அத்தியாயம் : 10
كتاب الأذان
பாங்கு
(11)باب أَذَانِ الأَعْمَى إِذَا كَانَ لَهُ مَنْ يُخْبِرُهُ
பாடம் : 11
தொழுகையின் நேரத்தை தெரிவிக்கின்ற ஒருவர் (உதவிக்கு) இருந்தால்
பார்வையற்ற வரும் பாங்கு சொல்லலாம்.
٦١٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ
بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
قَالَ " إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى
يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ". ثُمَّ قَالَ وَكَانَ رَجُلاً أَعْمَى
لاَ يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ أَصْبَحْتَ أَصْبَحْتَ.
617 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ரமளானில்) பிலால், (ஃபஜ்ர்
நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு
உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்;
பருகுங்கள் என்று கூறினார்கள்:
இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் சுப்ஹு
நேரமாகி விட்டது; சுப்ஹு நேரமாகிவிட்டது என்று சொல்லப்படும் வரை அவர்கள் (ஃபஜ்ருக்காக)
பாங்கு சொல்ல மாட்டார்கள்.
(12)باب الأَذَانِ بَعْدَ الْفَجْرِ
பாடம் : 12
ஃபஜ்ர் நேரம் வந்த பின் பாங்கு சொல்வது.
٦١٨حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم كَانَ إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ وَبَدَا
الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ.
618 (நபி ஸல் அவர்களின் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பாங்கு சொல்பவர் சுப்ஹு(த் தொழுகை)க்காக பாங்கு சொல்லி முடிந்து, வைகறை நேரம் வந்திருக்க,
(ஃபஜ்ர்) தொழுகை நிலை நிறுத்தப்படுவதற்கு முன்பாக அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
٦١٩حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ،
عَنْ عَائِشَةَ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَيْنِ
خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ.
619 நபி (ஸல்) அவர்களின் துணைவியார்ன ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் சுருக்கமாக
இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
٦٢٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم قَالَ " إِنَّ بِلاَلاً يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا
حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ".
620 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ரமளானில்) பிலால் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்.
எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லாத
வரை (சஹர் உணவு)உண்ணுங்கள்; பருகுங்கள் என அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(13)باب الأَذَانِ قَبْلَ الْفَجْرِ
பாடம் : 13
ஃபஜ்ர் நேரம் வருவதற்கு முன் பாங்கு சொல்வது.
٦٢١حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ
التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَمْنَعَنَّ
أَحَدَكُمْ ـ أَوْ أَحَدًا مِنْكُمْ ـ أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ
يُؤَذِّنُ ـ أَوْ يُنَادِي ـ بِلَيْلٍ، لِيَرْجِعَ قَائِمَكُمْ وَلِيُنَبِّهَ
نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الْفَجْرُ أَوِ الصُّبْحُ ". وَقَالَ
بِأَصَابِعِهِ وَرَفَعَهَا إِلَى فَوْقُ وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ
هَكَذَا. وَقَالَ زُهَيْرٌ بِسَبَّابَتَيْهِ إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى
ثُمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ.
621 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம்.
ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர்
திரும்பி வருவதற்காகத்தான்; உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகத்தான். ஃபஜ்ர்
அல்லது சுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதைக் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் தமது விரல்களை மேல்நோக்கி உயர்த்திக் கொண்டு
பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு இவ்வாறு ஃபஜ்ர் தோன்றும் வரை என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு என்பதற்கு விளக்கமளிக்கையில்,
தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றோடு (சேர்த்து) வைத்துப் பிறகு
அவற்றை(ப் பிரித்து) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் நீட்டி (நீளவாட்டில் தோன்றும்
அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; அகலவாட்டில் தோன்றுவதன்று என்பது
போன்று) சைகை செய்தார்கள்.
٦٢٢حَدَّثَنَا
إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا
عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ،. وَعَنْ نَافِعٍ، عَنِ ابْنِ
عُمَرَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ. ح
٦٢٣وَحَدَّثَنِي
يُوسُفُ بْنُ عِيسَى الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنَا الْفَضْلُ، قَالَ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ
عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنَّ
بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ
مَكْتُومٍ ".
622 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) பிலால் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே,
இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லும் வரை நீங்கள் (சஹர்
உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
623 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) பிலால் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே இப்னு
உம்மி மக்தூம் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லும் வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்;
பருகுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(14)باب كَمْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ وَمَنْ
يَنْتَظِرُ الإِقَامَةَ
பாடம் : 14
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி
இருக்க வேண்டும் என்பதும்,
தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக்
கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
٦٢٤حَدَّثَنَا
إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنِ
ابْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، أَنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ
صَلاَةٌ ـ ثَلاَثًا ـ لِمَنْ شَاءَ ".
624 அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பாங்கு, இகாமத் ஆகிய)
இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு என்று
மூன்று முறை கூறிவிட்டு, விரும்பியவர் (அதைத் தொழுது கொள்ளட்டும்)
என்று கூறினார்கள்.
٦٢٥حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ،
قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الأَنْصَارِيَّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،
قَالَ كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ
صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى
الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ،
وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَىْءٌ. قَالَ عُثْمَانُ بْنُ
جَبَلَةَ وَأَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ لَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلاَّ قَلِيلٌ.
625 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள்
(தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித் தோழர்களில் (முக்கிய) சிலர் பள்ளிவாசலின் தூண்களை
நோக்கி (அதை தடுப்பாக ஆக்கி சுன்னத் தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள்
இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும்
இகாமத்துக்கும் இடையில் (இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்).
ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும்
இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில் என்று இடம் பெற்றுள்ளது.
(15)باب مَنِ انْتَظَرَ الإِقَامَةَ
பாடம் : 15
இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது.
٦٢٦حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالأُولَى مِنْ صَلاَةِ
الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ بَعْدَ
أَنْ يَسْتَبِينَ الْفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى
يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلإِقَامَةِ.
626 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு)
சொல்லி முடித்ததற்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம்
தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்(லி தொழுகை நடத்து)வதற்காக தம்மிடம் முஅத்தின் (தம்மைக்
கூப்பிட) வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.
(16)باب بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ لِمَنْ شَاءَ
பாடம் : 16
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு.
விரும்பியவர் அதைத் தொழுதுகொள்ளலாம்.
٦٢٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ بَيْنَ
كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ـ ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ
".
627 அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள்
ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும்
இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு என்று (இரண்டுமுறை) கூறிவிட்டு, மூன்றாம் முறை விரும்பியவர் (அதைத்) தொழலாம் என்றார்கள்
(17)باب مَنْ قَالَ لِيُؤَذِّنْ فِي السَّفَرِ مُؤَذِّنٌ
وَاحِدٌ
பாடம் 17
பயணத்தில் ஒரேயொருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும்.
٦٢٨حَدَّثَنَا
مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي
قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه
وسلم فِي نَفَرٍ مِنْ قَوْمِي فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ
رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا قَالَ "
ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ
الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ
".
628 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்து கொண்டிருக்கையில்)
நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். நபி
(ஸல்) அவர்கள் இரக்க குணமுடைய வர்களாகவும், நல்ல நண்பராகவும் இருந்தார்கள். (பிறகு) எங்கள்
குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச் செல்ல) ஆசைப்படுவதைக் கண்ட போது நபியவர்கள்,
நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி)
இருங்கள்; அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே) நீங்கள் தொழுங்கள்; தொழுகை நேரம் வந்ததும் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்;
உங்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள்.
(18)باب الأَذَانِ لِلْمُسَافِرِ إِذَا كَانُوا جَمَاعَةً،
وَالإِقَامَةِ، وَكَذَلِكَ بِعَرَفَةَ وَجَمْعٍ
பாடம் : 18
பயணிகள் கூட்டமாகச் செல்லும் போதும் (ஹஜ்ஜின்போது) அரஃபா முஸ்தலிஃபாவில்
இருக்கும் போதும் பாங்கு,
இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும்,
وَقَوْلِ الْمُؤَذِّنِ الصَّلاَةُ فِي الرِّحَالِ. فِي
اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوِ الْمَطِيرَةِ
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான இரவுகளிலும் மழை பெய்யும் நேரங்களிலும்
உங்கள் இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அஸ்ஸலாத் ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்வதும்.
٦٢٩حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي
الْحَسَنِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ كُنَّا مَعَ
النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ
فَقَالَ لَهُ " أَبْرِدْ ". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ
لَهُ " أَبْرِدْ ". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ. فَقَالَ لَهُ
" أَبْرِدْ ". حَتَّى سَاوَى الظِّلُّ التُّلُولَ فَقَالَ النَّبِيُّ
صلى الله عليه وسلم {إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ}
629 அபூதர் (ஜுன்துப் பின் ஜுனாதா) அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். தொழுகை அறிவிப்பாளர்
(பிலால் ரலி அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) பாங்கு சொல்ல முற்பட்ட போது அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள்
(சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர்கள்
பாங்கு சொல்ல முற்பட்டார்கள். அப்போதும் அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். பிறகு (மூன்றாவது முறையாக) அவர்கள் பாங்கு
சொல்ல முற்பட்ட போது அவர்களிடம் (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். (எனவே,
நாங்கள் வெப்பம் தணியும் வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையை பிற்படுத்தினோம்.)
எந்த அளவிற்கென்றால் மேடுகளின் நிழல் அதே அளவிற்குச் சமமாக விழுந்தது. அப்போது நபி
(ஸல்) அவர்கள், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெரு மூச்சின்
காரணமாகவே உண்டாகிறது என்று சொன்னார்கள்
٦٣٠حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ،
عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ أَتَى رَجُلاَنِ
النَّبِيَّ صلى الله عليه وسلم يُرِيدَانِ السَّفَرَ فَقَالَ النَّبِيُّ صلى الله
عليه وسلم " إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا ثُمَّ
لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا ".
630 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்)
அவர்கள், நீங்கள் பயணம் புறப்பட்டுச்
செல்லும் போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக பாங்கு
சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு
தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்! என்று சொன்னார்கள்
٦٣١حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ
حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، أَتَيْنَا
إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ،
فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا
أَهْلَنَا أَوْ قَدِ اشْتَقْنَا سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا
فَأَخْبَرْنَاهُ قَالَ " ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ
وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ ـ وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ
أَحْفَظُهَا ـ وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ
الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ
".
631 மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சம (வயதுடைய) இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது
நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் நல்ல
நண்பராகவும் இருந்தார்கள். (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச் செல்ல)
ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டு வந்த (எங்கள் குடும்பத்)தவர்களைப்
பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். அப்போது
நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்
சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்கு கல்வி கற்றுக்
கொடுங்கள். (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணித்திடுங்கள். என்னை எவ்வாறு தொழக்
கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில்
ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித்
தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள். இன்னும் பலவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அவற்றை நான் மனனமிட்டேன் அல்லது அவை என் நினைவிலில்லை.
٦٣٢حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ
حَدَّثَنِي نَافِعٌ، قَالَ أَذَّنَ ابْنُ عُمَرَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ بِضَجْنَانَ
ثُمَّ قَالَ صَلُّوا فِي رِحَالِكُمْ، فَأَخْبَرَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم كَانَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ، ثُمَّ يَقُولُ عَلَى
إِثْرِهِ، أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ. فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوِ
الْمَطِيرَةِ فِي السَّفَرِ.
632 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) டஜ்னான் எனும் இடத்தில் குளிரான
ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். பிறகு உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்
(ஸல்லூ ஃபீ
ரிஹா-க்கும்) என்று அறிவித்தார்கள். மேலும், பயணத்தின்
போது குளிரான இரவிலோ அல்லது மழை பெய்யும் நேரத்திலோ தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லும்
போது பாங்கின் இறுதியில் உங்கள் இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அலா! ஸல்லூ
ஃபீ ரிஹா-க்கும்) என்று அறிவிக்குமாறும் தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் பணிப்பார்கள் எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்.
٦٣٣حَدَّثَنَا
إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا أَبُو
الْعُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ فَجَاءَهُ بِلاَلٌ فَآذَنَهُ
بِالصَّلاَةِ، ثُمَّ خَرَجَ بِلاَلٌ بِالْعَنَزَةِ حَتَّى رَكَزَهَا بَيْنَ يَدَىْ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ وَأَقَامَ الصَّلاَةَ.
633 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (புற நகர் மக்காவிலுள்ள) அப்தஹ் எனுமிடத்தில்
கண்டேன். (அங்கு இருந்த போது தொழுகை நேரம் வந்தது.) அப்போது பிலால் (ரலி) அவர்கள் நபி
(ஸல்) அவர்களிடம் வந்து தொழுகை (நேரம் வந்து விட்டது) பற்றித் தெரிவித்தார்கள். பிறகு
பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியுடன் வந்து அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுக்கு முன்னால் அப்தஹ் எனும் அந்த இடத்தில் (தடுப்பாக) நட்டு வைத்துவிட்டு
தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.
(19)باب هَلْ يَتَتَبَّعُ الْمُؤَذِّنُ فَاهُ هَا هُنَا
وَهَا هُنَا، وَهَلْ يَلْتَفِتُ فِي الأَذَانِ
பாடம் : 19
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது
வாயை இங்குமங்கு மாக (வலம் இடமாக) திருப்பவேண்டுமா? அவர் பாங்கு சொல்லும்
போது (ஹய்ய அலஸ் ஸலாஹ்,
ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறுகையில் வலப் பக்கமும் இடப் பக்கமும்
தலையைத்) திருப்பவேண்டுமா?
وَيُذْكَرُ عَنْ بِلاَلٍ أَنَّهُ جَعَلَ إِصْبَعَيْهِ
فِي أُذُنَيْهِ. وَكَانَ ابْنُ عُمَرَ لاَ يَجْعَلُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ.
وَقَالَ إِبْرَاهِيمُ لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى
غَيْرِ وُضُوءٍ.
وَقَالَ عَطَاءٌ الْوُضُوءُ حَقٌّ وَسُنَّةٌ.
وَقَالَتْ عَائِشَةُ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ.
பாங்கு சொல்லும் போது பிலால் (ரலி) அவர்கள் தம் (சுட்டு) விரல்களின் நுனிகளை காதுக்குள்
வைத்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை பாங்கு சொல்லும் போது தம்மிரு (சுட்டு)விரல் நுனிகளை
காதுகளில் வைக்க மாட்டார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள்,
அங்கசுத்தி (உளூ) இல்லாமல் பாங்கு சொல்வதில்
தவறில்லை எனக் கூறினார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள்,
(பாங்கு சொல்வதற்காக)
அங்கசுத்தி (உளூ) செய்வது (மார்க்கத் தில்) உள்ளது தான் ; நபிவழியே என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் (உளூவுடனும் உளூ இல்லாமலும்) அல்லாஹ்வை நினைவு
கூர்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
٦٣٤حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي
جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى بِلاَلاً يُؤَذِّنُ فَجَعَلْتُ
أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا بِالأَذَانِ.
634 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது (இரு திக்கிலுள்ள மக்களுக்கும் கேட்பதற்காக)
தம் வாயை இங்குமங்கும் (வலம் இடமாகத்) திருப்பிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
(20)باب قَوْلِ الرَّجُلِ فَاتَتْنَا الصَّلاَةُ
பாடம் : 20
எங்களுக்குத் தொழுகை தவறிவிட்டது என்று கூறலாமா?
وَكَرِهَ ابْنُ سِيرِينَ أَنْ يَقُولَ فَاتَتْنَا
الصَّلاَةُ وَلَكِنْ لِيَقُلْ لَمْ نُدْرِكْ. وَقَوْلُ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَصَحُّ.
இவ்வாறு கூறுவதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் வெறுப்பிற்குரியதாகக் கருதினார்கள்.
மாறாக அவர், (தொழுகையை) நாங்கள் அடைந்துகொள்ளவில்லை
என்று கூறலாம் என்றார்கள்.
(பின்வரும் ஹதீஸில் தவறிப்போனதை என்று
நபி ளஸல்ன அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே,
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களுடைய
கருத்தைவிட) நபி (ஸல்) அவர்களின் சொல்லே சரியானதாகும்.
٦٣٥حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ
النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ فَلَمَّا صَلَّى
قَالَ " مَا شَأْنُكُمْ ". قَالُوا اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاَةِ.
قَالَ " فَلاَ تَفْعَلُوا، إِذَا أَتَيْتُمُ الصَّلاَةَ فَعَلَيْكُمْ
بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا
".
635 அபூகத்தாதா அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர்
(தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள்.
தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)?
என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில்
வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு )ஏற்பட்டது) என்று பதிலளித்தனர்.
அதற்கு
நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப்
பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன
(ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment