَ بَلَى‏.‏ قَالَ ‏"‏ فَذَلِكَ مِنْ نُقْصَانِ دِينِهَا ‏"‏‏.


304 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெரு நாள் அல்லது நோன்புப் பெரு நாள் தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)? எனப் பெண்கள் கேட்டதும். நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த்தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன் என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள், மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், ஆம் (பாதியளவுதான்) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்: என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை) என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது தான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும் என்று கூறினார்கள்

(7)باب تَقْضِي الْحَائِضُ الْمَنَاسِكَ كُلَّهَا إِلاَّ الطَّوَافَ بِالْبَيْتِ
பாடம் : 7

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கடமைகள்அனைத்தையும் நிறைவேற்றலாம்.

وَقَالَ إِبْرَاهِيمُ: «لاَ بَأْسَ أَنْ تَقْرَأَ الآيَةَ»، وَلَمْ يَرَ ابْنُ عَبَّاسٍ «بِالقِرَاءَةِ لِلْجُنُبِ بَأْسًا» وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ " وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ: «كُنَّا نُؤْمَرُ أَنْ يَخْرُجَ الحُيَّضُ فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ وَيَدْعُونَ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ، أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ دَعَا بِكِتَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَرَأَ فَإِذَا فِيهِ: " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَ {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ} [آل عمران: 64] " الآيَةَ وَقَالَ عَطَاءٌ: عَنْ جَابِرٍ، حَاضَتْ عَائِشَةُ فَنَسَكَتْ المَنَاسِكَ غَيْرَ الطَّوَافِ بِالْبَيْتِ وَلاَ تُصَلِّي وَقَالَ الحَكَمُ: " إِنِّي لَأَذْبَحُ وَأَنَا جُنُبٌ، وَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَلاَ تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121]

இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் தவறேதுமில்லை என்று கூறியுள்ளார்கள்.

பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருப்பவர் குர்ஆனை ஓதுவதில் எந்தத் தவறுமில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்.

(பெரு நாள் தினத்தன்று) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களை(யும்) (தொழுகைத் திடலுக்கருகில்) அழைத்துச் சென்று ஆண்களைப் போன்று தக்பீர் சொல்லவும் பிராத்திக்கவும் நாங்கள் பணிக்கப்பட்டோம் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமக்கு எழுதியிருந்த கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி மன்னர் ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அதில் : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமத்தின் ... அளவிலா அருளாளன் நகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்குமிடையில் பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள் (3:64) என்று தொடங்கும் (குர்ஆன் வசனங்கள்) எழுதப்பட்டிருந்தது.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின் போது) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்கள்; ஆனால் தொழவில்லை.

இதை அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

 நான் பெருந்துடக்குடையவனாக (குளியல் கடமையான) நிலையிலும் (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆடுமாடுகளை) அறுப்பேன். (ஏனெனில்) வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ், அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் புசிக்க வேண்டாம் (6:121) என்று கூறியுள்ளான்.

٣٠٥حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَذْكُرُ إِلاَّ الْحَجَّ، فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ، فَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي فَقَالَ ‏{‏مَا يُبْكِيكِ‏}‏‏.‏ قُلْتُ لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ الْعَامَ‏.‏ قَالَ ‏{‏لَعَلَّكِ نُفِسْتِ‏}‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ قَالَ ‏ "‏ فَإِنَّ ذَلِكَ شَىْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَافْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي ‏"‏‏.‏


305 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹஜ்(ஜத்துல் வதாஉ) செய்யும் எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப் என்ற இடத்தில் நாங்கள் வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் நான் அழுதுகெண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, ஏன் அழுகிறாய்? என்று கேட் டார்கள். நான், இந்த வருடம் அல்லாஹ்வின் மீதானையாக என்னால் ஹஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன் நபி (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் ஆதமின் பெண்மக்களுக்கு விதியாக்கிவிட்ட ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக் கொள். ஆயினும் தூய்மை யாகும் வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே! என்றார்கள்

(8)باب الاِسْتِحَاضَةِ
பாடம் : 8

உயர் இரத்தப்போக்கு ( அல் இஸ்திஹாளா).

٣٠٦حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلاَةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏"‏‏.‏

306 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), அல்லாஹ்வின் தூதரே! (நான் உயர் இரத்தப்போக்கு அல்-இஸ்திஹாளான ஏற்படும் பெண் ஆவேன்; தொடர்ந்து எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருப்பதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இல்லை; தொழுகையை விட்டுவிடாதே! ஏனெனில்,) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே) யாகும்; மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்து (குளித்து)விட்டுத் தொழுது கொள்! என்று சொன்னார்கள்.

(9)باب غَسْلِ دَمِ الْمَحِيضِ
பாடம் : 9

மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல்.

٣٠٧حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الْحَيْضَةِ، كَيْفَ تَصْنَعُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الْحَيْضَةِ، فَلْتَقْرُصْهُ ثُمَّ لِتَنْضَحْهُ بِمَاءٍ، ثُمَّ لِتُصَلِّي فِيهِ ‏"‏‏.‏

307 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்து விட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம் என்று கூறினார்கள்.

٣٠٨حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا تَحِيضُ، ثُمَّ تَقْتَرِصُ الدَّمَ مِنْ ثَوْبِهَا عِنْدَ طُهْرِهَا فَتَغْسِلُهُ، وَتَنْضَحُ عَلَى سَائِرِهِ، ثُمَّ تُصَلِّي فِيهِ‏.


308 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ஸல் அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவர் தமது ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்ய நினைத்தால் ஆடையிலிருந்து (காய்ந்து விட்ட) இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவுவார். பின்னர் ஆடையின் மற்ற பகுதிகளிலும் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் (மாதவிடாய் குளியலுக்குப் பின்) தொழுது கொள்வார்.

(10)باب الاِعْتِكَافِ لِلْمُسْتَحَاضَةِ
பாடம் : 10

உயர் இரத்தப்போக்கு (அல்-இஸ்திஹாளா) உள்ள பெண் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது.

٣٠٩حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اعْتَكَفَ مَعَهُ بَعْضُ نِسَائِهِ وَهْىَ مُسْتَحَاضَةٌ تَرَى الدَّمَ، فَرُبَّمَا وَضَعَتِ الطَّسْتَ تَحْتَهَا مِنَ الدَّمِ‏.‏ وَزَعَمَ أَنَّ عَائِشَةَ رَأَتْ مَاءَ الْعُصْفُرِ فَقَالَتْ كَأَنَّ هَذَا شَىْءٌ كَانَتْ فُلاَنَةُ تَجِدُهُ‏.‏

309 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவி யரில் ஒருவர் இஃதிகாஃப் தங்கியிருந்தார். அவர் உயர் இரத்தப்போக்கினால் இரத் தத்தைக் காண்பவராயிருந்தார். இந்நிலையில் சில சமயங்களில் இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே கையலம்பும் பாத்திரத்தை வைப்பார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கா-த் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு முறை) குசும்பப்பூவின் (சாய) நீரைப் பார்த்து விட்டு, இ(தன் நிறமான)து இன்னவளுக்கு ஏற்படுகின்ற ஒன்றைப் போன்றுதான் என்று குறிப்பிட்டதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளர்கள்.

٣١٠حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ، فَكَانَتْ تَرَى الدَّمَ وَالصُّفْرَةَ، وَالطَّسْتُ تَحْتَهَا وَهْىَ تُصَلِّي‏.‏


310 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்னாரின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். அப்போது அவர் குசும்பப்பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும் போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.


٣١١حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ بَعْضَ، أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ اعْتَكَفَتْ وَهْىَ مُسْتَحَاضَةٌ‏.‏

311 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவர் உயர் இரத்தப்போக்குடையவராய் இருக்கும் நிலையில் இஃதிகாஃப் இருந்தார்.





No comments:

Post a Comment