Thursday, October 26, 2017

அத்தியாயம் : 10 பாங்கு ஹதீஸ் 636 முதல் 647 வரை



                                                                      அத்தியாயம் : 10

                                                                              كتاب الأذان
    
                                                                               பாங்கு



(21)باب لاَ يَسْعَى إِلَى الصَّلاَةِ، وَلْيَأْتِ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ
பாடம் : 21

தொழுகையில் போய்ச் சேர அவசர அவசர மாகச் செல்ல வேண்டாம். நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் செல்ல வேண்டும்.

وَقَالَ: «مَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا». قَالَهُ أَبُو قَتَادَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

நபி (ஸல்) அவர்கள், (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். தவறிப் போன (ரக்அத்)தைப் (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


٦٣٦حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ، وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ‏"‏‏.‏

636 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(22)باب مَتَى يَقُومُ النَّاسُ إِذَا رَأَوُا الإِمَامَ عِنْدَ الإِقَامَةِ
பாடம் : 22

(தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?) எப்போது எழ வேண்டும்?

٦٣٧حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ كَتَبَ إِلَىَّ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي ‏"‏‏.

637 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் (உடனே எழுந்துவிடாதீர்கள்.) என்னை நீங்கள் பார்க்காத வரை எழ வேண்டாம்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள் என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(23)باب لاَ يَسْعَى إِلَى الصَّلاَةِ مُسْتَعْجِلاً، وَلْيَقُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ
பாடம் : 23

தொழுகைக்கு அவசரப்பட்டு விரைந்து செல்லலாகாது. நிதானமாகவும் கண்ணிய மான முறையிலும் எழுந்து செல்ல வேண்டும்.

٦٣٨حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ ‏"‏‏.‏ تَابَعَهُ عَلِيُّ بْنُ الْمُبَارَكِ‏.‏


638 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் (உடனே எழுந்துவிடாதீர்கள்) என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(24)باب هَلْ يَخْرُجُ مِنَ الْمَسْجِدِ لِعِلَّةٍ
பாடம் : 24

(இகாமத் சொன்ன பிறகு) ஏதாவது காரணத் திற்காகப் பள்ளியிலிருந்து வெளியே செல்லலாமா?

٦٣٩حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ، حَتَّى إِذَا قَامَ فِي مُصَلاَّهُ انْتَظَرْنَا أَنْ يُكَبِّرَ انْصَرَفَ قَالَ ‏ "‏ عَلَى مَكَانِكُمْ ‏"‏‏.‏ فَمَكَثْنَا عَلَى هَيْئَتِنَا حَتَّى خَرَجَ إِلَيْنَا يَنْطُفُ رَأْسُهُ مَاءً وَقَدِ اغْتَسَلَ‏.

639 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப்பட்டு விட்டபின் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தம் தொழுமிடத்தில் (போய்) நின்றதும் அவர்கள் தொழுகைத் தக்பீர் சொல்வார்கள் என நாங்கள் எதிர் பார்த்தோம். ஆனால் (தாம் பெருந்துடக்கிற்காக கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) அப்படியே இருங்கள் என்று கூறிவிட்டுத் திரும்பி (தம் இல்லத்திற்குச்) சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும் வரை நாங்கள் (அவர்களை) எதிர்பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தோம்.

(25)باب إِذَا قَالَ الإِمَامُ مَكَانَكُمْ. حَتَّى رَجَعَ انْتَظَرُوهُ
பாடம் : 25

(இகாமத் சொல்லப்பட்ட பின்) இமாம், நான் திரும்பி வரும்வரை அப்படியே இருங்கள் என்று (மக்களிடம்) சொல்லிவிட்டுச் சென்றால் (அவர் வரும் வரை) அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.

٦٤٠حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَسَوَّى النَّاسُ صُفُوفَهُمْ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَقَدَّمَ وَهْوَ جُنُبٌ ثُمَّ قَالَ ‏ "‏ عَلَى مَكَانِكُمْ ‏"‏‏.‏ فَرَجَعَ فَاغْتَسَلَ ثُمَّ خَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً فَصَلَّى بِهِمْ‏.

640 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடனிருந்தார்கள். (நினைவில்லாமல் நின்று விட்டதால்) அப்படியே இருங்கள்! என்று (மக்களிடம்) கூறிவிட்டு (தம் இல்லத்திற்குத்)திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

(26)باب قَوْلِ الرَّجُلِ مَا صَلَّيْنَا
பாடம் : 26

ஒருவர் நாம் தொழவில்லை என்று சொல்லலாம்.


٦٤١حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ وَاللَّهِ مَا صَلَّيْتُهَا ‏"‏ فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى ـ يَعْنِي الْعَصْرَ ـ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ‏.‏


641 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும் வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியாமற் போய்விட்டது என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்புதுறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும் அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன் (அங்கு) அங்கசுத்தி (உளூ) செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்

(27)باب الإِمَامِ تَعْرِضُ لَهُ الْحَاجَةُ بَعْدَ الإِقَامَةِ
பாடம் : 27

இகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது.

٦٤٢حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ‏.


642 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் இஷாத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையை பிற்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும் வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை.

(28)باب الْكَلاَمِ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ

பாடம் : 28

தொழுகைக்கு இகாமத் சொன்ன பின் பேசுவது.

٦٤٣حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ سَأَلْتُ ثَابِتًا الْبُنَانِيَّ عَنِ الرَّجُلِ، يَتَكَلَّمُ بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ فَحَدَّثَنِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَعَرَضَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلاَةُ‏.‏


643 ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸாபித் அல் புனானீ (ரஹ்) அவர்களிடம், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபின் பேசிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட பின் ஒரு மனிதர்  நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (தொழுவிக்கவிடாமல்) இடைமறித்(துப் பேசிக் கொண்டிருந்)தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்ட பின்னர் (இது நடந்தது).

(29)باب وُجُوبِ صَلاَةِ الْجَمَاعَةِ
பாடம் : 29

கூட்டுத் தொழுகை (ஜமாஅத்தாகத் தொழுவது) கடமையானதாகும்.

وَقَالَ الْحَسَنُ إِنْ مَنَعَتْهُ أُمُّهُ عَنِ الْعِشَاءِ فِي الْجَمَاعَةِ شَفَقَةً لَمْ يُطِعْهَا

ஒரு தாய் (தன் மகன் மீதுள்ள) பாசம் காரணமாக இஷாத் தொழுகையின் ஜமாஅத்திற்கு செல்ல வேண்டாமென அவனைத் தடுத்தால் அதற்கு மகன் கட்டுப்படலாகாது என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

٦٤٤حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلاً فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ ‏"‏‏.‏


644 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் (சுள்ளிகளாக உடைக்கப் படும்) விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு விட்டு, (கூட்டுத்) தொழுகையை நடத்துமாறு பணித்து, அதற்கு அழைப்புக் கொடுக்கப்பட, ஒரு மனிதரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு பின்னர் (தொழுகைக்கு வராத) சில மனிதர்களை நோக்கிச் சென்று அவர்களுடைய வீடுகளை எரித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையிலுள்ள நல்ல இறைச்சித்துண்டுகளோ கிடைத்தாலும் கூட அவர் இஷாத் தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(30)باب فَضْلِ صَلاَةِ الْجَمَاعَةِ
பாடம் : 30

கூட்டுத் தொழுகையின் சிறப்பு.

وَكَانَ الأَسْوَدُ إِذَا فَاتَتْهُ الْجَمَاعَةُ ذَهَبَ إِلَى مَسْجِدٍ آخَرَ.

وَجَاءَ أَنَسٌ إِلَى مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ، فَأَذَّنَ وَأَقَامَ وَصَلَّى جَمَاعَةً.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாசலில்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும் போது வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் சேரச்) சென்றுவிடுவார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளி வாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்து விட்டிருந்தது. ஆகவே பாங்கும், இகாமத்தும் சொல்லி ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

٦٤٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً ‏"‏‏.‏


645 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٦٤٦حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً ‏"‏‏.‏


646 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٦٤٧حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ صَلاَةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا، وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لاَ يُخْرِجُهُ إِلاَّ الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، فَإِذَا صَلَّى لَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَيْهِ مَا دَامَ فِي مُصَلاَّهُ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ‏.‏ وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ ‏"‏‏.‏


647 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைத் தெருவில் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தில் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு (சிறப்பு) கூடுதலாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அந்த அங்க சுத்தியை செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளி வாசலை நோக்கிச் செல்வாரானால் அவர் ஒவ்வோர் எட்டு எடுத்துவைக்கும் போதும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். அதற்காக அவரது பாவமொன்றை அவன் மன்னிக்கிறான். அவர் தொழுதால் வானவர்கள் அவருக்காக அவர் தாம் தொழுத இடத்தில் இருக்கும் வரை (அருள் வேண்டி) பிராத்தித்துக் கொண்டேயிருக்கின்றனர்:

இறைவா! இவர் மீது அருள் புரிவாயாக! இறைவா! இவர் மீது இரக்கங் காட்டுவாயாக என்று கூறுவார்கள்.

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த் துக் காத்துக் கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment