அத்தியாயம் : 10
كتاب الأذان
பாங்கு
(61)باب تَخْفِيفِ الإِمَامِ فِي الْقِيَامِ وَإِتْمَامِ
الرُّكُوعِ وَالسُّجُودِ
பாடம்
: 61
இமாம் தொழுகையின்
நிலையில் சிறிது நேரமே நிற்பதும் (அதே சமயம்) குனிவு, சிரவணக்கம் (ருகூஉ, சஜ்தா) ஆகியவற்றை பூரணமாக
நிறைவேற்றுவதும்.
٧٠٢حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، قَالَ سَمِعْتُ قَيْسًا، قَالَ أَخْبَرَنِي أَبُو مَسْعُودٍ، أَنَّ
رَجُلاً، قَالَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ
الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا. فَمَا رَأَيْتُ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ
ثُمَّ قَالَ " إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى
بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا
الْحَاجَةِ ".
702 அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி ஸல் அவர்களிடம்
வந்து), அல்லாஹ்வின் மீதாணையாக, அல்லாஹ் வின் தூதரே! இன்னார் தொழுகையை
எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு செல்லாமல் நான்
தாமதித்துவிடுகிறேன் (ஜமாஅத்திற்கு செல்வ தில்லை.) என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் அன்றைய (தினத்தில் ஆற்றிய) உரையின் போது கோபப்பட்டதை விடக் கடுமை யாகக்
கோபப்பட்டு நான் ஒரு போதும் கண்ட தில்லை. பிறகு அவர்கள், (மக்களே!) உங்களில் வெறுப்பூட்டுபவர்கள்
சிலரும் உள்ளனர். ஆகவே, உங்களில் எவர் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமா(கத் தொழுவி)கட்டும்.
ஏனெனில் (பின் பற்றித் தொழும்) மக்களில் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று
சொன்னார்கள்.
(62)باب إِذَا صَلَّى لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ
பாடம்
: 62
தனித்துத்
தொழுபவர் விரும்பிய அளவுக்குத் தொழுகையை நீட்டிக் கொள்ளலாம்.
٧٠٣حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ،
عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم قَالَ " إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ
مِنْهُمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ
لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ ".
703 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்குத்
தொழுகை நடத்தும் போது சுருக்கமா(கத் தொழுவி)க் கட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்களும், நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர்.
உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும் போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(63)باب مَنْ شَكَا إِمَامَهُ إِذَا طَوَّلَ
பாடம்
: 63
நீண்ட நேரம்
தொழுவிக்கும் தம் இமாமைப் பற்றி ஒருவர் (தலைவரிடம்) முறையிடுவது.
وَقَالَ أَبُو أُسَيْدٍ: «طَوَّلْتَ بِنَا يَا بُنَيَّ»
தொழுகையை நீட்டித் தொழுவித்த
தம் புதல்வர் முன்திர் என்பவரிடம்) அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள், அருமை மகனே! எங்களுக்கு நீண்ட நேரம்
தொழுவித்துவிட்டீரே! என்று (கடிந்து) கூறினார்கள்.
٧٠٤حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي
خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ
رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَتَأَخَّرُ عَنِ الصَّلاَةِ فِي الْفَجْرِ
مِمَّا يُطِيلُ بِنَا فُلاَنٌ فِيهَا. فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم مَا رَأَيْتُهُ غَضِبَ فِي مَوْضِعٍ كَانَ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ
ثُمَّ قَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَمَنْ
أَمَّ النَّاسَ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ خَلْفَهُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا
الْحَاجَةِ ".
704 அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இன்னார் தொழுகையை
எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் ஃபஜ்ர் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்லாமல்
நான் தாமதித்துவிடுகிறேன் என்று (முறையிட்டுக்) கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அன்றைக்கு கோபப்பட்டதைவிடக் கடுமையாக வேறு எந்த இடத்திலும் கோபத்துடனிருக்க
நான் கண்டதில்லை பிறகு அவர்கள், மக்களே! உங்களில் வெறுப்பூட் டும் சிலரும் உள்ளனர். ஆகவே உங்களில் எவர் மக்களுக்குத்
தலைமை தாங்கித் தொழுகை நடத்துகிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில் அவருக்குப்
பின்னால் பலவீனர்களும், முதியவர்களும், அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று கூறினார்கள்
٧٠٥حَدَّثَنَا
آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ
بْنُ دِثَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ
أَقْبَلَ رَجُلٌ بِنَاضِحَيْنِ وَقَدْ جَنَحَ اللَّيْلُ، فَوَافَقَ مُعَاذًا
يُصَلِّي، فَتَرَكَ نَاضِحَهُ وَأَقْبَلَ إِلَى مُعَاذٍ، فَقَرَأَ بِسُورَةِ
الْبَقَرَةِ أَوِ النِّسَاءِ، فَانْطَلَقَ الرَّجُلُ، وَبَلَغَهُ أَنَّ مُعَاذًا
نَالَ مِنْهُ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَشَكَا إِلَيْهِ مُعَاذًا،
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ـ
أَوْ فَاتِنٌ ثَلاَثَ مِرَارٍ ـ فَلَوْلاَ صَلَّيْتَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ،
وَالشَّمْسِ وَضُحَاهَا، وَاللَّيْلِ إِذَا يَغْشَى، فَإِنَّهُ يُصَلِّي وَرَاءَكَ
الْكَبِيرُ وَالضَّعِيفُ وَذُو الْحَاجَةِ ". أَحْسِبُ هَذَا فِي
الْحَدِيثِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَتَابَعَهُ سَعِيدُ بْنُ مَسْرُوقٍ
وَمِسْعَرٌ وَالشَّيْبَانِيُّ. قَالَ عَمْرٌو وَعُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ
وَأَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَرَأَ مُعَاذٌ فِي الْعِشَاءِ بِالْبَقَرَةِ.
وَتَابَعَهُ الأَعْمَشُ عَنْ مُحَارِبٍ.
705 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இரு நீரிறைக்கும்
ஒட்டகங்களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்த போது முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு
இஷாத் தொழுகை) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தமது ஒட்டகத்தைவிட்டுவிட்டு முஆத்
(ரலி) அவர்களை நோக்கி வந்(து கூட்டுத் தொழுகை யில் சேர்ந்)தார். அப்போது முஆத் (ரலி)
அவர்கள் (நீண்ட அத்தியாயங்களான) அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை அல்லது அந்நிஸா
(4ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே
அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச் ) சென்றுவிட்டார். இது பற்றி முஆத் (ரலி) அவர்கள்
தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரிய வந்த போது நபி (ஸல்) அவர்களிடம்
வந்து முஆத் (ரலி) அவர்களைப் பற்றி அவர் நபியவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி
(ஸல்) அவர்கள் (முஆத் ரலி அவர்களை வரவழைத்து) முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்? என்று (மூன்று முறை) கேட்டார்கள். சப்பிஹிஸ்ம
ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்ஸ வளுஹாஹா (91), வல்லை- இஃதா யஃக்ஷா (92) ஆகிய (ஓரளவு சிறிய) அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக்
கூடாதா? ஏனெனில் உமக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் தொழுகின்றனர் என்றும்
சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(ஏனெனில் உமக்குப் பின்னால்...எனத் தொடங்கும்) கடைசி வாக்கியம் நபி (ஸல்) அவர்களின்
சொல் (அறிவிப்பாளரின் உரை அல்ல என்றே நான் கருதுகிறேன்
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றோர் அறிவிப்பில், முஆத் (ரலி) அவர்கள் அந்த இஷாத் தொழுகையில்
அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என்று (மட்டும்) இடம் பெற்றுள்ளது.
(64)باب الإِيجَازِ فِي الصَّلاَةِ وَإِكْمَالِهَا
பாடம்
: 64
தொழுகையைச்
சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவிப்பது.
٧٠٦حَدَّثَنَا
أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ
الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُوجِزُ
الصَّلاَةَ وَيُكْمِلُهَا.
706 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச்
சுருக்க மாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரண மாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள்.
(65)باب مَنْ أَخَفَّ الصَّلاَةَ عِنْدَ بُكَاءِ الصَّبِيِّ
பாடம்
: 65
(தொழுகையில் ஈடுபட்டுக்
கொண்டி ருப்போரின்) குழந்தை அழுவதைக் கேட்டு (தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டிருப்பவர்)
தொழுகையைச் சுருக்கமாகத் தொழுது முடிப்பது.
٧٠٧حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا
الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي
قَتَادَةَ، عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَ " إِنِّي لأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا،
فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ
أَشُقَّ عَلَى أُمِّهِ ". تَابَعَهُ بِشْرُ بْنُ بَكْرٍ وَابْنُ
الْمُبَارَكِ وَبَقِيَّةُ عَنِ الأَوْزَاعِيِّ.
707 அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
நீண்ட நேரம் தொழுவிக்கும்.
எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்)
குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக
நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
இதை அபூகத்தாதா அல்ஹர்ஸ்
பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٧٠٨حَدَّثَنَا
خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ
حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ
مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلاَةً وَلاَ أَتَمَّ مِنَ
النَّبِيِّ صلى الله عليه وسلم، وَإِنْ كَانَ لَيَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ
فَيُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَنَ أُمُّهُ.
708 அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களைவிட
மிகச் சுருக்கமாகவும் (அதே சமயம் எதுவும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிக்கக் கூடிய
வேறு எந்த இமாமுக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை
அழுவதை அவர்கள் கேட்க நேர்ந்தால் அக்குழந்தையின் தாயாருக்கு சஞ்சலம் ஏற்பட்டுவிடுமோ
என்ற அச்சத்தால் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.
٧٠٩حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ
حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ،
حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنِّي لأَدْخُلُ
فِي الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ إِطَالَتَهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ،
فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ
بُكَائِهِ ".
709 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீண்ட நேரம் தொழுவிக்கும்
எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை
அழுவதை நான் செவியேற்பேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கலங்குவதை
நான் நன்கு அறிந்திருப்பதால் என் தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
٧١٠حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ،
عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَ " إِنِّي لأَدْخُلُ فِي الصَّلاَةِ فَأُرِيدُ إِطَالَتَهَا،
فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ
وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ ". وَقَالَ مُوسَى حَدَّثَنَا أَبَانُ،
حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
مِثْلَهُ.
710 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீண்ட நேரம் தொழுவிக்கும்
எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை
அழுவதைச் செவியேற்பேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கண் கலங்குவதை
நான் நன்கு அறிந்திருப்பதால் நான் (என் தொழுகையை) சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர்
வழியாகவும் வந்துள்ளது.
(66)باب إِذَا صَلَّى ثُمَّ أَمَّ قَوْمًا
பாடம்
: 66
(இமாமுக்குப் பின்னால்)
தொழுதவர், பிறகு (அதே தொழுகையை
அவரே இமாமாக நின்று) மற்றவர்களுக்குத் தொழுவிப்பது.
٧١١حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ
زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ
مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَأْتِي قَوْمَهُ
فَيُصَلِّي بِهِمْ.
711 ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் (பின் ஜபல் ரலி)
அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். பிறகு தம் சமுதாயத்தாரிடம் சென்று (அதேத்
தொழுகையை) அவர்களுக்கு தலைமைத் தாங்கித் தொழுவிப்பார்கள்.
(67)باب مَنْ أَسْمَعَ النَّاسَ تَكْبِيرَ الإِمَامِ
பாடம்
: 67
இமாம் தக்பீர்
சொல்வதை மக்களுக்குக் கேட்கும் விதமாக ஒருவர் (உரத்த குரலில்) கூறுவது.
٧١٢حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ حَدَّثَنَا
الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها
ـ قَالَتْ لَمَّا مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَضَهُ الَّذِي مَاتَ
فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ " مُرُوا أَبَا
بَكْرٍ فَلْيُصَلِّ ". قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِنْ
يَقُمْ مَقَامَكَ يَبْكِي فَلاَ يَقْدِرُ عَلَى الْقِرَاءَةِ. قَالَ "
مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". فَقُلْتُ مِثْلَهُ فَقَالَ فِي
الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ " إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا
أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه
وسلم يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ
بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ،
فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ
وَقَعَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ
النَّاسَ التَّكْبِيرَ. تَابَعَهُ مُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.
712 ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எந்த
நோயில் இறந்து போய்விட்டார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை
பற்றி அறிவிப்பதற்காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்)
தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் (அதிகமாகத்
துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவார்கள்.
அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்)
தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே
மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய)
நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம்.
அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே
அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் உடல்நலம் சற்றுத்
தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி)
புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில்
பதித்து கோடிட்டு(க் கொண்டு அவர்கள் புறப்ப)ட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க
முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று
(கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள்
அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக
(உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்
(68)باب الرَّجُلُ يَأْتَمُّ بِالإِمَامِ وَيَأْتَمُّ
النَّاسُ بِالْمَأْمُومِ
பாடம்
: 68
இமாமைப்
பின் பற்றி ஒருவர் தொழ, அவரைப் பின்பற்றி மக்கள்
தொழுவது.
وَيُذْكَرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «ائْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ»
நபி (ஸல்) அவர்கள், (கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில்
இருந்தவர்களிடம்) நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள்
உங்களைப் பின்பற்றட்டும் என்று சொன்னதாக அறிவிக்கப்படுகிறது.
٧١٣حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ،
عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ثَقُلَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ
فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ ".
فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ
مَتَى مَا يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ.
فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ ". فَقُلْتُ لِحَفْصَةَ
قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ
لاَ يُسْمِعِ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ. قَالَ " إِنَّكُنَّ
لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ
". فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم فِي نَفْسِهِ خِفَّةً، فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلاَهُ
يَخُطَّانِ فِي الأَرْضِ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ، فَلَمَّا سَمِعَ أَبُو بَكْرٍ
حِسَّهُ ذَهَبَ أَبُو بَكْرٍ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جَلَسَ
عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا، وَكَانَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي قَاعِدًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ
بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ مُقْتَدُونَ بِصَلاَةِ
أَبِي بَكْرٍ رضى الله عنه.
713 ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் நோய் அதிகரித்துவிட்ட போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி
அறிவிக்க வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு தொழுவிக்கச்
சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற)
இளகிய மனம் உடைய மனிதராவார்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுவதால்)
அவர் களால் மக்களுக்குக் கேட்கும்விதமாக (குர்ஆனை) ஓத முடியாது. உமர் (ரலி) அவர்களிடம்
நீங்கள் தொழுவிக்கச் சொல்லலாமே! என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில்
மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் போசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம்
மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை
நடத்திக் கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உடல்நலம் சற்றுத் தேறக்
கண்டார்கள். எனவே, இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி, தம்மிரு கால்கள் தரையில் பதித்து (அவற்றை சரிவர ஊன்ற முடியாமல்) கோடிட்டபடி வந்து
பள்ளிக்குள் நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள்
பின்வாங்கப் போனார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை
நோக்கி (அங்கேயே நில்லுங்கள் என) சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் வந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றபடி தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்தபடி
தொழுது கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழ, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித்
தொழுதனர்.
(69)باب هَلْ يَأْخُذُ الإِمَامُ إِذَا شَكَّ بِقَوْلِ
النَّاسِ
பாடம்
: 69
இமாமுக்கு
(தம் தொழுகை பற்றி) சந்தேகம் ஏற்பட்டால் (பின்பற்றித் தொழுத) மக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளலாமா?
٧١٤حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَيُّوبَ بْنِ
أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنَ
اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقَصُرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ
يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "
أَصَدَقَ ذُو الْيَدَيْنِ ". فَقَالَ النَّاسُ نَعَمْ. فَقَامَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ،
ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ.
714 அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையொன்றை) இரண்டு ரக்அத்களில் முடித்துவிட்டார்கள். அப்போது
அவர்களிடம் துல்யதைன் என்பவர், தொழுகை (யின் ரக்அத்) சுருக்கப்ட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், துல்யதைன் சொல்வது சரிதானா? என்று (மக்களிடம்) கேட்க, மக்கள் ஆம் என்று பதிலளித்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (முன்னேசென்று விடுபட்ட)
இன்னும் இரண்டு ரக்அத்களை தொழு(வித்)துவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி
(வழக்கமாகத்) தாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்வது போன்று அல்லது (அதைவிட) நீண்ட நேரம்
(மறதிக்குரிய) சிர வணக்கம் செய்தார்கள்
٧١٥حَدَّثَنَا
أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ،
عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله
عليه وسلم الظُّهْرَ رَكْعَتَيْنِ، فَقِيلَ صَلَّيْتَ رَكْعَتَيْنِ. فَصَلَّى
رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ.
715 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர்
தொழுகையை இரண்டு ரக்அத் தொழுவித்தார்கள். அப்போது (அவர்களிடம்), நீங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழு(வித்)தீர்கள்
என்று சொல்லப்பட்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (இன்னும்) இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)துவிட்டு
பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்னர் (மறதிக்குரிய) இரு சிரவணக்கங்கள் (சஜ்தா) செய்தார்கள்.
(70)باب إِذَا بَكَى الإِمَامُ فِي الصَّلاَةِ
பாடம்
: 70
தொழுகையில்
இமாம் அழுதால்... (தொழுகை பாழாகிவிடுமா?)
وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ سَمِعْتُ نَشِيجَ
عُمَرَ وَأَنَا فِي آخِرِ الصُّفُوفِ يَقْرَأُ: {إِنَّمَا أَشْكُو بَثِّي
وَحُزْنِي إِلَى اللَّهِ}.
அப்துல்லாஹ் பின் ஷத்தாத்
(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையின் கடைசி வரிசையில்
நின்று கொண்டிருந்த நான், என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின் றேன் எனும் (12:86ஆவது) வசனத்தை (தொழுகை யில்) ஓதியபடி
உமர் (ரலி) அவர்கள் தேம்பியழு வதை செவியுற்றேன்.
٧١٦حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ،
عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم قَالَ فِي مَرَضِهِ " مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي
بِالنَّاسِ ". قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ
فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ
فَلْيُصَلِّ. فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ
". قَالَتْ عَائِشَةُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا
قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ
فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " مَهْ، إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا
أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ ". قَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا
كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا.
716 இறைநம்பிக்கையாளர்களின்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயிலிருந்த போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச்
சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து)
அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்யமுடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள்! அவர் மக்களுக்குத்
தொழுவிக்கட்டும் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச்
சொல்லுங்கள் என்று (மக்களிடம்) கூறினார்கள். நான் (உமர் ளரலின அவர்களின் புதல்வியாரான)
ஹஃப்ஸாவிடம், அபூபக்ர் (ரலி) அவர்கள்
தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை
ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே உமர் (ரலி) அவர்களைப் பணியுங்கள் அவர் மக்களுக்கு
தொழுகை நடத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸாவும்
செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிறுத்து! (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபின்
(அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர்
அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா
என்னிடம், உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை
என்று கூறினார்.
No comments:
Post a Comment